image-26937

அடையா ளத்தை இழப்பதற்கா பாடுபட்டோம்! – கவிஞர் அம்பாளடியாள்

அடையா ளத்தை  இழப்பதற்கா பாடுபட்டோம்!   என்னுயிரே! பொன்மொழியே! உப்பில்லாப் பண்டமென ஒதுக்கி வைக்கும் ஊராரின் கண்களுக்கு விருந்து வைக்க இக்கணமே நீவருவாய் என்றன் நாவில் இன்றமிழின் ஆட்சியோங்கத் தடைகள் நீங்கும்! எப்பொழும் உன்னையன்றி என்றன் கண்கள் ஏறெடுத்துப் பார்த்ததில்லை எதையும் இங்கே! தப்பான பாடலுக்கோர் பரிசு தந்தால் தமிழ்மீதே ஆணையதை வாங்க மாட்டேன்! நக்கீரன் பரம்பரையில் உதித்த என்றன் நரம்பறுந்து போனாலும் உறங்க மாட்டேன்! திக்குமுக்காய் ஆடவைக்கும் கேள்விக் கெல்லாம் திமிராகப் பதிலளிக்கும் திறனைத் ...
image-26933

வலைப்பூக்கள் வழியே வாசிப்புப் போட்டி 2016

வலைப்பூக்கள் வழியே வாசிப்புப் போட்டி 2016   யாழ்பாவாணன் வெளியீட்டகம்(http://www.ypvnpubs.com/), யாழ் மென்பொருள் தீர்வுகள் (http://www.yarlsoft.com/) இணைந்து தமிழர் மத்தியில் தமிழறிஞர்களின் பொத்தகங்களைப் படிக்க (நூல்களை வாசிக்க) ஊக்குவிக்கும் பணிச் செயலாகப், பொத்தகங்களைப் படித்தால் (நூல்களை வாசித்தால்) பரிசில் வழங்கும் போட்டியை அறிமுகம் செய்கின்றனர்.   எமது மின்நூல் களஞ்சியத்தில் உள்ள மின்நூல்களைப் பதிவிறக்கி வாசிக்க வேண்டும். தாங்கள் ...
image-26928

பெண்ணடிமை உணர்வினர் பேதையர் என்றிடுவோம்! – தி. வே. விசயலட்சுமி

பெண்ணடிமை உணர்வினர் பேதையர் என்றிடுவோம்! கண்ணின் மணியொக்கும் காரிகையர் தம்முரிமை திண்ணமுறக் காப்போம் தெளிந்து. மங்கையர் மாண்பை மதித்துணராப் பேதையர் மங்கி யழிவரே தாழ்ந்து. பெண்ணின் பெருமையைப் பேணாதார் புல்லர்கள் கண்ணிருந்தும் கண்ணற் றவர். இருவர் மனம்இணைந்தால் பெண்ணடிமை எண்ணம் வருமா? ஆய்ந்துநீ பார் பெண்ணை மதியாத பேதையைப் பாவியாய் மண்ணாய் மரமாய் மதி. ஆடாக அஞ்சியஞ்சி வாழ்தலினும் சிங்கமெனப் போராடி வாழ்பவளே பெண். ...
image-26919

தமிழ் நூல்கள் எவ்வாறு மறைந்தன? 3/4 : மயிலை சீனி.வேங்கடசாமி

(தமிழ் நூல்கள் எவ்வாறு மறைந்தன? 2/4 தொடர்ச்சி) தமிழ் நூல்கள் எவ்வாறு மறைந்தன? 3/4 செல் அரித்தல்   நமது நாட்டுக்குச் சாபக்கேடாக இயற்கையில் அமைந்துள்ள சிதல் என்னும் பூச்சிகள், ஏட்டுச் சுவடிககளுக்குப் பெரும்பகையாக இருக்கின்றன. வன்மீகம் என்றும், செல் என்றும் பெயர்பெற்ற எறும்பு இனத்தைச் சேர்ந்த இப்பூச்சிகள் துணிமணிகள், மரச்சாமான்கள் முதலியவற்றை அரித்துவிடுவது போலவே, ஏட்டுச் சுவடிகளையும் தின்று ...
image-26916

