ramasamythamizhkalluuri-01

24.03.2014 அன்று காரைக்குடி, இராமசாமி தமிழ்க் கல்லூரியில் செஞ்சுருள் சங்கக் கருத்தரங்கம் நடைபெற்றது.

ramasamythamizhkalluuri-02  திட்ட இயக்குநர் முனைவர் திரு செ.நாகநாதன் வரவேற்புரையாற்றிச் செஞ்சுருள் சங்கத்தின் நோக்கங்களான  ஏப்புநோய்(எய்ட்சு) பற்றிய விழிப்புணர்வு, நோயாளிகள் அரவணைப்பு, குருதிக் கொடையின் சிறப்பு ஆகியவற்றை எடுத்துரைத்தார்.  திருமிகு சொ.வினைதீர்த்தான் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார். முதல்வர் முனைவர் திருமிகு புவனேசுவரி  சிறப்பு விருந்தினர்ககுப் பொன்னாடை  அணிவித்தார்.

  கருத்தரங்கில்  இலக்கிய இளவல்(பி.லிட்.) பட்டப்படிப்பு முதலாண்டு, இரண்டாமாண்டு, மூன்றாமாண்டு படிக்கும் இருபால் மாணாக்கர்களும் பேராசிரியர்களும் கலந்து கொண்டனர். திரு சொ. வினைதீர்த்தான், “வாழ்வைக் கொண்டாடுவோம்” என்ற பொருளில் மாணவ மாணவியரிடையே சிறப்புரையாற்றினார்.ramasamythamizhkalluuri-03

 

தம்முடைய சிறப்புரையில் அவர், இருத்தல், பிழைத்தல், வாழ்தல் ஆகியவற்றிற்கு விளக்கமளித்துப் பேச்சைத் தொடங்கினார். இருத்தல் பிறர் கட்டுப்பாட்டில் அல்லது ஏதோ ஒன்றின் பிடியில் சிறையில் இருப்பது போன்றது. சிலர் ‘பிழைத்துக் கிடக்கிறேன்’ என்று கூறும்போது ‘நாயும் பிழைக்கும் இந்தப் பிழைப்பு’ என்ற பாரதியின் தொடரை நினைவு கூர வேண்டும். மூச்சுவிட்டுக் கொண்டிருப்பவன் மனிதனில்லை. முயன்று கொண்டிருப்பவனே மனிதன்! “ஒவ்வொரு நொடியும் வாழுங்கள்” என்றார்கள். நாம் நேற்றைய மனத்திற்கு ஒவ்வாத  பட்டறிவை எண்ணி உழல்வதிலும் நாளையைப் பற்றிய  அச்சத்திலும் இந்த நொடியைத் தொலைத்துக்கொண்டிருக்கிறோம் என்று  தெளிவுபடுத்தினார்.

 

ramasamythamizhkalluuri-04அடுத்து மாசுலோவின் தேவைக் கோட்பாடுச் சட்டகத்தின் துணையோடு அடிப்படைத் தேவைகள், பாதுகாப்பு உணர்வு, தோழமை உணர்வுத் தேவைகள், ஏற்பிற்கும், பாராட்டுக்கும் ஏங்கும் தீராத ஏக்கம் உடைய மனிதர்களின் மதிப்பார்ந்த தேவை, மேலாகக் குறிக்கோளை அடைதல் எனும் உச்சத் தேவை ஆகியவற்றை உரைத்தார். “குறிக்கோள் இலாது கெட்டேன்” என்ற அப்பரடிகளின் ”சேலுலாம் பழன வேலித் திருக்கொண்டீச்சரத்துளானை” அடையும் குறிக்கோளையும், காந்தியடிகளின் நாட்டின் விடுதலை வேட்கையையும் கூறி இலக்கு, முன்னேற்ற அளவு,  ஆற்றக்கூடியவர்,  மெய்நிலை,  காலவரம்பு (S M A R T ) வழி குறிக்கோள்  அடைவதை அருமையாக விவரித்தார்.

