image-26971

சிறாருக்கான மாநில அளவிலான முதல் சதுரங்கப் போட்டி,கீழக்கரை

சிறாருக்கான மாநில அளவிலான  முதல் சதுரங்கப் போட்டி   மொத்தப் பரிசுத் தொகை :உரூ. 48,000/ + 84 வெற்றிக்கிண்ணங்கள்   இராமநாதபுரம் மாவட்டச் சதுரங்கக் கழகமும் கீழக்கரை முகம்மது சதக்கு பொறியியற் கல்லூரியும் இணைந்து நடத்தும் மாநில அளவிலான  குழந்தைகளுக்கான முதல் சதுரங்க விளையாட்டுப் போட்டி   கீழக்கரை முகம்மது சதக்கு பொறியியற் கல்லூரியில்   கார்த்திகை 04 & 05, 2047 ...
image-26945

அணிதிரள்வோம் ஆர்ப்பாட்டத்தில்! – சுப.வீ.

அணிதிரள்வோம் ஆர்ப்பாட்டத்தில்!  இரா.சே.ச.(ஆர்.எசு.எசு.).,பா. ச.க. முதலான சங்கப் பரிவாரங்களின் அடாவடித்தனமும், மிரட்டல்களும் நாளுக்கு நாள் கூடிக்கொண்டே போகின்றன. அதன் ஒரு பகுதிதான் மூத்த இ.ஆ.ப. அதிகாரி கிருத்துதாசு காந்தியின் மீது ஏவி விடப்பட்ட வன்முறை மிரட்டல்கள்.  யாருக்கோ நிகழ்ந்த ஒன்று என எண்ணி நாம் கவலையற்று இருந்தால் அது நாளைக்கு நம் ஒவ்வொருவருக்கும் நடக்கக்கூடும். எனவே கருத்து வேறுபாடுகள், ...
image-26937

அடையா ளத்தை இழப்பதற்கா பாடுபட்டோம்! – கவிஞர் அம்பாளடியாள்

அடையா ளத்தை  இழப்பதற்கா பாடுபட்டோம்!   என்னுயிரே! பொன்மொழியே! உப்பில்லாப் பண்டமென ஒதுக்கி வைக்கும் ஊராரின் கண்களுக்கு விருந்து வைக்க இக்கணமே நீவருவாய் என்றன் நாவில் இன்றமிழின் ஆட்சியோங்கத் தடைகள் நீங்கும்! எப்பொழும் உன்னையன்றி என்றன் கண்கள் ஏறெடுத்துப் பார்த்ததில்லை எதையும் இங்கே! தப்பான பாடலுக்கோர் பரிசு தந்தால் தமிழ்மீதே ஆணையதை வாங்க மாட்டேன்! நக்கீரன் பரம்பரையில் உதித்த என்றன் நரம்பறுந்து போனாலும் உறங்க மாட்டேன்! திக்குமுக்காய் ஆடவைக்கும் கேள்விக் கெல்லாம் திமிராகப் பதிலளிக்கும் திறனைத் ...
image-26933

வலைப்பூக்கள் வழியே வாசிப்புப் போட்டி 2016

வலைப்பூக்கள் வழியே வாசிப்புப் போட்டி 2016   யாழ்பாவாணன் வெளியீட்டகம்(http://www.ypvnpubs.com/), யாழ் மென்பொருள் தீர்வுகள் (http://www.yarlsoft.com/) இணைந்து தமிழர் மத்தியில் தமிழறிஞர்களின் பொத்தகங்களைப் படிக்க (நூல்களை வாசிக்க) ஊக்குவிக்கும் பணிச் செயலாகப், பொத்தகங்களைப் படித்தால் (நூல்களை வாசித்தால்) பரிசில் வழங்கும் போட்டியை அறிமுகம் செய்கின்றனர்.   எமது மின்நூல் களஞ்சியத்தில் உள்ள மின்நூல்களைப் பதிவிறக்கி வாசிக்க வேண்டும். தாங்கள் ...
image-26928

பெண்ணடிமை உணர்வினர் பேதையர் என்றிடுவோம்! – தி. வே. விசயலட்சுமி

பெண்ணடிமை உணர்வினர் பேதையர் என்றிடுவோம்! கண்ணின் மணியொக்கும் காரிகையர் தம்முரிமை திண்ணமுறக் காப்போம் தெளிந்து. மங்கையர் மாண்பை மதித்துணராப் பேதையர் மங்கி யழிவரே தாழ்ந்து. பெண்ணின் பெருமையைப் பேணாதார் புல்லர்கள் கண்ணிருந்தும் கண்ணற் றவர். இருவர் மனம்இணைந்தால் பெண்ணடிமை எண்ணம் வருமா? ஆய்ந்துநீ பார் பெண்ணை மதியாத பேதையைப் பாவியாய் மண்ணாய் மரமாய் மதி. ஆடாக அஞ்சியஞ்சி வாழ்தலினும் சிங்கமெனப் போராடி வாழ்பவளே பெண். ...
image-26919

