image-44794

இலக்குவனாரின் ‘பழந்தமிழ்’ – 11

(இலக்குவனாரின் ‘பழந்தமிழ்’ – 10 தொடர்ச்சி) ‘பழந்தமிழ்’ 4. மொழி மாற்றங்கள்  மொழியில் காணப்படும் இலக்கணக் கூறுகளின் மாற்றமும், சொற்பொருள்களின் மாற்றமும், சொல்மாற்றமும் விரைந்து நிகழ்வன  அல்ல;  மிகுந்தும் நிகழ்வனவல்ல. நூற்றாண்டு தோறும் சிலவாகவே நிகழும். இவ்வாறு மாற்றங்கள் நிகழ்வதற்குரிய காரணங்கள் மொழியைப் பயன்படுத்தும் மக்களுடைய சோம்பர், விரைவு, அயல் மொழியாளர் கூட்டுறவு, மொழியறிவு இன்மை எனப் பல திறப்படும்.   ...
image-44812

“தமிழே அருச்சனை மொழி! தமிழரே அருச்சகர்!”சென்னையில் சிறப்புக் கருத்தரங்கம்!                  

“தமிழே அருச்சனை மொழி! தமிழரே அருச்சகர்!” சென்னையில் சிறப்புக் கருத்தரங்கம்!                   “தமிழே அருச்சனை மொழி! தமிழரே அருச்சகர்!” என்ற தலைப்பில், வரும் புரட்டாசி 25, 2053/  12.10.2022 அன்று சென்னையில் தமிழ்த்தேசியப் பேரியக்கம் சார்பில் சிறப்புக்  கருத்தரங்கம் நடைபெறுகிறது. அனைத்துச் சாதியினரும் அருச்சகர் ஆவதற்குத் தடை விதிக்கும் வகையில் அண்மையில் சென்னை உயர் நீதிமன்றத் தீர்ப்பு வெளிவந்துள்ளது. இத்தீர்ப்பிலுள்ள பாதங்களை விளக்கியும், தமிழ்நாட்டின் அருச்சனை மொழி சமற்கிருதமாக ஒருபோதும் இருக்கக் கூடாது - தெய்வத் தமிழ்தான் தமிழ்நாட்டின் அருச்சனை மொழி என வலியுறுத்தியும் தெய்வத் தமிழ்ப் பேரவை , தமிழ்த்தேசியப் பேரியக்கம் சார்பில்  தமிழ்நாடெங்கும் பரப்புரைக் கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக, சென்னையில் சிறப்புக் கருத்தரங்கம் வரும் அக்டோபர் 12 அன்று நடைபெறுகிறது.  சென்னை சேப்பாக்கம் செய்தியாளர் அரங்கத்தில் 12.10.2022- அறிவன் (புதன்) கிழமை மாலை 4.30 மணிக்கு நடைபெறும் இச்சிறப்புக் கருத்தரங்கத்திற்குத், தமிழ்த்தேசியப் பேரியக்கத் துணைப் பொதுச்செயலாளர் தோழர் க. அருணபாரதி தலைமை தாங்குகிறார். தென்சென்னை த.தே.பே. செயலாளர் தோழர் ஏ. பிரகாசு பாரதி வரவேற்கிறார். தமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுக்குழு உறுப்பினர் தோழர் இரா. இளங்குமரன், சென்னை நடுவண் கிளைச் செயலாளர் தோழர் மு. வடிவேலன், ஆவடி செயலாளர் தோழர் வ. சுப்பிரமணியன் ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர். தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவரும், தெய்வத் தமிழ்ப் பேரவை ஒருங்கிணைப்பாளருமான ஐயா பெ. மணியரசன், சென்னை உயர் நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் “சிகரம்” ச. செந்தில்நாதன், இந்து வேத மறுமலர்ச்சி இயக்கத் தலைவர் தமிழ்த்திரு. சித்தர் மூங்கிலடியார், தெய்வத் தமிழ்ப் பேரவைச் செயற்குழு உறுப்பினர் தமிழ்த்திரு. சிவ. வடிவேலன் ஆகியோர் சிறப்புரையாற்றுகின்றனர். த.தே.பே. திருவள்ளூர் கிளைச் செயலாளர் தோழர் செயப்பிரகாசு நன்றி கூறுகிறார். நிகழ்வில், தமிழின உணர்வாளர்களும், ஆன்மிக மெய்யன்பர்களும் திரளாகப் பங்கேற்க வரும்படி அன்புரிமையுடன் அழைக்கின்றோம்! ================================= தலைமைச் செயலகம், தமிழ்த்தேசியப் பேரியக்கம் ================================= பேச: 9443918095, புலனம் : 9841949462 முகநூல் : www.fb.com/tamizhdesiyam ஊடகம் : www.kannottam.com இணையம் : www.tamizhdesiyam.com சுட்டுரை : www.twitter.com/Tamizhdesiyam காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam
image-44781

ஊரும் பேரும்: இரா.பி.சேது(ப்பிள்ளை):– 9

(ஊரும் பேரும் – இரா.பி.சேது(ப்பிள்ளை) – 8 தொடர்ச்சி) ஊரும் பேரும் – 9 மருத நிலம்‌ தொடர்ச்சி கேணி, கிணறு    இன்னும், ஊற்று நீரால் நிறையும் கேணியும் கிணறும் சில ஊர்களைத்தோற்றுவித்துள்ளன. சென்னை மாநகரிலுள்ள  திருவல்லிக்கேணியும்,நெல்லை நாட்டிலுள்ள நாரைக் கிணறும் இவ்வுண்மைக்குச் சான்றாகும். நிலம்    இங்ஙனம் ஆற்று நீராலும், ஊற்று நீராலும் ஊட்டி வளர்க்கப்படும்நிலத்தின் தன்மையை உணர்த்தும் பெயர்களைக் கொண்டுள்ள ...
image-44599

