image-33149

நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் மனித உரிமை மாநாடு

நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் மனித உரிமைகள் அமைச்சு நடாத்தும் மனித உரிமை மாநாடு  பன்னாட்டு மனித உரிமை நாள் 2017 மிடில்செக்சு ஞாயிறு  திசம்பர் 10, 2017 காலை 9.00 – மாலை 5.30 முன்பதிவுக் கட்டணம்  £10  மட்டும் (கட்டாயம்) தொடர்பு : நிகழ்ச்சி ஒருங்கிணைப்புக் குழு மணிவண்ணன் நா.உ. மனித உரிமைஅமைச்சர், நா.க.த.அ. 07869133073 ஆறுமுகம் நா.உ.  07832 954281 நிர்மலர் நா.உ. 07877 204123 இயோகலிங்கம் நா.உ.  07929 349302 குசியந்தன்  07476928228 சோபனா  07535930314 சிவகாந்தன் ...
image-33139

தமிழ்நலப்பதிவர்களுக்கு இலக்குவனார் விருது

தமிழ்நலப்பதிவர்களுக்கு இலக்குவனார் விருது இணையம் வழியாகத் தமிழ்ப்பணி ஆற்றுநர்க்கு ‘அகரமுதல’ சார்பில் இலக்குவனார் இலக்கிய இணையமும் தமிழ்க்காப்புக்கழகமும் இணைந்து இலக்குவனார் விருது வழங்க உள்ளன. மரபுத்தமிழில்  பாடல்கள் எழுத ஊக்குவித்தும் கற்பித்தும் எழுதியும் சிலர்  முகநூல் குழுக்கள் அல்லது பிற தளங்கள் வழித் தொண்டாற்றி வருகிறார்கள். பிழையின்றி எழுதுவதற்கு வழிகாட்டி நல்ல தமிழை வளர்க்கச் சிலர் உறுதுணையாக உள்ளனர். மிகச்சிலர் பிழையின்றியும் ...
image-33089

ஐயோ தமிழுக்கு ஆபத்து! – சுப.வீரபாண்டியன்

ஐயோ தமிழுக்கு ஆபத்து! ஓர் இனத்தின் மொழியை அழித்தால், அந்த இனம் அழிந்துபோகும். அந்த வேலையில் இப்பொழுது மத்திய பா.ச.க. அரசு இறங்கித் தமிழை அழிக்கும் வேலையைச் செய்து கொண்டிருக்கிறது. அதற்குத் துணையாக இன்றைய அ.தி.மு.க.வின் எடப்பாடி அரசும் ‘எட்டப்ப’ வேலையைச் செய்து கொண்டிருக்கிறது. அண்டைய இரு மாநிலங்களான கேரளா, கருநாடகம் அந்தந்த மாநில மொழிகளையே பாடத்திட்டத்தில் கட்டாயமாக்கி இருக்கின்றன. ஆனால் தமிழகத்தின் ...
image-33095

காக்கைவிடு தூது பனுவல் உணர்த்தும் இந்தியெதிர்ப்புப் போராட்ட அரசியல் 1/4 – கி.சிவா

காக்கைவிடு தூது பனுவல் உணர்த்தும் இந்தியெதிர்ப்புப் போராட்ட அரசியல் 1/4 முன்னுரை  தொல்காப்பியர் காலம்தொடங்கி இன்றுவரையிலும் தமிழர்களின் வாழ்வுடன் ஒன்றிணைந்திருப்பது ‘தூது’ என்னும் இலக்கியமாகும். இன்னும் சொல்லப்போனால், மனித இனம் தோன்றிய காலத்திலேயே தூதும் தோன்றியிருக்கவேண்டும். அதன் வளர்ச்சியாக, 14ஆம் நூற்றாண்டில் உமாபதி சிவாச்சாரியாரால் ‘நெஞ்சுவிடு தூது’ எனும் சிற்றிலக்கியம் இயற்றப்பட்டு வெளியானது. காலப்போக்கில் புலவர்கள் தத்தமது தேவைக்கேற்பத் தூது ...
image-33080

வள்ளுவர் கண்ட இல்லறம் – சி.இலக்குவனார் : 2.

