image-27586

இணைய வழி ஊடகங்களிலும் இந்தித்திணிப்பு! தமிழகக்கட்சிகள் உறங்குவது ஏன்? – இலக்குவனார் திருவள்ளுவன்

இணைய வழி ஊடகங்களிலும் இந்தித்திணிப்பு! தமிழகக்கட்சிகள் உறங்குவது ஏன்?   இந்திய விடுதலைக்கு முன்னரே இந்தித்திணிப்பிற்குக் கால் கோளிடப்பட்டது. அதன் ஒரு பகுதிதான் இந்திப்பரப்புரை அவை(இந்திப்பிரச்சாரசபா). இந்தியா விடுதலை பெற்ற பின்னர்  இந்தித்திணிப்பு என்பது நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாகப்  பேராயக்கட்சியால்(காங்கிரசால்) செயல்படுத்தப்பட்டது. இன்றைய நரேந்திரர்(மோடி) ஆட்சியில் வெகு விரைவாக இந்தித்திணிக்கப்பட்டு வருகிறது.   வாடிக்கையாளர்   நல மையங்கள் அல்லது ...
image-27580

நினைவுகூர் நாள் 2016

நினைவுகூர் நாள் 2016   ஊடகப்பணியாளர்கள் அடக்குமுறைக்குள்ளும் உயிர் அச்சுறுத்தல்களுக்கு மத்தியிலும் இனத்திற்காகவும் மொழிக்காகவும் தம் ஊடகப் பணிக்காகவும் இன உணர்வோடும்  ஒப்படைப்புஉணர்வோடும் செயற்பட்டு உண்மையை வெளிப்படுத்தினர்; இதனால் படுகொலை செய்யப்பட்ட ஈழத் தமிழ் ஊடகப்பணியாளர்களை நினைவுகொள்ளும் வகையில் தற்போதும் பல அழுத்தங்களுக்கு மத்தியிலும் மக்களுக்குச் சரியான தகவல்கள் சென்றடைய வேண்டும் என்ற வேணவாவுடன், துணிவோடும் ஒப்படைப்புஉணர்வோடும், ...
image-27568

இந்து இளைஞர் சங்கம் கம்பளி ஆடைகள் நன்கொடை

இந்து இளைஞர் சங்கம் கம்பளி ஆடைகள் நன்கொடை      குளிர் காலத்தை முன்னிட்டு இனிய வாழ்வு இல்லச் சிறார்களுக்குக் கம்பளி ஆடைகள் தந்துதவுமாறு  அதன் பொறுப்பாளர்கள் வேண்டினர்.  வேண்டுகோளுக்கு அமைவாக வட்டுக்கோட்டை இந்து வாலிபர் சங்கத்தினால் உரூ.38300 பெறுமதியான 50 கம்பளி ஆடைகள் கார்த்திகை 18, 2047 /  3.12.2016 சனிக்கிழமை இனிய வாழ்வு இல்லச் சிறார்களிடம் கையளிக்கப்பட்டன. athangav@sympatico.ca
image-27561

திருவள்ளுவர் காட்டும் வாழ்க்கை முறை – குறளேந்தி ந.சேகர்

திருவள்ளுவர் காட்டும் வாழ்க்கை முறை உலகம் உய்ய வழிகாட்டியிருக்கும் தெய்வப் புலவர் திருவள்ளுவரது திருக்குறள் உலக வாழ்வியல் நூலாகவும் மனித குலத்திற்கு வழிகாட்டிக் கைந்நூலாகவும் திகழ்ந்து வருகிறது.   திருவள்ளுவர் காட்டும் வாழ்க்கை முறை நம் மனித குலத்திற்கு மிகவும் இன்றியமையாததாக உள்ள கடவுளைப் பற்றி எடுத்த எடுப்பிலேயே வழிகாட்டுகின்றது.   இதில் என்ன வியப்பென்றால், திருவள்ளுவர் காலத்தில் பல ...
image-27559

