image-27921

செயலலிதா வழியில் பணியாற்றுவேன்! – சசிகலா

செயலலிதா வழியில் பணியாற்றுவேன்! - பொதுச்செயலர் பொறுப்பேற்று சசிகலா பேச்சு   அ.தி.மு.க. பொதுச் செயலாளராகச் சசிகலா  ( மார்கழி 16, 2047 / திசம்பர் 31, 2016 அன்று) பொறுப்பு ஏற்றார்.   இராயப்பேட்டை தலைமைக் கழகத்தில் எம்ஞ்சியார், செயலலிதா படங்களைத் தொட்டு வணங்கி விட்டுப் பொதுச்செயலாளர் இருக்கையில் அமர்ந்த அவர் அ.தி.மு.க. மூத்த தலைவர்களுடன்  நெறியாடல் நடத்தினார். ...
image-27911

தமிழே வாழ்க! – தாராபாரதி

தமிழே வாழ்க!  - தாராபாரதி தமிழே வாழ்க! தாய்மொழி தமிழே! எந்தன் தனிமொழி முதலே, வாழ்க! வாய்மொழி பலவென் றாலும் வழிமொழி நீயே ஆனாய்! காய்மொழி சிலவற் றுள்ளும் கனிமொழி நீதான் என்பேன்! தாய்மொழி தமிழே, எந்தன் தனிமொழி முதலே வாழ்க!   கவிஞர் தாராபாரதி
image-27893

முனைவர் அரணமுறுவல் முதலாண்டு நினைவேந்தல்

மார்கழி 17, 2047 ஞாயிறு சனவரி 01, 2017 காலை 10.30  சென்னைச் செய்தியாளர்கள் சங்கம், சேப்பாக்கம், சென்னை 5 முனைவர் அரணமுறுவல் முதலாண்டு நினைவேந்தல் நினைவு மலர் வெளியீடு   -உலகத்தமிழ்க்கழகம்  
image-27880

மு.முருகேசு எழுதிய ஐக்கூ நூல்கள் வெளியிடப்பட்டன

தமிழ் ஐக்கூ நூற்றாண்டு விழாவில்  மு.முருகேசு எழுதிய ஐக்கூ நூல்கள் வெளியிடப்பட்டன!   சென்னை.  மார்கழி 09,  திசம்.24, பனுவல் புத்தக நிலையமும், தமிழ் ஐக்கூ கவிதை இயக்கமும் இணைந்து நடத்திய தமிழ் ஐக்கூ நூற்றாண்டையொட்டி மு.முருகேசு எழுதிய  ஐக்கூ நூல்கள் வெளியீட்டு விழா திருவான்மியூர் பனுவல் புத்தக நிலையத்தில் நடைபெற்றது.   இவ்விழாவிற்குக் கவிஞர் ஈரோடு தமிழன்பன் தலைமையேற்றார். ...
image-27866

புயலில் அழிந்த ஈழத் தமிழர் முகாம் :மீட்டெடுக்க கொளத்தூர் மணி வேண்டுகோள்!

புயலில் அழிந்த ஈழத் தமிழர் முகாம் மீட்டெடுக்க தமிழீழ ஏதிலியர் உரிமைக் கூட்டமைப்புத் தலைவர் கொளத்தூர் மணி வேண்டுகோள்! அன்பிற்குரியீர்! வணக்கம். வருதா புயலால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் எண்ணிலடங்காதவை. இன்னும் சென்னை மக்கள் வாழ்வு முழுமையாக மீண்டுவிடவில்லை.     புயல் கடந்த அடுத்த நாளிலிருந்து மீட்புப் பணிகள் சென்னையெங்கும் நடைபெற்று வருவதை மறுக்க முடியாது. இன்னும் சீராகாதது புயல் வேகத்தின் ...
image-27861

சித்தர் இலக்கிய தேசியக் கருத்தரங்கம், சென்னை

சித்தர் இலக்கிய மையம்    து. கோ. வைணவக் கல்லூரியின் தமிழ்த்துறை சித்தர் இலக்கிய தேசியக் கருத்தரங்கம்   மார்கழி 15, 2047  வெள்ளிக்கிழமை  30-12-2016  காலை 9.00 மணிமுதல் மாலை 5.30 வரை துவாரகாதாசு கோவர்தன்தாசு வைணவக் கல்லூரி, அரும்பாக்கம், சென்னை  (DG Vaishnav College, Arumbakkam, Chennai – 600 106)    அன்புடன் முனைவர் அரங்க. இராமலிங்கம் பேராசிரியர் & தலைவர் (பணி நிறைவு) சென்னைப் பல்கலைக்கழகம் கோகுல் அடுக்ககம் (ஞ்)சி 4 146, அவ்வை சண்முகம் சாலை இராயப்பேட்டை, சென்னை - ...
image-27855

ஈழத்தமிழர் வாழ்வு குறித்து இரட்டை நிலைப்பாடு வேண்டா! – இலக்குவனார் திருவள்ளுவன்

ஈழத்தமிழர் வாழ்வு குறித்து இரட்டை நிலைப்பாடு வேண்டா!    ஒருவர் தன் கொள்கையை அல்லது கருத்தை மாற்றிக் கொண்ட பின்னர் முன்னர்  அவர் சொன்னதையே பிடித்துத் தொங்கிக் கொண்டிருக்கக்கூடாது. சான்றாகத் தந்தை பெரியார் ஈ.வெ.இராமசாமி இறை மறுப்பாளர் என்ற முறையில்தான் உலகறியப்பட்டவர். ஆனால், தொடக்கத்தில் அவர் சாமியாராகத் திரிந்ததை வைத்துக்கொண்டு அவரை இறைஏற்பாளர் என்ற அளவில் ...
image-27843

