image-36288

அவர்கள் வருகிறார்கள்! – தமிழ்சிவா

அவர்கள் வருகிறார்கள்!    வினையை விதைத்துத் திணையை அறுத்தவர்கள் வருகிறார்கள் வருகிறார்கள்   குறிஞ்சியைக் குப்பையாக்கினார்கள் முல்லையை ஆதியோகி ஆக்கினார்கள் மருதத்தை உந்துகளில் ஏற்றினார்கள் நெய்தலைக் கூவமாக்கினார்கள் பாலையைப் பாழாக்கினார்கள்   நாளெல்லாம் பொழுதெல்லாம் வினைகளை விதைத்துத் திணைகளை அறுத்தவர்கள் வருகிறார்கள் வருகிறார்கள்   கானுறு வேங்கையைக் 'காசு' க்குப் பிடித்தார்கள் கழிவுப் பொந்துகளில் எலிகளென வளர்த்தார்கள் வெண்குருதியைக் குடத்தினில் வாங்க நம்குருதியையே சிந்த வைத்தார்கள்   ஊன்துவை அடிசில் உண்டு தேள்கடுப்பன்ன ஊறல் மாந்தி தெளியாச் சிந்தனை கொண்டு திரண்டு வருகிறது கூட்டம் கூடவே   ஆட்டம் அணிபெற கோட்டை ...
image-36285

அ.தி.மு.க. ஆட்சியைக் கலைக்க வேண்டா! – இலக்குவனார் திருவள்ளுவன்

அ.தி.மு.க. ஆட்சியைக் கலைக்க வேண்டா! “தேர்தல் முடிவு வந்ததும் மத்தியில் ஆட்சி மாறும். அடுத்த நொடி இங்கே அதிமுக ஆட்சி கலைக்கப்படும்” எனத் தி.மு.க.தலைவர் தாலின் கூறி வருகிறார். மக்களாட்சிக்கு எதிரான கருத்தை அவர் வெளிப்படுத்தத் தேவையில்லையே! தி.மு.க. கூட்டணியினரும் ஆதரவாளர்களும் எதிர்பார்ப்பதுபோல் இடைத் தேர்தல்களில் தேவையான தொகுதிகளில் தி.மு.க. வெற்றி பெற்றால் இயல்பாகவே இந்த ஆட்சி போய்த்தான் ...
image-36281

தன்னம்பிக்கை மிகுந்த சீமான், தினகரன், கமல் – இலக்குவனார் திருவள்ளுவன்

தன்னம்பிக்கை மிகுந்த சீமான், தினகரன், கமல்  தேர்தல் என்பது கூட்டணி உலகமாக மாறிவிட்டது. எனினும் துணிந்து கூட்டணி இன்றிப் போட்டியிடுவோர் இருக்கின்றனர். அவர்களுள் நாம்தமிழர் கட்சி சீமான், அமமுக தினகரன், மக்கள்நீதி மையத்தின் கமல் பாராட்டிற்குரியவர்கள். தன்னம்பிக்கையுடன் கூட்டணி வைத்துள்ளனர் இவர்கள். நாம் தமிழர் கட்சி வளர்ந்து வரும் அமைப்பு. இதனைக்கண்டு ஆளுங்கட்சி அஞ்சுவதே இதன் வளர்ச்சிக்குச் சான்று. ...
image-36277

தேர்தல் கணக்குகள் சரியே! விடைகள் தவறாகும். – இலக்குவனார் திருவள்ளுவன்

தேர்தல் கணக்குகள் சரியே!  விடைகள் தவறாகும்.  கட்சிகள் எண்ணிக்கை குறைய வேண்டும். அவற்றின் முதற் கட்டமாகக் கூட்டணி அமைத்துப் போட்டியிட வேண்டும் என்று பேரா.சி.இலக்குவனார் கூறியுள்ளார். அவர் சொன்னது, ஓரளவேனும் ஒத்துப்போகும் கொள்கைகளின் அடிப்படையில் கூட்டணி அமைப்பது. ஆனால், செல்வ வளத்தைப் பெருக்க அதிகாரத்தைக் கைப்பற்ற வேண்டும் என்ற இலக்கின் அடிப்படையிலேயே கூட்டணி அமைவதால் நாட்டு நலனுக்கு ...
image-36271

