மெய்வல்லுநர் போட்டி 2014
மாலதி தமிழ்க் கலைக்கூடத்தினால் ஆண்டுதோறும் நடாத்தப்பட்டுவரும் சிசியாலாந்து (Sjælland) மாநிலத்திற்கான மெய்வல்லுநர் போட்டி ஆனி 1, 2045 / 15-06-2014 அன்று நடைபெற்றது.இப்போட்டி ஆல்பக்கு (Holbæk) நகரில் நடைபெற்றது. இப்போட்டியில் சிசியாலாந்து (Sjælland) மாநிலத்தைச்சேர்ந்த மாணவர்கள் பங்குபெற்றனர். இப்போட்டிகள் தென்மார்க்கு கொடியேற்றல், தமிழீழத் தேசியக் கொடியேற்றல், அகவணக்கம், ஒளிச்சுடரேற்றல், மாணவர்களின்அணிவகுப்பு போன்றவற்றுடன் தொடங்கின. மாணவர்கள் ஓட்டம், தடைஓட்டம், பழம்பொறுக்கல், படம்பொருத்துதல், சமநிலைஓட்டம், கயிறடித்தல், குண்டெறிதல், நீளம் பாய்தல் போன்ற விளையாட்டுகளை மிகவும் ஆர்வத்துடன்விளையாடினர். இவ்விளையாட்டுகளை விளையாடிய அனைத்து வீரர்களுக்கும்வீராங்கனைகளுக்கும் வெற்றிப்பதக்கங்கள் வழங்கப்பட்டன. வெற்றி பெற்றவீரர்களும் வீராங்கனைகளும் வெற்றிக்கிண்ணங்கள் வழங்கப்பட்டுமதிப்பளிக்கப்பட்டனர். தமிழீழத் தேசியக்கொடி இறக்கம், டென்மார்க்கொடியிறக்கம் ஆகியவற்றுடன் மெய்வல்லுநர் போட்டி இனிதே நிறைவடைந்தது.
(படங்களைச் சொடுக்கிப் பாருங்கள்)
Leave a Reply