ஆள்வினைச்செல்வி சசிகலா மீதான ஆரியத்தாக்குதல் – இலக்குவனார் திருவள்ளுவன்

ஆள்வினைச்செல்வி சசிகலா மீதான ஆரியத்தாக்குதல்     ஊழலற்ற, நேர்மையான தமிழ்நல மக்களாட்சிதான் நமக்குத் தேவை. ஆனால், அதற்கான காலம் இன்னும் கனியவில்லை. எனவே, இருப்பனவற்றுள் ஏற்கத்தக்கதைத்தான் நாம தெரிவு செய்ய வேண்டியுள்ளது. “யார் நல்ல பையன்” என்று கேட்டால், “அதோ கூரை மீது கொள்ளி  வைத்துக்கொண்டுள்ளானே அவன்தான் நல்ல பையன்” என்று சொல்லும் நிலையில்தான், நாமும் நம்நாட்டுக் ...
image-27850

வா.செ.குழந்தைசாமி நினைவஞ்சலிக் கூட்டம், சென்னை

மார்கழி 13, 2047  புதன்கிழமை  28, திசம்பர் 2016 மாலை 4.00 மணி   அண்ணா  பல்கலை வளாகம், சென்னை பேரா. முனைவர். வா.செ.குழந்தைசாமி  நினைவஞ்சலிக் கூட்டம் சி.ஆனந்தன், கணித்தமிழ்ச்சங்கம் கிண்டி  பொறியியல் கல்லூரி முன்னாள் மாணவர் சங்கம் அறிவியல் கழகம் (குறிப்பு: அழைப்பிதழில் தட்டச்சுப்பிழையாக மார்கழி 15 என இடம் பெற்றுவிட்டது. மார்கழி 13 எனத் திருத்திப் படிக்க வேண்டுகின்றோம்.)
image-27847

தேறாத மனத்துக்கு ஆறுதலேது! – தமிழ்சிவா

தேறாத மனத்துக்கு ஆறுதலேது! நிலத் தட்டுகள் இடம்பெயர்ந்து நிலை தடுமாறியது பெயராநிலம் ! எல்லைகள் கடந்து பிள்ளைகளுக்குப் பிணமென்று பேர்வைக்க பீறிட்டுக் கிளம்பியது கடல்! பெருகிய ஓலங்கள் பேரலைகளின் பேய்த்தனமான பேச்சொலியில் நீரணைந்த நெருப்பாயின ! தணியாத தாகத்தில் நீர் குடித்த உடலங்கள் சடலங்கள் என்னும் சட்டை போட்டுக்கொண்டன! கண்ணீர்ச் சுவையில் உவர்ப்பு ஒழிந்து கைப்பு கூடியது.. தொலைந்த  இறகுகள்தேடி அலைந்துகொண்டே இருக்கிறது கலுழ்ந்து கலுழ்ந்து கண்கள் பூத்த காலம்! நச்சு மரங்களை வீழ்த்தியிருக்க வேண்டிய நான் பிள்ளை வரங்களைப் பெயர்த்தேனே என வயிறளைக்கும் அலைகள்! நினைவுகளைக் கடலெனத் ...
image-27838

வணக்கம் யாருக்கு? – இலக்குவனார் திருவள்ளுவன்

வணக்கம் யாருக்கு?     ஆள்வினைச்செல்வி சசிகலாவிற்கு அவரது கட்சித் தொண்டர்களும் பிறரும் வணக்கம் செலுத்துவதுபோலும் அவர் வெறுமனே நிற்பதுபோலும இதழ்களில் சில படங்கள் வருகின்றன. அதைப்பார்த்த நண்பர்கள், 'வணக்கம் செலுத்தினால்  மறு வணக்கம் தெரிவிக்காமல் இருக்கிறாரே!  ‘சின்னம்மா’ என்று பணிவன்புடன் அழைப்பவர்களிடம்  மறு வணக்கம் தெரிவிப்பதுதானே முறை' என்றனர். அதற்கு நான், 'இவர் வணக்கம் செலுத்தாமல் இருந்தால் ...
image-27833

அழுகிப்போன இலங்கைக்குப் புனுகுபூசும் இராம்! – புகழேந்தி தங்கராசு

அழுகிப்போன இலங்கைக்குப் புனுகுபூசும் இராம்!/  'இலங்கையில் நிகழ்ந்த போர்க்குற்றங்கள், மனித உரிமை மீறல்கள் தொடர்பாகப் பன்னாட்டுப் பங்களிப்புடன் கூடிய நடுநிலையான  உசாவல் நடத்தப்பட வேண்டும்' -  என்று ஐ.நா.மனித உரிமைகள் பேரவையில், இலங்கை அரசின்  இசைவுடனேயே, ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டு  ஓராண்டுக்கு மேல் ஆகிவிட்டது. இன்றுவரை, அப்படி ஓர் உசாவல் நடக்கக்கூடும் என்பதற்கான அறிகுறி கூட இல்லை.   சிங்களப் ...