இலக்கியச் சிந்தனையின் 49ஆம் ஆண்டு நிறைவு விழா

சித்திரை முதல் நாள், 2050 14-4-2019 ஞாயிற்றுக்கிழமை மாலை 6.00  ஏவி.எம். இராசேசுவரி கல்யாண மண்டபம்  இராதாகிருட்டிணன் சாலை, சென்னை -4 இலக்கியச் சிந்தனையின் 49ஆம் ஆண்டு நிறைவு விழா ஆதி இலட்சுமணன் நினைவுப் பரிசு பெறுநர் : ஒளவை நடராசன் சிறந்த நூல் பரிசு பெறுநர்: திரு நல்லி குப்புசாமி திரு வெ.இறையன்பு இ.ஆ.ப. சிறந்த கதைக்கான பரிசு பெறுநர் : திரு சி.முருகேசு பாபு சிறப்புரை : திருமதி விசாலாட்சி சுப்பிரமணியன்- ...
image-36268

வாழ்வியல் கட்டளைகள் தொள்ளாயிரம் 71-80: இலக்குவனார் திருவள்ளுவன்

(வாழ்வியல் கட்டளைகள் தொள்ளாயிரம் 61-70 தொடர்ச்சி) வாழ்வியல் கட்டளைகள் தொள்ளாயிரம் (குறள்நெறி)   71. மக்கள் அறிவுடைமை நம்மினும் மாநிலத்தவர்க்கு இனிது என உணர்! 72. மகனையும் மகளையும் பிறர் புகழுறுமாறு வளர்! 73. “பெற்றோர் செய்த தவம் யாதோ' எனச் சொல்லுமாறு வாழ்! 74. அன்பினை அடைக்கும் தாழ் இல்லை என அறி! 75. “எல்லாம் எனக்கே' என்று சொல்லாது பிறர்க்குத் தா! 76. பெற்றோர் அன்பால் ...
image-36263

நடைமுறை ஆண்டும் தமிழ் ஆண்டுப் பகுப்பின் சிறப்பும் – இலக்குவனார் திருவள்ளுவன்

நடைமுறை ஆண்டும் தமிழ் ஆண்டுப் பகுப்பின் சிறப்பும்  சனவரி முதல் நாளன்று நாம் அனைவரும் புத்தாண்டு வாழ்த்துகளைப் பரிமாறிக்கொள்கிறோம்.  ஆனால் நாம் எண்ணுவதுபோல் இஃது ஆங்கில ஆண்டுமல்ல, கிறித்துவ ஆண்டுமல்ல. நடைமுறையில் இவ்வாண்டு பயன் பாட்டில் உள்ளமையால் இதனை நாம் நடைமுறை ஆண்டு என்று சொல்லலாம். கிறித்துப் பிறப்பின் பொழுதே நடைமுறையில் இருந்த ஆண்டைக் கிறித்துவ ஆண்டு என்று சொல்வது தவறாகும். எனினும் வரலாறு அறிந்தவர்களும் அவ்வாறுதான் கூறுகின்றனர். கிறித்து பிறந்த பொழுது ஐரோப்பிய நாடுகளில் ஆண்டிற்குப் பத்து மாதங்கள்தாம் இருந்தன. அப்பொழுது சூலையும் ஆகத்தும் கிடையாது. கி.மு.45இல் உரோமானியப் பேரரசர் சூலியசு சீசரால் உருவாக்கப்பட்டு அவர் பெயரால் சூலியன் நாட்காட்டி (Julian calendar) என்றுஅழைக்கப் பெற்றதே முன்பு பயன்பாட்டில் இருந்தது. அலோசியசு இலிலியசு  என்னும் இத்தாலிய மருத்துவர், வானியல் ...
image-36259

