பரிசுபெற்ற மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி மாணாக்கர்க்குப் பாராட்டு!
பெருந்தலைவர் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி அரசு உதவி பெறும் மாணவர் கட்டுரைப் போட்டியில் முதல் பரிசு வெற்றி பெற்றதற்குப் பாராட்டு
ஈகியர்(தியாகிகள்) நாள்விழா : கே.எம்.எசு..கல்வி அறக்கட்டளை சார்பில் நடுநிலைப் பள்ளி எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கான கட்டுரைப் போட்டியில் தேவகோட்டை பெருந்தலைவர் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி மாணவர் வி.வசந்த குமார் முதல் பரிசை வென்றார்.
இதே பள்ளியின் மாணவர் கண்ணதாசன், மாணவி தனம் ஆகியோர் சிறப்புப் பரிசுகள் பெற்றனர்.
பொற்கிழிக்கவிஞர் அரு.சோமசுந்தரன், குன்றக்குடி மடத்தின் ஆதீனப்புலவர் பரமகுரு ஆகியோர் பரிசுகளை வழங்கினார்கள்.
விடுமுறை நாளன்று மாணவர்களைப் போட்டிக்கு அழைத்துச் சென்றதுடன் பயிற்சி அளித்த ஆசிரியை கலாவல்லி, வெற்றி பெற்ற மாணவர்கள் ஆகியோரைப் பள்ளித் தலைமை ஆசிரியர் இலெ .சொக்கலிங்கம், பிற ஆசிரியர்கள் பாராட்டினார்கள்.
(படங்களை அழுத்தின் பெரிதாகக் காணலாம்.)










Leave a Reply