(வள்ளுவர் கண்ட இல்லறம் – சி.இலக்குவனார்:1. தொடர்ச்சி) வள்ளுவர் கண்ட இல்லறம் – சி.இலக்குவனார் : 2.    வள்ளுவர் கண்ட இல்லறம் அல்லது காதல் வாழ்க்கை ங. களவியல்  (வரிசை எண்கள் / எழுத்துகள் ‘ங’கரத்திலிருந்து குறிக்கப் பெறுகின்றன.) இல்வாழ்க்கை      இல்லாளோடு கூடி வாழ்தலே இல்வாழ்க்கை எனப்படும். 'இல்லாள்' என்பது வீட்டிற்குரியாள் எனும் பொருளைத்தரும். 'இல்லான்' என்பதோ ஒன்றும் இல்லான், வறியன் ...
image-33078

இலக்கியம் கூறும் தமிழர்  வாழ்வியல் (சங்கக் காலம்)  05–  சி.இலக்குவனார்

இலக்கியம் கூறும் தமிழர்  வாழ்வியல் (சங்கக் காலம்)  05 நாடும் நகரங்களும்    இயற்கை யெல்லைகளால் பிரிக்கப்பட்டுத் தமக்கென ஒரு மொழியைக் கொண்டு மக்கள் வாழ்ந்த நிலப்பகுதியை ‘நாடு’ என்று அழைத்தனர் தமிழக முன்னோர். அப் பகுதி அங்கு வழங்கும் மொழியால் வேறுபடுத்தி அழைக்கப்பட்டது.  ‘தமிழ்’வழங்கும் பகுதி ‘தமிழ்நாடு’ என்று குறிப்பிடப்பட்டது. இவ்வாறு, மொழியை யடுத்தே நாடுகள் ...
image-33075

சாமியே வள்ளுவனே சரணம் ! – சந்திரசேகரன் சுப்பிரமணியம்

சாமியே வள்ளுவனே சரணம் ! வள்ளுவன் சரணம்; ஐயன் சரணம் ஐயனே வள்ளுவனே; வள்ளுவனே நம்ஐயனே வள்ளுவனே ஐயனே; ஐயனே வள்ளுவனே வள்ளுவனே வருக! வாய்மை தருக! வாய்மை தருக!  வள்ளுவனே வருக! தாயே சரணம் தந்தையே சரணம் தந்தையே சரணம் தாயே சரணம் ஆதியே சரணம் பகவன் சரணம் பகவன் சரணம் ஆதியே சரணம் தமிழே வருக! குறளே வருக!; குறளே வருக! தமிழே வருக! முப்பால் சரணம்; முத்தமிழ் சரணம்; முத்தமிழ் சரணம்; ...
image-33065

புதிய பாடத்திட்டம்:  இந்தியச்சார்புத் திட்டம் வேண்டவே வேண்டா! – இலக்குவனார் திருவள்ளுவன்

புதிய பாடத்திட்டம்  : இந்தியச்சார்புத் திட்டம் வேண்டவே வேண்டா!  தமிழக அரசு புதிய பாடத்திட்ட வரைவை வெளியிட்டுள்ளது. 2017 ஆம் ஆண்டு முடிய உள்ள நிலையில் 2017 ஆம் ஆண்டிற்கான வரைவாக அறிமுகப்படுத்துவது ஏன்? மத்திய அரசின் பொதுத்தேர்விற்காக இவ்வாண்டுத் திட்டமாகக் குறித்துள்ளனர் எனில், கல்வியாண்டு முடிந்த சூழலில்  எவ்வாறு புகுத்துவர் என்று தெரியவில்லை.  பாடத்திட்ட வரைவை 22.05.2017 ...
image-33084