வாகை சூடுமா தேர்தல் ஆணையக் கூட்டணி? – இலக்குவனார் திருவள்ளுவன்

வாகை சூடுமா தேர்தல் ஆணையக் கூட்டணி? 2019 ஆம் ஆண்டின் பொதுத் தேர்தலுக்காகவும் உடன் நடத்தப்படுகின்ற இடைத் தேர்தல்களுக்காகவும் வழக்கம்போல் பல்வேறு கட்சிகள் இணைந்து கூட்டணி வைத்துள்ளன. வழக்கம்போல் தேர்தல் ஆணையமும் ஆளுங்கட்சியுடன் கூட்டணி வைத்துச் செயல்படுகிறது. தமிழ்நாட்டில் மட்டுமல்லாமல் இந்தியா முழுமையும் பாசகவுடனும் பாசகவுடன் இணைந்துள்ள மற்ற கட்சிகளுடனும் தேர்தல் ஆணையம் வைத்துள்ள கூட்டணி மக்கள் யாவரும் ...
image-36252

மா.அரங்கநாதன் இலக்கிய விருது 2019, சென்னை

சித்திரை 02, 2050  செவ்வாய்க் கிழமை16.04.2019 இராணி சீதை அரங்கம் 603, அண்ணாசாலை, சென்னை 600 006 விருதாளர்கள்  : வெளி இரங்கராசன்,யூமா வாசுகி தொடர்பிற்கு - 98843 96054
image-36242

சொற்பொழிவு: ‘பாவேந்தர் பாரதிதாசன்’ – முனைவர் மறைமலை இலக்குவனார்

தமிழ் இணையக் கல்விக் கழகம், சென்னை சொற்பொழிவு - 47 'பாவேந்தர் பாரதிதாசன்' - முனைவர் மறைமலை இலக்குவனார் பங்குனி 29, 2050 வெள்ளிக்கிழமை 12.04.2019 மாலை 4.30 தமிழ் இணையக் கல்விக்கழகக் கலையரங்கம் அன்புடன்,இயக்குநர், தமிழ் இணையக் கல்விக்கழகம், காந்தி மண்டபம் சாலை, அரசு தகவல் தொகுப்பு விவர மையம் எதிரில்சென்னை – 600 025.தொ.பே: 2220 9400 மின் முகவரி: tva@tn.gov.in  அரிச்சுவடி முதல் தமிழ் கற்க ...
image-36246

சந்திப்பு – இலக்குவனார் திருவள்ளுவன்

சந்திப்பு   எண்ணத்தின் சந்திப்பு நட்பாய் மலரும் உள்ளத்தின் சந்திப்பு காதலாய்க் கனியும் தாய் தந்தை சந்திப்பு மகவை ஈனும் ஆய்வு செயல் சந்திப்பு அறிவைப் பேணும் அறிஞரின் சந்திப்பு ஆக்கம் அளிக்கும் கலைஞரின் சந்திப்பு ஊக்கம் அளிக்கும் மறவரின் சந்திப்பு வீரம் ஊட்டும் அறத்தார் சந்திப்பு வறுமை ஓட்டும் எழுத்தின் சந்திப்பு சொல்லாய் மாறும் சொல்லின் சந்திப்பு வரியாய் மாறும் வரியின் சந்திப்பு கவியாய் மாறும் கவியின் சந்திப்பு காவியம் ஆகும் உழைப்போர் சந்திப்பு ...
image-36237

தேடுகின்றேன் நான்! – இலக்குவனார் திருவள்ளுவன்

உடலில் பாதியைத் தேடுகின்றேன் நான் உளத்தில் பாதியைத் தேடுகின்றேன் நான் கண்ணின் ஒளியைத் தேடுகின்றேன் நான் கருத்தின் எழுச்சியைத் தேடுகின்றேன் நான் பார்வையின் கனிவைத்  தேடுகின்றேன் நான் ஆர்வத்தின் தொடக்கத்தைத் தேடுகின்றேன் நான் பேச்சின் சுவையைத் தேடுகின்றேன் நான் மூச்சி்ன் மூலத்தைத் தேடுகின்றேன் நான் இளமையின் பொலிவைத் தேடுகின்றேன் நான் பழமையின் வலிவைத் தேடுகின்றேன் நான் அமிழ்தின் இனிமையைத் தேடுகின்றேன் நான் அழகின் இயற்கையைத் தேடுகின்றேன் நான் தாயின் பரிவைத் தேடுகின்றேன் நான் சேயின் மழலையைத் ...