தமிழ் நூல்கள் எவ்வாறு மறைந்தன? 3/4 : மயிலை சீனி.வேங்கடசாமி

(தமிழ் நூல்கள் எவ்வாறு மறைந்தன? 2/4 தொடர்ச்சி) தமிழ் நூல்கள் எவ்வாறு மறைந்தன? 3/4 செல் அரித்தல்   நமது நாட்டுக்குச் சாபக்கேடாக இயற்கையில் அமைந்துள்ள சிதல் என்னும் பூச்சிகள், ஏட்டுச் சுவடிககளுக்குப் பெரும்பகையாக இருக்கின்றன. வன்மீகம் என்றும், செல் என்றும் பெயர்பெற்ற எறும்பு இனத்தைச் சேர்ந்த இப்பூச்சிகள் துணிமணிகள், மரச்சாமான்கள் முதலியவற்றை அரித்துவிடுவது போலவே, ஏட்டுச் சுவடிகளையும் தின்று ...
image-26916

பாட்டின் இயல்பு என்ன? 3/3 – மறைமலையடிகள்

(பாட்டின் இயல்பு என்ன? 2/3 தொடர்ச்சி)   பாட்டின் இயல்பு என்ன? 3/3   இனி, இங்ஙனம் இயற்றப்படுகின்ற பாட்டு உலக இயற்கையழகுடன் பெரிதும் பொருந்தி நடத்தல் வேண்டும். இன்னும் இதனை நுணுகி நோக்குமிடத்துப் பாட்டுப் பாடுதலில் வல்லவனான நல்லிசைப் புலவனுக்கும் உலக இயற்கையினைப் பலவகை வண்ணங்களாற் குழைத்து வரைந்து காட்டுகின்ற ஓவியக்காரனுக்கும் ஒற்றுமை மிக உண்டென்பது தெள்ளிதிற் புலப்படும். ...
image-26911

பார்வை இல்லார் வாழப் பாடுவோமா? – கெருசோம் செல்லையா

பார்வை இல்லார் வாழப் பாடுவோமா? உருவில் அழகு குறையுமானால், ஒப்பனை செய்ய ஓடுகிறோம்! தெருவில் அழுக்கு நிறையுமானால், தென்படுவோரைச் சாடுகிறோம்! எருவில்லாத பயிரைப் பார்த்து, ஏங்கலும் கொண்டு வாடுகிறோம். கருவிலிருந்தே பார்வை இல்லார், களிப்புடன் வாழப் பாடுவோமா? கெருசோம் செல்லையா
image-26923

வ.உ.சிதம்பரனாரின் மெய்யறம் 1.32 – இல்லமைத்தல்

(வ.உ.சிதம்பரனாரின் மெய்யறம் – 1.31. தொடர்ச்சி)   மெய்யறம் இல்வாழ்வியல் 32. இல்லமைத்தல் அகல நீள மரைக்கான் மைல்கொளல். வீடு கட்டுவதற்கான மனை 20 புதுக்கோல்(மீட்டர்) நீளமும் 20 புதுக்கோல்(மீட்டர்) அகலமும் உடையதாக இருக்க வேண்டும். ஈரிரு புறமதி லெதிரெதிர் வழிசெயல். வீட்டின் நான்கு புறமும் மதில் சுவர்கள் கட்டப்பட வேண்டும். எதிரெதிராக வாசல்கள் (முன் வாசல், பின்வாசல்) இருக்கவேண்டும். மத்தியிற் புறமதின் மட்டமே ...
image-26458

ஆரியச் சூழ்ச்சியும் தந்தை பெரியார் காட்டும் வழியும் 6/9: பெங்களூரு முத்துச்செல்வன்

(ஆரியச் சூழ்ச்சியும் தந்தை பெரியார் காட்டும் வழியும் 5/9 தொடர்ச்சி) ஆரியச் சூழ்ச்சியும் தந்தை பெரியார் காட்டும் வழியும்  6/9   தமிழ் தன் ஆற்றலால் செவ்வியல் மொழி ஆகவில்லை; சமற்கிருதம், பிராகிருதம் ஆகிய மொழிகளிடமிருந்து கடன் பெற்று வளர்ந்து செவ்வியல் மொழி எனப்படுகின்றது என்றும் தொல்காப்பியம் பரத முனிவரைப் பின்பற்றி எழுதப்பட்ட நடனப் பாடல்களுக்கான தொகுப்பேயன்றி இலக்கண நூலன்று ...