 

“பாலுணர்வு அடிப்படைத் தேவையாக மாசுலோவால் சேர்க்கப்பட்டிருந்தாலும், சீராட்டும் தாய்மடியாக பெண்ramasamythamizhkalluuri-05 ஆணுக்கும் தொற்றிக்கொள்ளும் தோளாகப் பெண்ணுக்கும் பாதுகாப்பு உணர்வு தருகிறது. அதற்கு மேலே “என்ன இன்பம் எனக்கு நல்கும்? இருக்கின்றாள் என்பதொன்றே!” என்று பாரதிதாசன் முதியோர் காதலை  விளக்குவது போலத் தோழமை உணர்வாக இருக்கிறது. மேலும் பெண் “ஆகாயம் சுருங்குமா? சூரியன் கருக்குமா?” “கவலை கொள்ளாதே! நீ ஆதவன்” என்று ஊக்கமளிப்பவளாக இருக்கிறாள். அவளுடைய “கண்ணின் கடைப்பார்வை” மாமலை என்ற குறிக்கோளையும் கடுகாக்கி எளிதாக்கிறது. இவ்வாறு எல்லாத் தேவையையும் பூர்த்தி செய்வதால் மானிடத்தை ஆட்சி செய்கிறது. ஆனால் அதே பாலுணர்வு, முறை தவறும் பொழுது  ஏப்புநோய் தருகிறது;  வாழ்வை அழித்துவிடுகிறது. கம்பனின் “”ஆசலம் புரி ஐம் பொறி வாளியும் . . . . .  நெறியின் புறம் செலாக் கோசலம்”” என்ற தொடரை அடிக்கோடிட்டுப் புலன்கள் நெறியில் நின்று கட்டுப்படுத்தப்படும்போது அணைக்கட்டில்  கட்டுப்படுத்தப்பட்டுப் பயன்படும் ஆறாகவும், கட்டுப்படுத்தப்படாதபோது எல்லை கடந்து காட்டாறாக அழிப்பதையும் பற்றி  விளக்கினார்.

 

ramasamythamizhkalluuri-06அடுத்து வாழ்தல் என்பது மனித உறவுகள் சார்ந்தது. மனித உறவு மேம்பட  ஆங்கிலத்தில் 4 “T”  வேண்டுமென்பார்கள்.   தொடுகை, உரை, நம்பிக்கை, நேரம் (“Touch,Talk, Trust,Time”) ஆகியனவே அவை.  நேரமெடுத்துக்கொண்டு சொல்லாலும், செயலாலும் நம்பிக்கை வளர்க்கிறபோது மனித உறவு மேம்படுகிறது.

 

வாழ்வை நரகம் ஆக்குவதும்  துறக்கம் ஆக்குவதும் நம்முடைய சொற்களே. சான்றுக்கு ஒரு நிகழ்ச்சி. கணவர் எழுதிக்கொண்டிருந்தார்;  மனைவி  காநீரைக் கொண்டு வந்து மேசையின் மீது வைத்தார்; பையன் ஓடி வந்தவன் தட்டிவிடக்  காநீர் கீழே கொட்டிவிட்டது. கணவர் கத்தினார், “உள்ளே என்ன பண்ணிக் கிழிக்கிறாய். கையில் கொடுத்திருக்கலாம் அல்லவா?”. மனைவி விடையிறுத்தார்,” நீங்கள் என்ன எழுதிக் கிழிக்கிறீர்கள்? குடித்துவிட்டு ramasamythamizhkalluuri-08எழுதியிருக்கலாம் அல்லவா?” பையன் சொன்னான், “ஓரத்தில வைக்காமல்  மேசை நடுவிலே வைச்சிருக்கலாம் அல்லவா?”. அங்கே நரகம் உருவானது. இந் நிகழ்வை வேறு  சொல்லாடலில் காணலாம். கணவர், “ காநீர் கெட்டியாக மணமாக இருந்ததே! நான் குடித்துவிட்டு எழுதியிருந்திருக்க வேண்டும்”. மனைவி, “நான் உள்ளே என்ன செய்கிறேன். உங்கள் கையிலே தந்திருக்க வேண்டும்.” பையன், “நான் கவனமாக வந்திருக்க வேண்டும்.”  இவ்வாறு தவறுகளை ஒத்துக்கொள்ளும்போது  இனிய உலகம் உருவாகிறது.

