திருக்குறளின் அறத்துப்பாலுக்குக் கதையெழுதிய மாணவர்கள்!

திருக்குறளின் அறத்துப்பாலுக்கு கதையெழுதிய மாணவர்கள்!        மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி பதின் மேனிலைப்பள்ளியில் 10, 11, 12-ஆம்வகுப்பில் படிக்கும் மாணவ-மாணவிகள் திருக்குறளின் அறத்துப்பாலிலுள்ள38 குறள்களுக்கு, 38 கதைகளை எழுதியுள்ளனர். இப்பள்ளியின் முதுகலை தமிழாசிரியர்கோ.மாலினி, இக்கதைகளைத் தொகுத்து ‘திருக்குறள் அறத்துப்பால் கதைகள்’ எனும்நூலாக்கியுள்ளார். இந்நூலின் அட்டை ஓவியத்தையும் பள்ளி மாணவரே வரைந்துள்ளார்.        இப்பள்ளியின் தமிழ்த்துறை சார்பில் கடந்த அக்டோபர் 26-ஆம் தேதியன்றுபள்ளி வளாகத்திலுள்ள ஆற்றல் அவைக்களம் அரங்கில் இந்நூலின் வெளியீட்டு விழாநடைபெற்றது.       ‘திருக்குறள் அறத்துப்பால் கதைகள்’ எனும் இந்நூலை பள்ளியின் தாளாளர் சக்தி சிரீதேவி வெளியிட, கவிஞர்…

2021-ஆம் ஆண்டிற்கான ஒன்றிய அரசின் சிறார் இலக்கியப் பரிசு கவிஞர் மு.முருகேசிற்கு

2021-ஆம் ஆண்டிற்கான ஒன்றிய அரசின் சிறார் இலக்கியப் பரிசு(பால சாகித்திய புரசுகார்) விருது பெற குறும்பாக் கவிஞர் மு.முருகேசு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.    புதுக்கோட்டை மாவட்டம் திருக்கோகர்ணத்தில் பிறந்த கவிஞர் மு.முருகேசு இப்போது வந்தவாசியில் வசித்து வருகிறார். கடந்த 35 ஆண்டுகளுக்கும் மேலாகத் தொடர்ந்து படைப்பிலக்கியத் தளத்தில் தீவிரமாக இயங்கி வருகிறார்.    இவர் 10 புதுக்கவிதை, 9 குறும்பாக்(ஐக்கூ) கவிதை நூல், 18 குழந்தை இலக்கியம், 9 கட்டுரைகள், ஒரு சிறுகதை நூல் முதலான 47 நூல்களை எழுதியுள்ளார். மேலும், 3 புதுக்கவிதை, 5 குறும்பா(ஐக்கூ)க்…

தன்னம்பிக்கையுடன் போட்டியிட்டால் வெற்றிபெற முடியும்

தன்னம்பிக்கையுடன் போட்டியிட்டால் வெற்றிபெற முடியும்      – சிலம்பாட்ட வீரர்களுக்கு மாவட்டக் காவல் துணைக் கண்காணிப்பாளர் அறிவுரை         வந்தவாசி. நவம்.29. தமிழ்நாடு சிலம்பாட்டக் கழகத்தின் திருவண்ணாமலை மாவட்டஅளவிலான சிலம்பாட்டப் போட்டிகளில் வென்ற சிலம்பாட்ட வீரர்களுக்குப் பதக்கமும்,பாராட்டுச் சான்றிதழ்களும் வழங்கும் விழா வந்தவாசி சிரீ அகிலாண்டேசுவரி மகளிர் கல்லூரிகலையரங்கில் நேற்று நடைபெற்றது.          திருவண்ணாமலை முன்னாள் மாவட்ட ஆட்சித் தலைவரும் தமிழ்நாடு சிலம்பாட்டக்கழக மாநிலத் தலைவருமான முனைவர் மு.இராசேந்திரன், இ.ஆ.ப., தலைமையின் கீழ்ச் செயல்படும் திருவண்ணாமலை மாவட்டச் சிலம்பாட்டக் கழகத்தின் மாவட்ட அளவிலானபோட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்குப் பதக்கமும் பாராட்டுச் சான்றிதழ்களும்வழங்கப்பட்டன.      …