மாணவர் ஆற்றுப்படை 2/6 – பேராசிரியர் சி.இலக்குவனார்

மாணவர் ஆற்றுப்படை – பேராசிரியர் சி.இலக்குவனார் 2/6   என்றே அலமரும் இளைஞனை நோக்கி “அயரேல் வருந்தேல் அடைவாய் உதவி; தமிழகச் செல்வர் தம்இயல் அறிவேன்;                            35 அறம்பல புரிந்து அறவோர்க் களித்துத் தமிழைக் கற்றுத் தமிழ்ப்பணி புரிந்து கல்விக் கூடம் காண்தக அமைத்து நாடும் நலம்பெற நல்லன புரியார்; அழியாப் புகழை அடைய விரும்பார்                               40 உரையும் பாட்டும் உடையார் அன்றி மறையிலை போல் மாய்வோர் பலரே; அறுவகைச் சுவையும் ...
image-27553

பிரான்சு பாராளுமன்ற ஆய்வுக்குழுவுடன் நாடுகடந்த தமிழீழ அரசாங்கச் சார்பாளர்கள் சந்திப்பு

 தமிழர்களுக்கான பிரான்சு பாராளுமன்ற ஆய்வுக்குழுவினை நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் சார்பாளர்கள் சந்தித்தனர்!   பிரான்சு பாராளுமன்ற உறுப்பினர்களது தமிழர்களுக்கான ஆய்வுக்குழுவினை நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் சார்பாளர்கள் குழு சந்தித்துள்ளது.   பிரான்சு பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கின்ற பல்வேறு கட்சி உறுப்பினர்களை உள்ளடக்கியதாக இந்த ஆய்வுக்குழுவின் தலைவி மரி  சியார்சு புவே அவர்களுடன் இச்சந்திப்பு இடம்பெற்றிருந்தது.   பிரான்சு பாராளுமன்ற வளாகத்தில் இடம்பெற்றிருந்த ...
image-27547

நோபல் பரிசாளர் பன்முகக்கலைஞர் பாடலர் பாபு தைலன் -சந்தர் சுப்பிரமணியன்

நோபல் பரிசாளர் பன்முகக்கலைஞர்  பாடலர் பாபு தைலன் (Bob Dylan)   வழக்கம்போல் 2016-ஆம் ஆண்டுக்கான நோபல்பரிசு குறித்த செய்திகள் வரத்தொடங்கிய கடந்த ஒரு மாதக்காலத்தில், பரிசாளர்கள் பட்டியல் குறித்த பல தகவல்கள் ஊடகங்களில் உலவத் தொடங்கின. நோபல் பரிசுகளில் மிக முதன்மையான பரிசான இலக்கியப்பரிசு இந்த ஆண்டு யாருக்கு என்று அதனதன் நோக்கில் அலச ஆரம்பித்தது ...
image-27540

உவமைக் கவிஞர் சுரதா – எழில்.இளங்கோவன்

உவமைக் கவிஞர் சுரதா   காதல் எப்படிப்பட்டது? வள்ளுவரைப் பின்பற்றிச் சொல்கிறார் சுரதா, “மலரினும் மெல்லியது காதலே”. காதல் தலைவி தன் தலைவனைப் பார்க்கிறாள். மகிழ்ச்சி மேலிடுகிறது. அதை அவனிடமே சொல்கிறாள் - இப்படி, “சுடர் மின்னல் கண்டு தாழை மலர்வதுபோலே உனைக்கண்டு உள்ளம் மகிழ்ந்தேனே”. கவிஞர் சுரதாவின் இந்தப் பாடல் வரிகளின் வயது 58. ஆனால் இன்னமும் இளமையாகவே இருக்கிறது. காலையில் சூரியனைப் பார்த்து ...
image-27538