 

சிறந்த ஆறு சொற்கள்:- “ நான் தவறு செய்துவிட்டேன் என்பதை ஒத்துக் கொள்கிறேன்” [“I admit I made a mistake”]

 

ஐந்து சிறந்த சொற்கள்:-  நீங்கள் ஆற்றி உள்ளது நல்ல பணியாகும்.  [“You did a good job”]  பாராட்டுங்கள். பாராட்டினால் என்ன நிகழும்?. இன்சொல் இனிது ஈன்றலைக் காணுங்கள். பிறகு கடுஞ்சொல் பயன்படுத்த மாட்டீர்கள்.

 

ramasamythamizhkalluuri-09நான்கு சிறந்த சொற்கள்:- உங்கள் கருத்து என்னவென்று தெரிவியுங்கள். [”What is your opinion” ] கருத்துக் கேட்கிறபோது அதனுடன் உதவியும் வருகிற வாய்ப்பு உண்டு. ஒருவரை மதித்துக் கருத்துக் கேட்கிறபோது அவர் பெருமைகொள்கிறார்.

மூன்று சிறந்த சொற்கள்:-  அருள்கூர்ந்து உங்களால் முடியுமென்றால் ..,[“If you please”]

நெஞ்சக் கதவைத் திறக்கும் இரண்டு  திறவுகோல்கள்:- [“Keys” ] நன்றியும் அருள்கூர்ந்தும். [“Thank you and please”]

சிறந்த இரண்டு  சொற்கள்:-  உங்களுக்கு நன்றி. [“Thank you”] நன்றி சொல்லுங்கள்! வணங்குங்கள்! வாழ்த்துங்கள்!

தவிர்க்க வேண்டிய சொல்:- “நான்.”  தன்னலத்தை முன்னிறுத்தும் போது உறவுப் பாலம் உடையும்.

 

சிறந்த சொல்:-  நீங்கள் [“You”] முன் நிற்பவர் தேவையைப் பூர்த்தி செய்யும்போது, அடுத்தவர் நலத்தைப் பாராட்டும்போது உறவு மேம்படுகிறது. சுற்றியிருப்பவர் தேவைகளை நாம் பூர்த்திசெய்ய முயலும்போது நம் ramasamythamizhkalluuri-10மகிழ்ச்சி பாதுகாக்கப் படுகிறது. ஊரார் பிள்ளையை ஊட்டி வளத்தால் நம் பிள்ளை தானே வளரும் என்பார்கள். மனைவி அடுத்தவர் மகள். அவரைப் போற்றினால் நம் பிள்ளையை அவர் வளர்க்க அவருக்குத் தெம்பிருக்கும். அடுத்தவர் பெண்ணான மருமகளைப் போற்றினால் நம் பிள்ளையையும், பேரனையும் அவர் பார்த்துக்கொள்வார். வாழ்க்கை இன்பவுலகம்தான்.”

 

இவ்வாறு, நகைச்சுவைத் துணுக்குகள், சிறு கதைகள், திருக்குறள், இலக்கியச் சொற்கள் வழி  எண்ணங்களைப் பகிர்ந்துகொணடார்.

 

சிறிது நேரமளித்து மாணவச் செல்வங்களை அவர்கள் குறிக்கோள் குறித்தும், பயிற்சியில் உணர்ந்தது குறித்தும்  எழுதித் தருமாறு கேட்டுக்கொண்டார்.  அவர்களின் அற்புத எண்ணங்களும், மகிழ்ச்சி அலையும்  உற்சாகம் அள்ளித்தருவனவாக அமைந்தன.

 

பேராசிரியர் முனைவர் கீதா நன்றியுரையாற்றினார்.

ramasamythamizhkalluuri-11