கவிஞர் மு.முருகேசின் சிறுவர் கதை நூலுக்குச் சிறப்புப் பரிசு

கவிஞர் மு.முருகேசின் சிறுவர் கதை நூலுக்குக் கம்பம் பாரதி இலக்கியப் பேரவையின் சிறப்புப் பரிசு கம்பம். ஆக.19. கவிஞர் மு.முருகேசு எழுதிய ‘தவிட்டுக் குருவியும் தங்கராசு மாமாவும்’ சிறுவர் கதை நூலுக்கு, கம்பம் பாரதி தமிழ் இலக்கியப் பேரவை சிறந்த சிறுவர் இலக்கிய நூலுக்கான சிறப்புப் பரிசினை வழங்கியுள்ளது. கடந்த 40 ஆண்டுகளாகத் தேனி மாவட்டம் கம்பத்தில் செயல்பட்டு வரும் கம்பம் பாரதி தமிழ் இலக்கியப் பேரவை, 14 ஆண்டுகளாகத் தமிழில் வெளியாகும் சிறந்த நூல்களுக்குப் பரிசுகளை வழங்கிப் பாராட்டி வருகிறது. 2018-ஆம் ஆண்டு…

புத்தக வாசிப்பினால் வாழ்வில் உயரங்களை அடைய முடியும் – கவிஞர் மு.முருகேசு

புத்தக வாசிப்பினால் வாழ்வில் உயரங்களை அடைய முடியும் – கவிஞர் மு.முருகேசு வந்தவாசி அரசுக் கிளை நூலகத்தின் நூலக வாசகர் வட்டத்தின்சார்பில் நடைபெற்ற ’வாசிப்பு இயக்கம் – 2022’ எனும் விழிப்புணர்வுப் பேரணி ஆனி 30 / சூலை 15 அன்று வந்தவாசியில் நடைபெற்றது. தமிழக அரசின் பொது நூலகத்துறையும் எம்.எசு.சுவாமிநாதன் ஆராய்ச்சி மையமும் இணைந்து தேசிய அளவில் ‘வாசிப்பு இயக்கம் – 2022’ எனும் இயக்கத்தைத் தொடங்கியுள்ளன. அந்த இயக்கத்தின் செயல்பாட்டை விளக்கும் வாசிப்பு விழிப்புணர்வுபேரணி வந்தவாசி அரசுக் கிளை நூலகத்தின் நூலக வாசகர்…

கவிஞர் மு.முருகேசின் சிறுவர் கதை நூலுக்கு ‘கவிதை உறவு’ வழங்கும் சிறந்த நூலுக்கான முதல் பரிசு

 கவிஞர் மு.முருகேசு எழுதிய ’தவிட்டுக் குருவியும் தங்கராசு மாமாவும்’ எனும் சிறுவர் கதை நூலுக்கு, ’கவிதை உறவு’ இதழின் சார்பில் சிறந்த சிறுவர் கதை நூலுக்கான முதல் பரிசு வழங்கப்பட்டது. சென்னையிலிருந்து கடந்த 47 ஆண்டுகளாக வெளிவரும் ’கவிதை உறவு’ இதழின் சார்பில் சிறந்த நூல்களுக்குப் பல்வேறு தலைப்புகளின் கீழ் ஆண்டுதோறும் பரிசுகளை வழங்கி வருகின்றனர்.   2018- ஆம் ஆண்டு வெளியான சிறந்த நூல்களுக்கான விருது வழங்கும் விழா சென்னை அண்ணா சாலையிலுள்ள தேவநேயப் பாவாணர் நூலக அரங்கில் கடந்த சனிக்கிழமை மாலை…

கவிஞர் மு.முருகேசுக்கு ‘அன்னம் விருது’

இலக்கிய வீதி அமைப்பின் சார்பில் கவிஞர் மு.முருகேசுக்கு ‘அன்னம் விருது’    வழங்கப் பெற்றது.        இலக்கிய வீதி, பாரதிய வித்தியா பவன், கிருட்டிணா இனிப்பகம் இணைந்துநடத்தும் ‘கருத்தில் வாழும் கவிஞர்கள்’ தொடர் நிகழ்வில், தமிழில் கவிதைத் தளத்தில் தொடர்ந்து சிறப்பாகச் செயல்பட்டுவரும்  கவிஞர் மு.முருகேசுக்கு  ‘அன்னம் விருது’ சென்னையில்நடைபெற்ற விழாவில் வழங்கப்பெற்றது. 42-க்கும் மேற்பட்ட கதை, கவிதை,  கட்டுரை, சிறுவர் இலக்கியம், திறனாய்வு நூல்களை எழுதியுள்ள இவர், தனது நூல்களுக்காக 25-க்கும் மேற்பட்ட பரிசுகளையும் விருதுகளையும் பெற்றுள்ளார். இவரை மேலும் சிறப்பிக்கும் வகையில்…