வ.உ.சிதம்பரனாரின் மெய்யறம் 37(2.07) : பரத்தையை விலக்கல்

(வ.உ.சிதம்பரனாரின் மெய்யறம் 36 (2.06) தொடர்ச்சி)     மெய்யறம் இல்வாழ்வியல் 37(2.07) பரத்தையை விலக்கல்   பரத்தை யின்பினைப் பலர்க்கும் விற்பவள். பரத்தை உடலின்பத்தைப் பலருக்கும் விற்பவள். மதுசூ திரண்டினும் பொதுமகள் கொடியள். எல்லோருக்கும் சொந்தமாகக் கூடிய அவள் மது, சூது இவ்விரண்டை விடத் தீமை தரக் கூடியவள். 363.அவணடை யுடைநோக் காதியா லழிப்பாள்; அவள் மீது நம் கவனம் சென்றால் நம்மை முற்றிலும் அழிப்பாள். இன்பந் ...
image-27535

பேராசிரியர் சி.இலக்குவனாரின் பன்முக ஆளுமை திருக்குறள் ஆராய்ச்சி 4/6

(பேராசிரியர் சி.இலக்குவனாரின் பன்முக ஆளுமை : திருக்குறள் ஆராய்ச்சி 3/6 தொடர்ச்சி)   பேராசிரியர் சி.இலக்குவனாரின் பன்முக ஆளுமை திருக்குறள் ஆராய்ச்சி 4/6   அருங்கேடும் கேடறியாமையும் நல் விளைச்சலுக்கு நாடு கேடுகளின்றி இருக்க வேண்டும் என்பதை (குறள் 732) விளக்கும்பொழுது பிறரிடமிருந்து மாறுபட்டு, ‘‘பெருவெள்ளம், நிலநடுக்கம், கடல்அலைப்பு, எரிமலை முதலிய இயற்கைப் பொருள்களால் உண்டாகும் கேடுகள் அற்றிருக்க வேண்டும்’’ என இயற்கைஅறிவியல் ...
image-27531

தமிழ்ச் செல்வங்கள்: ஒல் – முது முனைவர் இரா. இளங்குமரன்

தமிழ்ச் செல்வங்கள்: ஒல்    'ஒல்' என்பது ஓர் ஒலிக் குறிப்பே! கல் என வீழ்ந்த அருவி 'ஒல்' என ஆறாய்த் தவழ்கின்றதாம்! பரஞ்சோதியார் படைப்பு இது! ஒல்லெனத் தவழ்வது சமவெளியில் அன்று! துள்ளி வரும் காட்டில்! அதனால், 'கானத்து ஒல்லெனத் தவழ்ந்து'' என்றார். மக்கள் செவியில் தென்னை, பனை ஆகியவற்றின் கீற்று காற்றில் ஆடுதல் 'ஒல்' ...
image-27528

பேராசிரியர் சி.இலக்குவனாரின் தமிழ்ப்பணிகள் – தொகுப்புரை 4/7 – இலக்குவனார் திருவள்ளுவன்

(பேராசிரியர் சி.இலக்குவனாரின் தமிழ்ப்பணிகள் – தொகுப்புரை 3/7 தொடர்ச்சி) வெ.ப.சு.தமிழியல் ஆய்வு மையம், தமிழ்த்துறை, ம.தி.தா.இந்துக்கல்லூரி திருநெல்வேலி   பேராசிரியர் சி.இலக்குவனாரின் தமிழ்ப்பணிகள் -பன்னாட்டுக் கருத்தரங்கம் கட்டுரைத் தொகுப்பு நூல் தொகுப்புரை 4/7   தொல்காப்பியம் முழுமைக்கும்  தெளிவும் எளிமையும் வாய்ந்த விளக்க நடை மூலம் விழுமிய ஆராய்ச்சி உரை வழங்கியுள்ளார் இலக்குவனார்; பெயர்க்காரணம், முறைவைப்பு ஆகியவற்றை நடைநலத்துடனும் மதிநுட்பத்துடனும் விளக்குகிறார்; தொல்காப்பியர் கருத்து இக்காலத்திலும் தேவையாகிறது ...