வெருளி நோய்கள் 1586-1590 : இலக்குவனார் திருவள்ளுவன்

(வெருளி நோய்கள் 1581-1585 தொடர்ச்சி)
வெருளி நோய்கள் 1586-1590
- பதினகவை வெருளி – Decannophobia
பதினகவை குறித்த வரம்பற்ற பேரச்சம் பதினகவை வெருளி.
பதினகவைப் பருவத்தினருக்கு ஏற்படுவது பதினகவை வெருளி. பதினகவைப் பருவத்தினரைக் கண்டு பிறருக்கு ஏற்படுவது பதினகவையர்வெருளி
காண்க: பதினகவையர்வெருளி-Ephebiphobia
00 - பதினகவையர்வெருளி-Ephebiphobia
பதினகவைப் பருவத்தில் அல்லது பதினகவையினர் மீது ஏற்படும் வரம்பு மீறிய வெறுப்பு அல்லது பேரச்சம் பதினகவையர்வெருளி
ephebi என்னும் சொல்லின் மூலமான கிரேக்கச்சொல்லின் பொருள் இளம்பருவம் அல்லது வளரிளம்பருவம்.
மகார் வெருளி/குழந்தைகள் வெருளி/சிறார் வெருளி (paedophobia), இளந்தை வெருளி (Hebephobia), மூப்படைவு வெருளி(Gerascophobia), முதுமை வெருளி (Gerontophobia) என்று வகைப் படுத்தலாம்.
காண்க: பதினகவை வெருளி – Decannophobia
00 - பதினாயிர எண் வெருளி – Decemmillephobia
பதினாயிர எண் குறித்த வரம்பற்ற பேரச்சம் பதினாயிர எண் வெருளி.
Decemmillephobia என்னும் இத்தாலியச் சொல்லிற்குப் பத்தாயிரம் எனப் பொருள்.
00 - பதினான்காவது வார வெருளி -Juyonshuphobia
ஆண்டின் பதினான்காவது வாரம் குறித்த அளவுகடந்த பேரச்சம் பதினான்காவது வார வெருளி.
00 - பதினைந்தாம் வார வெருளி – Jugoshuphobia
ஆண்டின் பதினைந்தாம் வாரம் குறித்த அளவுகடந்த பேரச்சம் பதினைந்தாம் வார வெருளி.
00
(தொடரும்)
இலக்குவனார் திருவள்ளுவன்
வெருளி அறிவியல் 3/5







Leave a Reply