– தன்னம்பிக்கைத் தொடர் நிகழ்ச்சி 

 thannambikkai self-confidence erumbu01

             “2009 இல் இலக்கு என்னும் பல்கலைப் பயிலரங்கம் நிறுவி ஓவியம், கையெழுத்து எனக் குழந்தைகளுக்கான வழக்கமான பயிற்சிகளுடன் நினைவாற்றல், தன்னம்பிக்கை ஆளுமைத் திறன்,  குமுகாயச் சிந்தனை ஆகிய பிரிவுகளிலும் கோடைக்கால முகாம்களை நடத்தினோம், தற்போது இதன் விரிவாக்கமாக வறுமை, இயலாமை, வழிகாட்டுதல் இல்லாமை உள்ளிட்ட பல்வேறு சிக்கல்களால் தடம் மாறும் இளைஞர்களுக்காக மூளையே மூலதனம்என்னும் பெயரில் ஒவ்வொரு மாதமும் வெவ்வேறு தலைப்புகளில் அறிவுசாரர் பெருமக்களின் எழுச்சியூட்டும் தன்னம்பிக்கை உரைவீச்சுகளுக்கு ஏற்பாடு செய்துள்ளோம். 

            ‘இலக்குஅமைப்பின் தலைவராகச் சிபி, செயலராக யாழினி, ஆற்றுநராக பத்ரி நாராயணன், நெறியாளர்களாகக் கவிஞர் மலர்மகன் – இலக்கியவீதி இனியவன், இயக்குநராக நானும் பொறுப்பேற்றுள்ளோம்.

      இசை, ஓவியம்,  சிற்பம்,  விளையாட்டென பல்வேறு துறைகள் உள்ளன. இவற்றில் அருவினை படைத்தும் குடத்திலிட்ட விளக்காகவே உள்ள இளைஞர்களைப் பாராட்டுவதே எங்கள் இலக்கு! ஒவ்வொரு மாதமும் சாதனை படைக்கும் இளைஞர் ஒருவரைத் தேர்ந்தெடுத்து அறிவுநிதிஎன்னும் விருதை வழங்கிப் பெருமைப்படுத்த உள்ளோம் . இந்த விருது மேலும் பல இளைஞர்களை அருவினை(சாதனை) படைக்கத் தூண்டும் என்று நம்புகிறோம் .

               “வெற்றியை எட்டும் நோக்கமிருந்தால் ஒற்றைச் சிறகிலும் பறக்கலாம்என்னும் கவிஞாயிறு தாராபாரதியின் வரிகளுக்கேற்ப 2014 சனவரி 27அன்று சென்னை மயிலாப்பூர், பாரதிய வித்யா பவன் சிற்றரங்கத்தில் முதல் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. நம்பிக்கைச் சிறகுகள்என்னும் தலைப்பில் வெ இறையன்பு உரையாற்ற உள்ளார். அன்றைய நாள்அறிவுநிதிவிருதைக் கவனகக்கலையில் சிறந்து விளங்கும் கலை.செழியன் பெறுகிறார்.

                2014 பிப்ரவரி முதல் திசம்பர் வரை விதியை விரட்டுவோம்‘ , ‘வழி மாறா வாலிபம்‘, ‘மரணத் தரகர்கள்‘ , ‘தேசத்தின் தூசு துடைப்போம்‘ , ‘பூமியைத் திறக்கும் பொன் சாவி‘ , ‘முயற்சியே மூல மந்திரம்‘, ‘கனவு மெய்ப்படும்‘, ‘எதிரே நம் ஏணி‘ , ‘இளைமையிலேயே தலைமைப் பண்பு‘, ‘நமக்கென்று ஒரு நாற்காலி‘, ‘சிகரம்-நம் சிம்மாசனம்என 11 தலைப்புகளில் புகழாளர்களின் உரைவீச்சுகள் நடைபெற உள்ளன!என்கிறார் வாசுகி .

   ‘அறிவுநிதிவிருதைப் பெற விரும்பும் 18-25 அகவை இளைஞர்கள் தன் விவரக் குறிப்புடன் சாதனைகளையும் பட்டியலிட்டு                                                        

                       ‘இலக்கு’, 52/3 சௌந்தர்யா குடியிருப்பு, ,

                        அண்ணாநகர் மேற்கு விரிவு, சென்னை-600101

                        பேசி – 9841184345.

என்னும் முகவரிக்கு அனுப்பலாம்.