வந்தவாசி வாசகர் வட்ட முப்பெரு விழா
தேசிய நூலக வார விழாப் போட்டிகளில் வென்ற
பள்ளி மாணவ – மாணவிகளுக்குப் பரிசளிப்பு விழா .
வந்தவாசி அரசுக் கிளை நூலகத்தின் நூலக வாசகர் வட்டம், எசு.ஆர்.எம் இன்போடெக்கு கணிணி நிறுவனம், சிரீகிருட்டிணா பயிற்சி மையம், இணைந்து 48-ஆவது தேசிய நூலக வார முப்பெரும் விழாவினை நடத்தின. இதனை முன்னிட்டுப் பள்ளி மாணவ – மாணவிகளுக்கு ஓவியப் போட்டி, கட்டுரைப் போட்டி, கவிதைப் போட்டி ஆகியவை வந்தவாசி அரசு பெண்கள் மேனிலைப் பள்ளி வளாகத்தில் கார்த்திகை 04, 2046 / நவ. 21, 2015 அன்று தொடங்கியது.
இவ்விழாவிற்கு நூலக வாசகர் வட்டத் தலைவர் கவிஞர் மு.முருகேசு தலைமையேற்றார். மூன்றாம் நிலை நூலகர் பூ.சண்முகம் அனைவரையும் வரவேற்றார். வந்தை வட்டக் கோட்டைத் தமிழ்ச் சங்கத் தலைவர் எ.மு.உசேன், எசுஆர்எம் இன்போடெக்கு கணிணி நிறுவன முதல்வர் எ.தேவா, சிரீகிருட்டிணா பயிற்சி மைய முதல்வர் பா.சீனிவாசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
வந்தவாசியைச் சுற்றியுள்ள 6 முதல் 12-ஆம் வகுப்புவரையுள்ள பள்ளி மாணவ – மாணவிகளுக்கு நடத்தப்பட்ட ஓவியப் போட்டி, கட்டுரைப் போட்டி, கவிதைப் போட்டியில் 450-க்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகள் கலந்து கொண்டனர். போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ – மாணவிகளுக்குக் கிளை நூலகர் கு.இரா.பழனி பரிசுகளையும் பாராட்டுச் சான்றிதழ்களையும் வழங்கினார்.
விழாவில், உரூ.1000/- செலுத்தி, 170-ஆவது நூலகப் புரவலராக ஓய்வுபெற்ற தலைமையாசிரியர் ப.செயலெட்சுமி இணைந்தார்.
மூன்றாம் நிலை நூலகர் சா.சோதி, யுரேகா ஒன்றியக் கருத்தாளர்கள் மு.குமரன், மு.சீவா, முருகன், பள்ளி ஆசிரியர்கள், பொதுமக்கள் ஏராளமாய்க் கலந்து கொண்டனர்.
நிறைவாக, நூலக உதவியாளர் மு. இராசேந்திரன் நன்றி கூறினார்.
Leave a Reply