image-28228

கவிஞாயிறு தாராபாரதி 7 & 8 – சந்தர் சுப்பிரமணியன்

(கவிஞாயிறு தாராபாரதி 5 & 6 – தொடர்ச்சி) கவிஞாயிறு தாராபாரதி 7 & 8   சாதியெனும் அமைப்புகளேன்? சங்கம் வைத்துச் சந்தையென மனிதரையேன் தரம் பிரித்தாய்? போதைநிலைப் பொய்க்கணக்கின் போக்கில் இன்று பொதுநிலையே மனக்கணக்காய் போன திங்கு! தீதெனினும் தொடர்கின்ற தீயாய்ச் சாதி! தேசத்தின் கறையிவைதான்! தெரிந்தி வற்றை வீதியிலே தூக்கியெறி! மெய்யாய் நல்ல வேள்விக்கோர் தேதிகுறி! விடியும் என்றார்! (7) மண்புழுவாய்ப் பிறந்திருந்தால் மண்ணைத் தின்னும் மந்திரம்தான் தெரிந்திருக்கும்; ...
image-28264

தனியே பிறந்து தனியே வளர்ந்து தனியே சிறந்த தமிழே! – தேவநேயப் பாவாணர்

தனியே பிறந்து தனியே வளர்ந்து தனியே சிறந்த தமிழே! - தேவநேயப் பாவாணர்     தனியே பிறந்து தனியே வளர்ந்து தனியே சிறந்து தரைமீது தனியே விரிந்து கவையே பிரிந்து கிளையே திரிந்து பலவாக முனிவோர் மொழிந்து முனமே திருந்தி முதனூ லெழுந்த மொழியாகி முருகால் நடந்த சவைமீ தமர்ந்து முகைவாய் மலர்ந்த தமிழாயே கனியா யருந்து முனையே மிகுந்து பயிலா மலுந்தன் மகவோரே கவலா திருந்து ...
image-28231

தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் [ஙாஙா] – இலக்குவனார் திருவள்ளுவன்

(தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் (ஙாங] – தொடர்ச்சி) தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார்  -  3. தமிழ்நலப் போராளி - தொடர்ச்சி  பாவேந்தர் பாரதிதாசன் அவர்களும் பேராசிரியர் இலக்குவனாரும் தமிழ் காக்கும் எண்ணங்களில் ஒன்றுபட்டவர்கள். பாவேந்தரின் தமிழியக்க எண்ணங்களுக்கு வடிவம் தந்தவர் பேராசிரியர்; பாவேந்தர் வகுத்த தமிழ்ப்போராளி இலக்கணத்திற்கு இலக்கியமாகத் திகழ்ந்தவர் பேராசிரியர் எனத் தமிழ் உணர்வாளர்கள் உரைப்பர். அதே நேரம் ...
image-28225

இரவிச்சந்திரனின் ‘வெட்டிக்காடு’ தற்புனைவின் வெளிப்பாடு 1/3 – மு.இளங்கோவன்

இரவிச்சந்திரனின்  'வெட்டிக்காடு' தற்புனைவின் வெளிப்பாடு 1/3 இலக்கிய வடிவமும் பாடுபொருளும் படைப்போரும் ஒவ்வொரு காலத்திலும் வேறுபட்டு வந்துள்ளமையை இலக்கிய வரலாற்றின் தொடர்ச்சியைக் கவனிக்கும்பொழுது அறியமுடிகின்றது. இருபதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் உலகம் முழுவதும் இலக்கியப்போக்குகளில் புதுப்புது மாற்றங்களைக் காணமுடிகின்றது. அதில் ஒன்று தற்புனைவு (Auto Fiction) என்னும் வெளியீட்டு முறை. தன் இளமைக் கால வாழ்க்கையைப் புனைவுகளை இணைத்து ...
image-28260

வேதம் தமிழிலுண்டு! – கவிஞாயிறு தாராபாரதி

வேதம் தமிழிலுண்டு! - கவிஞாயிறு தாராபாரதி   தாயின் கருவறையில் தான்படித்த செந்தமிழைக் கோயில் கருவறைக்குள் கொண்டுசெல்ல முடியாதா?   பொன்னியில் குளித்த புனிதத் திருமொழியைச் சன்னதியில் பாடினால் சாமிக்கா தீட்டுவரும்?   தேவாரம் பிரபந்தம் திருவாசகம் அருட்பா நாவாரப் பாடினால் நாதன் செவி கேளாதா?   தமிழறியும் பெருமாளும் தமிழ்க் கடவுள் முருகனும் அமுதத் தமிழ்கேட்டால் ஆசிதர மறுப்பாரா?   சொற்றமிழால் பாடென்று சுந்தரனை வேண்டிநின்ற நெற்றிக்கண் ஈசனது நேயர் விருப்பம் எது?   ஒதும் மந்திரங்கள் உண்டெந்தன் தாய்மொழியில்; வேதம் தமிழிலுண்டு! வேற்றுமொழி எதற்கிடையில்?  - கவிஞாயிறு தாராபாரதி
image-28223