கருத்தில் வாழும் கவிஞர் கந்தர்வன்

சித்திரை 13, 2050 வெள்ளி 26.04.2019 மாலை 6.30 பாரதிய வித்தியா பவன் சிற்றரங்கம் கீழ மாடவீதி, மயிலாப்பூர்,சென்னை 600 004.   கருத்தில் வாழும் கவிஞர்கள் நிகழ்வு 16 அன்னம் விருது பெறுபவர்: கவிஞர் மு.முருகேசு முன்னிலை:  இலக்கிய வீதி இனியவன் தலைமை: வழக்குரைஞர் சிகரம் ச.செந்தில்நாதன் சிறப்புரை: கவிஞர் தங்கம் மூர்த்தி பாரதிய வித்தியாபவன், மயிலாப்பூர்  இலக்கியவீதி  அமைப்பு  திரு கிருட்டிணா இனிப்பகம்  

வந்தவாசி கிளை நூலகத்தில் முப்பெரு விழா

வந்தவாசி கிளை நூலகத்தில் முப்பெரு விழா         வந்தவாசி. நவ.29. வந்தவாசி அரசுக்கிளை நூலகத்தில் நூலக வாசகர் வட்டம், வந்தை வட்ட கோட்டைத் தமிழ்ச் சங்கம்,  எசு.ஆர்.எம். இன்போடெக்கு கணிணிப் பயிற்சி மையமும் இணைந்து நடத்திய முப்பெரு விழா நூலகக் கட்டடத்தில் நடைபெற்றது.         இவ்விழாவிற்கு நூலக வாசகர் வட்டத் தலைவர் கவிஞர் மு.முருகேசு தலைமையேற்றார். நூலகர் க.மோகன் அனைவரையும் வரவேற்றார். இராமலிங்கம் எரிநெய் நிலைய உரிமையாளர் இரா.சிவக்குமார், வந்தை வட்ட கோட்டைத் தமிழ்ச் சங்கத் தலைவர் அ.மு.உசேன்  ஆகியோர் முன்னிலை வகித்தனர்.         தமிழக…

கதைகளின் வழியாக நல்ல சிந்தனைகளை விதைக்க முடியும்

கதைகளின் வழியாகக் குழந்தைகளின் மனத்தில்     நல்ல சிந்தனைகளை விதைக்க முடியும் செங்கற்பட்டு.நவம்.13, இளையோர் கூரறிவினர்(little jacky) பதின் மேனிலைப்பள்ளியில் குழந்தைகள் நாள் விழாவையொட்டி நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது. பள்ளியில் படிக்கிற காலத்திலேயே கதைகளின் வழியாகக் குழந்தைகளின் மனத்தில் நல்ல சிந்தனைகளை விதைக்க முடியும் என்று  தமிழ்நாடு கூட்டுறவு சங்கங்களின் தேர்தல் ஆணையர்  முனைவர் மு.இராசேந்திரன், இ.ஆ.ப. பேசினார்.   செங்கற்பட்டு இளையோர் கூரறிவினர்(little jacky) கல்விக் குழுமத் தலைவர் ஞா.சாசுவா சாம் தானி இவ்விழாவிற்குத்  தலைமையேற்றார். பள்ளி ஆசிரியர் ம.இலட்சுமி அனைவரையும் வரவேற்றார்.   கவிஞர் மு.முருகேசு எழுதிய…

அனைத்திந்திய சிறுவர் எழுத்தாளர் சங்கம்  தொடக்க விழா

அனைத்திந்திய சிறுவர் எழுத்தாளர் சங்கம்  தொடக்க விழா  அடையாறு, காந்தி நகர் அரசு நூலக வாசகர் வட்டத்தில் அனைத்திந்திய சிறுவர் எழுத்தாளர் சங்கத் தொடக்க விழாவும் சிறுவர் இதழ் வெளியீட்டு விழாவும் நடைபெற்றன.        இவ்விழாவிற்கு மூத்த இதழாளர் தீபம் எசு.திருமலை தலைமையேற்றார்.     கவிஞர் இராய.செல்லப்பா அனைவரையும் வரவேற்றார். அடையாறு நூலகர் சித்திரா, ஓய்வுபெற்ற நூலகரும் எழுத்தாளருமான ஆலந்தூர் கோ.மோகனரங்கன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.        அனைத்திந்திய சிறுவர் எழுத்தாளர் சங்கத்தின் நோக்கம் குறித்தும் சிறுவர் இதழ்களின் சமூகத் தேவை குறித்தும் எழுத்தாளரும் நூலக வாசகர் வட்டத் தலைவருமான வையவன்…

1 2 4