சுரதாவின் தொகுப்பில் தமிழ்ச்சொல்லாக்கம் 453-460

(தமிழ்ச்சொல்லாக்கம்: 447-452 தொடர்ச்சி) தமிழ்ச்சொல்லாக்கம் 453-460 (சொல், மொழிமாற்றம் பெற்ற சுவடுகளை அடையாளங் காட்டும் சுரதாவின் அரிய தொகுப்பு. கி.பி. 1857 முதல் 1953 வரை வெளிப்பட்ட மொழி மாற்றச் சொற்களைத் (தம் பார்வையில் பட்டவற்றைத்) தேடித் தந்துள்ளார். 238 நூல்களும் 200 நூலாசிரியர்களும் பட்டியலாய்த் தரப்பட்டுள்ளன. மொழி மாற்றச் சொல்லும், சொல் இடம் பெற்ற பகுதியும் நூலும் ...
image-44708

மணிவண்ணனின் குறிஞ்சி மலர் 73

(குறிஞ்சி மலர்  72 தொடர்ச்சி) குறிஞ்சி மலர்அத்தியாயம் 26 தொடர்ச்சி 'தோட்டத்துப் பக்கமாகப் போனான். நீங்கள் வேண்டுமானால் போய்ச் சொல்லிப் பாருங்கள்' என்று நம்பிக்கையில்லாத குரலில் பதில் சொன்னார் மீனாட்சிசுந்தரம். மங்களேசுவரி அம்மாள் அரவிந்தனைத் தேடிக் கொண்டு தோட்டத்துப் பக்கமாகப் போனாள்.அப்போது காரில் குழந்தைகளை அழைத்துக் கொண்டு மலையைச் சுற்றிக் காட்டுவதற்காகப் போயிருந்த முருகானந்தமும் வசந்தாவும் திரும்பி வந்தார்கள். வசந்தா காரிலிருந்து குழந்தைகளை ...
image-44683

புலவர் குழந்தையின் இராவண காவியம்: 1.7.16 -1.7.20

(இராவண காவியம்: 1.7.11 -1.7.15 தொடர்ச்சி) இராவண காவியம் தமிழகக் காண்டம் 7. கடல்கோட் படலம் கழகமோ டமர்ந்து தென்னர் கனிதமி ழாய்ந்தாய்ந் தன்னார்வழிவழி புகழின் வாழ வறிதுபார்த் திருத்தல் நம்மோர்க்கழகல வெனவே பாழு மலைகடல் கழகத் தாங்குப்பழகவே யேற்ற காலம் பாத்துமே யிருந்த தம்மா. நல்லவ ருறவை நாடி நணித்துவந் தணித்தா யன்னார் ...
image-44772

தமிழ்க்காப்புக்கழகம்:ஆளுமையர் உரை 19, 20 & 21: இணைய அரங்கம்

அறனறிந்து மூத்த அறிவுடையார் கேண்மைதிறனறிந்து தேர்ந்து கொளல். (திருவள்ளுவர், திருக்குறள், ௪௱௪௰௧ - 441) தமிழ்க்காப்புக்கழகம் ஆளுமையர் உரை 19, 20 & 21: இணைய அரங்கம் நிகழ்ச்சி நாள்: புரட்டாசி 22, 2053 ஞாயிறு 09.10.2022 காலை 10.00 “தமிழும் நானும்” உரையாளர்கள்: மழலையர் நரம்பியல் மருத்துவ வல்லுநர் மரு.முனைவர் ஒளவை மெய்கண்டான் குத்தூசி மருத்துவ வல்லுநர் பேரா.முத்துக்குமார்    சித்த மருத்துவ வல்லுநர்  மரு.அசித்தர் கூட்ட ...
image-44597

சுரதாவின் தொகுப்பில் தமிழ்ச்சொல்லாக்கம் 447-452

(தமிழ்ச்சொல்லாக்கம்: 437-446 தொடர்ச்சி) தமிழ்ச்சொல்லாக்கம் 447-452 (சொல், மொழிமாற்றம் பெற்ற சுவடுகளை அடையாளங் காட்டும் சுரதாவின் அரிய தொகுப்பு. கி.பி. 1857 முதல் 1953 வரை வெளிப்பட்ட மொழி மாற்றச் சொற்களைத் (தம் பார்வையில் பட்டவற்றைத்) தேடித் தந்துள்ளார். 238 நூல்களும் 200 நூலாசிரியர்களும் பட்டியலாய்த் தரப்பட்டுள்ளன. மொழி மாற்றச் சொல்லும், சொல் இடம் பெற்ற பகுதியும் நூலும் ...
image-44656

உ.வே.சா.வின் என் சரித்திரம் 10

(உ.வே.சா.வின் என் சரித்திரம் 9 இன் தொடர்ச்சி) அத்தியாயம் 6என் தந்தையார் குருகுலவாசம் (தொடர்ச்சி) என் தந்தையாருடைய குருகுல வாசம் ஆரம்பமாயிற்று, கனம் கிருட்டிணையர் மனோதைரியமும் பிரபுத்துவமும் உடையவர். என் தந்தையாரை அவர் மிக்க அன்போடு பாதுகாத்து வந்தார். ஆனாலும் அவருக்குப் பல வேலைகளை ஏவுவார். தினந்தோறும் தம்முடைய ஆசிரியருக்கு என் தந்தையார் வசுத்திரம் துவைத்துப் போடுவார்; வெந்நீர் ...