கவிஞர் வேணு.குணசேகரன் மங்காத மாக்கவிதை நூல் செய்தார்! – சிவ.சூரிய நாராயணன்

கவிஞர் வேணு.குணசேகரன் மங்காத மாக்கவிதை நூல் செய்தார்!   கூடல் திருநகரில் கூடிக் களித்திருந்த பாடல் தொழில்செய்யும் பைந்தமிழ்ச் சங்கத்தார் ஏடுதனில் உள்ளம்மை ஈதென்ன விந்தையென்றே ஈடில் மொழியம்மை இன்னமுத ஊற்றம்மை கேடில் விழுச்செல்வம் கேளாது தந்தம்மை வாடும் களித்தே குணசே கரன்தன்னைப் கூடிக் களித்தே குணசே கரன்தன்னைப் பாடிடச் சொன்னாயே பாட்டேலோர் எம்பாவாய் ! அன்னை இடம்வைத்த ஆலங் குடியானை மின்னும் பிறையானை விண்ணின் நதியானை முன்னைப் பழம்பொருளை முத்துக் கவித்தமிழில் கன்னற் கிணையாக்க் ...
image-28218

திருக்குறள் முழக்கமும் நகைச்சுவை விளக்கமும் : நூலாசிரியர் வெ.அரங்கராசன் உரை

திருக்குறள் முழக்கமும் நகைச்சுவை விளக்கமும் :  நூலாசிரியர் உரை      ஞானப் பெருநூலாம் திருக்குறள் மேடை முழக்கமாக இல்லாமல், வாழ்வியல் வழக்கமாதல் வேண்டும். அந்த ஞானப் பெருநூல் ஞாலம் முழுதும் பரவும் வகை செய்தல் வேண்டும். திருக்குறளின் திருக்குரல்  ஞாலம் முழுதும் ஓங்கி ஒலித்தல் வேண்டும். ஏனெனில், அது ஞாலப் பொதுமை நூல்; வாழ்வியல் பயன்பாட்டு ...
image-28090

திருக்குறள் அறுசொல் உரை: 114. நாணுத் துறவு உரைத்தல்: வெ. அரங்கராசன்

(திருக்குறள் அறுசொல் உரை: 113. காதல் சிறப்பு உரைத்தல் : தொடர்ச்சி) திருக்குறள் அறுசொல் உரை 03. காமத்துப் பால் 14. களவு இயல் நாணுத் துறவு உரைத்தல்   காதலர் தம்தம் காதல் மிகுதியை வெட்கம்விட்டு மொழிதல்   (01-07 தலைவன் சொல்லியவை) 1131 காமம் உழந்து வருந்தினார்(கு), ஏமம்,      மடல்அல்ல(து) இல்லை வலி.       “காதல் வெல்ல, மடல்குதிரை         ஏறுதல்தான் மிகநல்ல வழி”. ...
image-28074

வ.உ.சிதம்பரனாரின் மெய்யறம் 44(2.14). மறவி யொழித்தல்

(வ.உ.சிதம்பரனாரின் மெய்யறம் 43(2.13) - தொடர்ச்சி) மெய்யறம் இல்வாழ்வியல் 44. மறவி யொழித்தல் மறவிதன் கடமையை மனத்திலுன் னாமை. மறவி என்பது தன் கடமையைப் பற்றி மனத்தினில் எண்ணாது இருத்தல் ஆகும். மறவியூக் கத்தின் மறுதலை யாகும். மறவி ஊக்கத்தின் எதிர் நிலை ஆகும். அதாவது உயர்வு பெற வேண்டும் என்ற எண்ணம் இல்லாமை ஆகும். மறவி பலவகை யிறவையு நல்கும். மறவி பல ...
image-28236

பேரா.மறைமலை இலக்குவனார்க்குத் திரு.வி.க. விருதினை முதல்வர் வழங்கினார்.

  பேரா.மறைமலை இலக்குவனார்க்குத் திரு.வி.க. விருதினை முதல்வர்  வழங்கினார். தமிழக அரசின் திருவள்ளுவர் திருநாள்  விழா  சென்னையில், தை 02, 2048 ஞாயிறு  சனவரி 15, 2017 அன்று நடைபெற்றது. அவ்விழாவில் தமிழக முதல்வர், தமிழறிஞர்களுக்கு விருதுகள் வழங்கினார். அதுபோழ்து, தமிழ்த்தென்றல் திருவிக விருதினைப் பேரா.மறைமலை இலக்குவனார்க்கு முதல்வர் பன்னீர்செல்வம் வழங்கினார்.  
image-28175

திருக்குறள் தேனீ வெ.அரங்கராசன் நூல் வெளியீடு – ஒளிப்படங்கள்

திருக்குறள் தேனீ வெ.அரங்கராசனின் 'திருக்குறள் முழக்கமும் நகைச்சுவை விளக்கமும்' நூல் வெளியிட்டவர் : இலக்குவனார் திருவள்ளுவன் தை 02, 2048 ஞாயிறு  சனவரி 15, 2017 உலகத்திருக்குறள் மையம், திருவள்ளுவர் திருநாள் விழா, உயராய்வு எழுச்சி மாநாடு படங்களை அழுத்தின் பெரிதாகக் காணலாம். படங்கள் : பொறி.தி.ஈழக்கதிர்
image-28173

திருவள்ளுவர் திருநாள் – தமிழ்நாட்டரசின் விருதுகள் வழங்கு விழா : சில படங்கள்

தை 02, 2048 ஞாயிறு  சனவரி 15, 2017  சென்னை திருவள்ளுவர் திருநாள் – தமிழ்நாட்டரசின் விருதுகள் வழங்கு விழா :  சில படங்கள் முதல்வர் பன்னீர்செல்வம், விருதுகளை வழங்கினார். விருதுகளும் விருதாளர்களும் திருவள்ளுவர் விருது - புலவர் வீரமணி பெரியார் விருது - பண்ருட்டி இராமச்சந்திரன் அம்பேத்கர் விருது - மருத்துவர் துரைசாமி அண்ணா விருது - கவிஞர் கூரம் துரை காமராசர் விருது - ...