பரிசுபெற்ற மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி மாணாக்கர்க்குப் பாராட்டு!

பெருந்தலைவர் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி அரசு உதவி பெறும் மாணவர் கட்டுரைப் போட்டியில் முதல் பரிசு வெற்றி பெற்றதற்குப் பாராட்டு   ஈகியர்(தியாகிகள்) நாள்விழா : கே.எம்.எசு..கல்வி அறக்கட்டளை சார்பில் நடுநிலைப் பள்ளி எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கான கட்டுரைப் போட்டியில் தேவகோட்டை பெருந்தலைவர் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி மாணவர் வி.வசந்த குமார் முதல் பரிசை வென்றார்.   இதே பள்ளியின் மாணவர் கண்ணதாசன், மாணவி தனம் ஆகியோர் சிறப்புப் பரிசுகள் பெற்றனர்.   பொற்கிழிக்கவிஞர் அரு.சோமசுந்தரன், குன்றக்குடி மடத்தின் ஆதீனப்புலவர் பரமகுரு…

“முதல் மதிப்பெண் எடுக்க வேண்டாம் மகளே!” – அறிமுகம்

“முதல் மதிப்பெண் எடுக்க வேண்டாம் மகளே!” அறிவுத்தேடல் நூல் அறிமுக மின்னஞ்சல் இதழ் 34   நாளிதழ்கள், இணைய இதழ்களில் வந்த ஆசிரியரின் காலத்திற்கேற்ற கட்டுரைகளே “முதல் மதிப்பெண் எடுக்க வேண்டாம் மகளே!” என்ற கட்டுரைத் தொகுப்பாக வந்துள்ளது. இத் தொகுப்பின் ஆசிரியரான நா.முத்துநிலவன் உலகறிந்த பட்டிமன்றப் பேச்சாளர், பாடகர், கவிஞர், கட்டுரையாளர், சமூகச் சிந்தனையாளர், வலைப்பதிவாளர், கருத்தரங்குகளில் மொழி சார்ந்தும், சமூகம் சார்ந்தும் முழங்குபவர் போன்ற பன்முகத்தன்மை கொண்டவராக இருந்தாலும் பள்ளி ஆசிரியர் என்ற அவரின் தகுதிதான் இந்த நூலை இன்னும் வேகமெடுத்து…

இருபால் இளைஞர்களே! களம் புகுவீர்!

  நிகழும் சித்திரை 11, ஏப்பிரல் 24 அன்று நாடாளுமன்றத்தேர்தலுக்கான வாக்குப் பதவி நடைபெறுகிறது. தமி்ழ் மக்களுக்கு எதிரானவர்களுக்குப் பாடம் புகட்டவும், தமிழ்நாட்டிலாவது தமிழ் வாழ வகை செய்வோருக்கு வாக்களிக்கவும் உரிய களமாக இதைக் கருத வேண்டும்.  அரசியல் ஊழல் கறை படியாத இருபால் இளைஞர்களும் மாணாக்கர்களும் தேர்தலில் முதல்முறை வாக்களிப்பவர்களும்  முயன்றால்  தவறான  பாதையில் செல்லும் நாட்டின் போக்கைத் திருப்ப இயலும். அதற்காக அவர்கள் முன் இரு  வழிகள் உள்ளன. அவற்றில் ஒன்றைச் செயல்படுத்தினால் போதும்.   முதல் வழி தேர்தல் பரப்புரை…