valaikuda_vanampaadi_chithirai30

குவைத்து வளைகுடா வானம்பாடியின் திங்கள் கூட்டம்,  அன்னையர்  நாள் சிறப்பு நிகழ்வாக சித்திரை 27, தி.பி.2045 10-05-2014 அன்று காலை 10 மணிக்கு,  பஃகாகில் சரவணபவன் உணவகத்தில் மிகச் சிறப்பாக நடந்தது.

வழக்கம்போல் தமிழ்த்தாய் வாழ்த்துடன் விழா தொடங்கியது. செல்வி அனுசுரேசு திருக்குறள் கதை சொல்ல, கூட்டத்திற்கு,  பொறியாளர் நடராசன், பொறியாளர்  முனைவர் பால் மனுவேல், பொறியாளர் திரு சேகர் அவர்கள்  முன்னிலையேற்றார்கள்.

விழாவில்  கவிஞர்கள், பாடகர்கள்,  அன்னையர் நாளைச்  சிறப்பித்து, கவிதை, சிறப்புச் சொற்பொழிவு, பாடல் எனத் தங்களின் படைப்புகளை வழங்கினார்கள்.

விழாவில் தொழிலதிபர் திரு சுரேசு அவர்கள் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு அன்னையர் பற்றி நினைவுக்கூர்ந்தார்.

கவிஞர் திரு வித்யாசாகர்  நிகழ்வுகளைத் தொகுத்துவழங்கினார்.

பகல் உணவுடன் விழா இனிதே நிறைவுபெற்றது.

valaikuda_vanampaadi_chithirai36

–    செங்கை நிலவன்