சொல்லின் செல்வர் இரா.பி.சேது(ப்பிள்ளை) – எழில்.இளங்கோவன்

சொல்லின் செல்வர் இரா.பி.சேது(ப்பிள்ளை) கவியோகி சுத்தானந்த பாரதியார் ஒருவரை இப்படிப் பாராட்டுகிறார்: “செந்தமிழுக்குச் சேதுப்பிள்ளை. தமிழின் இன்பம் நுகர வேண்டுமானால், சேதுப்பிள்ளையின் செந்தமிழைப் படிக்க வேண்டும்” யார் இந்தச் சேதுப்பிள்ளை? “தமிழறிஞர்களுள் மிகச் சிறந்த நாவீறு படைத்தவராக விளங்கியவர் ‘சொல்லின் செல்வர்’ இரா.பி.சேது(ப்பிள்ளை). சொல்மாரிச் செந்தமிழ்ச் சொற்கள் நடம் புரியும். எதுகையும் மோனையும் பண்ணிசைக்கும். சுவைதரும் கவிதைகள் மேற்கோளாகும். எடுப்பான நடையில் நின்று, நிதானித்து அவரின் ...
image-33061

ஒற்றுமையால் ஒடுக்குவோம்! – தி.வே.விசயலட்சுமி

ஒற்றுமையால் ஒடுக்குவோம்!   குழந்தையும் தெய்வமும் குணத்தால் ஒன்றே என்பர். குழந்தைகளும், தெய்வச் சிலைகளும் திருடப்படுவதும், விலைக்கு விற்கப்படுவதுமாகிய நிகழ்வுகள் நாடெங்கும் அடிக்கடி நடைபெற்று வருகின்றன. இதுபோன்ற குற்றங்கட்குத் தண்டனை விரைவில் கிடைத்து விடும் என்ற அச்சம் குற்றவாளிகளுக்கு இல்லாமற் போனது. அண்மையில் மதுரை சத்தியமங்கலத்தைச் சேர்ந்த பவித்திரா என்ற ஐந்து அகவைச் சிறுமி, அரசு மருத்துவ மனைமுன் விளையாடிக் ...
image-33054

வா, தமிழா! தமிழா! – நக்கீரன் பாலசுப்பிரமணியம்

வா, தமிழா! தமிழா!   வா, தமிழா தமிழா ஒன்று கூடிடுவோம் கேள், தமிழா தமிழா துயிலெழுந்திடுவோம் வாளெடுத்து வா தோழா அந்தப் பகையை வென்று முடிப்போம் தோள்கள் சேர்த்து வா தோழா நம் தேசத்தைக் காத்திடுவோம் எமனையும் கண்டு அஞ்சோம் பனங்காட்டுப் புலியிது என்போம் நெற்றியில் இந்த மண்ணை நாம் திலகமாகச் சுமந்திடுவோம் வா, தமிழா தமிழா ஒன்று கூடிடுவோம் கேள், தமிழா தமிழா துயிலெழுந்திடுவோம் ஆயிரம் நாடுகள் அன்று நம்மைச் சுற்றியழித்தது பழங்கதையே தீரத்துடன் நாம் ...
image-33058

தமிழ்த் தென்றல் – 2/2 : கி.ஆ.பெ.

தமிழ்த் தென்றல் 2/2   பெரியாரைக் கொலை செய்யும்படி மறைமலையடிகள் தூண்டினார் என்று அடிகளார்மீது வழக்குத் தொடரப் பட்டிருந்தது. அதைக் கண்டு பெரிதும் கவலைப்பட்டுப் பல்லாவரத்துக்கு என்னை அழைத்துக்கொண்டு போய் மறைமலையடிகளிடம் ஒரு கடிதத்தை வாங்கச் செய்து அதைப் பெரியாரிடம் காட்டி, அவ்வழக்கைத் திரும்பப்பெறச் செய்தற்கு முதற்காரணமாயிருந்து என்னைத் தூண்டியவரும் திரு, வி. க. அவர்களே யாவார்.   ...