வெள்ளாளர் கல்வி விழா!
கன்னியாகுமரி வெள்ளாளர் பேரவை நடத்தும் மாபெரும் வெள்ளாளர் கல்வி விழா!
10-ஆம் வகுப்பு, 12-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள், பொறியியல் கல்லூரியில் ‘தங்க விருது’ பெற்றவர்கள், அரசு/தனியார் பள்ளிகள/தொழில் நுட்பக் கல்லூரிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு நல்லாசிரியர் விருது வழங்கும் விழா எனக் கல்வி சார்ந்த அனைத்தையும் உள்ளடக்கி மாபெரும் ‘வெள்ளாளர் கல்வி விழா’, கன்னியாகுமரி வெள்ளாளர் பேரவை வரும் மே 31ஆம் நாள் மாலை 4 மணிக்கு நகர்கோவில், வடசேரியில் உள்ள இலெட்சுமி மகாலில் நடத்தப்படுகிறது.
இவ்விழாவிற்கு, சான்றுரை வழக்குரைஞர் திரு. என். சிதம்பரதாணு (பிள்ளை) தலைமை வகிக்கிறார். வெள்ளாளச் சமுதாய செயல்பாடுகள் குறித்து, கன்னியாகுமரி வெள்ளாளர் பேரவையின் பொதுச் செயலாளர் திரு. சி.பி.இ. சந்துரு உரை நிகழ்த்துகிறார்.
விழாவில் பரிசு வழங்கி, சிறப்புரை நிகழ்த்த கொங்கு இளைஞர் பேரவையின் தலைவரும், வெள்ளாளர்கள் தளபதியும், நடப்பு சட்ட மன்ற உறுப்பினருமான திரு. உ. தனியரசு இசைந்துள்ளார். அதுபோல், ஈரோடு நாச்சிமுத்து, செகநாதன் பொறியியல் கல்லூரியின் தாளாளர் பாரத வித்யா சிரோமணி மருத்துவர் வசந்தா சுதானந்தன் அவர்களும் வருகை தர உள்ளார். இவர்களைத் தவிர பல்வேறு வெள்ளாளச் சங்கங்களைச் சார்ந்த தலைவர்கள் பங்கெடுத்துச் சிறப்பிக்க உள்ளனர்.
விழாவில் நல்லாசிரியர் விருது, அரசு ஊழியருக்கான விருது, உழவர் விருது, உழைப்பாளர் விருது, தொழில்நுட்பக் கல்லூரி ஆசிரியர் விருது, இசைக் கலைஞர்களுக்கான விருது, கட்டக் கலைஞர் விருது, இதழியல் விருது, சமூக சேவகர் விருது எனப் பல்வேறு விருதுகளும் வழங்கப்பட உள்ளன.
இதோடு, இந்தியாவில் பொதுவுடைமைக் கட்சி தோன்றக் காரணமாயிருந்த கன்னியாகுமரி வெள்ளாளர் பேரவையின் பொதுச் செயலாளர் திரு. சி.பி.இ. சந்துருவின் தகப்பனார் மறைந்த திரு. சி.பி. இளங்கோ அவர்களின் நினைவாக முழு மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவியர்களுக்கு ரூ. 1000 வீதம் பணப்பரிசு வழங்கப்பட உள்ளது.
வேளாளர்.காம் விழா சிறப்புற நடைபெற வாழ்த்துவதோடு, அனைத்து கன்னியாகுமரி வெள்ளாளச் சொந்தங்களையும் விழாவில் பங்கொடுத்துச் சிறப்பிக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறது.
Leave a Reply