பாட்டின் இயல்பு என்ன? 3/3 – மறைமலையடிகள்

(பாட்டின் இயல்பு என்ன? 2/3 தொடர்ச்சி)   பாட்டின் இயல்பு என்ன? 3/3   இனி, இங்ஙனம் இயற்றப்படுகின்ற பாட்டு உலக இயற்கையழகுடன் பெரிதும் பொருந்தி நடத்தல் வேண்டும். இன்னும் இதனை நுணுகி நோக்குமிடத்துப் பாட்டுப் பாடுதலில் வல்லவனான நல்லிசைப் புலவனுக்கும் உலக இயற்கையினைப் பலவகை வண்ணங்களாற் குழைத்து வரைந்து காட்டுகின்ற ஓவியக்காரனுக்கும் ஒற்றுமை மிக உண்டென்பது தெள்ளிதிற் புலப்படும். ...
image-26911

பார்வை இல்லார் வாழப் பாடுவோமா? – கெருசோம் செல்லையா

பார்வை இல்லார் வாழப் பாடுவோமா? உருவில் அழகு குறையுமானால், ஒப்பனை செய்ய ஓடுகிறோம்! தெருவில் அழுக்கு நிறையுமானால், தென்படுவோரைச் சாடுகிறோம்! எருவில்லாத பயிரைப் பார்த்து, ஏங்கலும் கொண்டு வாடுகிறோம். கருவிலிருந்தே பார்வை இல்லார், களிப்புடன் வாழப் பாடுவோமா? கெருசோம் செல்லையா
image-26923

வ.உ.சிதம்பரனாரின் மெய்யறம் 1.32 – இல்லமைத்தல்

(வ.உ.சிதம்பரனாரின் மெய்யறம் – 1.31. தொடர்ச்சி)   மெய்யறம் இல்வாழ்வியல் 32. இல்லமைத்தல் அகல நீள மரைக்கான் மைல்கொளல். வீடு கட்டுவதற்கான மனை 20 புதுக்கோல்(மீட்டர்) நீளமும் 20 புதுக்கோல்(மீட்டர்) அகலமும் உடையதாக இருக்க வேண்டும். ஈரிரு புறமதி லெதிரெதிர் வழிசெயல். வீட்டின் நான்கு புறமும் மதில் சுவர்கள் கட்டப்பட வேண்டும். எதிரெதிராக வாசல்கள் (முன் வாசல், பின்வாசல்) இருக்கவேண்டும். மத்தியிற் புறமதின் மட்டமே ...
image-26458

ஆரியச் சூழ்ச்சியும் தந்தை பெரியார் காட்டும் வழியும் 6/9: பெங்களூரு முத்துச்செல்வன்

(ஆரியச் சூழ்ச்சியும் தந்தை பெரியார் காட்டும் வழியும் 5/9 தொடர்ச்சி) ஆரியச் சூழ்ச்சியும் தந்தை பெரியார் காட்டும் வழியும்  6/9   தமிழ் தன் ஆற்றலால் செவ்வியல் மொழி ஆகவில்லை; சமற்கிருதம், பிராகிருதம் ஆகிய மொழிகளிடமிருந்து கடன் பெற்று வளர்ந்து செவ்வியல் மொழி எனப்படுகின்றது என்றும் தொல்காப்பியம் பரத முனிவரைப் பின்பற்றி எழுதப்பட்ட நடனப் பாடல்களுக்கான தொகுப்பேயன்றி இலக்கண நூலன்று ...
image-26350

திருக்குறள் அறுசொல் உரை 108. கயமை : வெ. அரங்கராசன்

(திருக்குறள் அறுசொல் உரை – 107. இரவு அச்சம் தொடர்ச்சி) திருக்குறள் அறுசொல் உரை 02. பொருள் பால் 13. குடி இயல் அதிகாரம் 108. கயமை மானுட அறங்களைப் பின்பற்றாத கீழ்மை மக்களது இழிதன்மை.   மக்களே போல்வர் கயவர்; அவர்அன்ன       ஒப்பாரி யாம்கண்ட(து) இல்.  மக்கள்போல், தோன்றும் கயவரோடு ஒப்பாவார், எவரும் இலர்.   நன்(று)அறி வாரின், கயவர் திருஉடையார்;       நெஞ்சத்(து) அவலம் ...
image-26356

தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் : [ஙூ] 2. போர்முகம் நோக்கிய இளமைப்பாதை -தொடர்ச்சி: இலக்குவனார் திருவள்ளுவன்

(தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார்  2. போர்முகம் நோக்கிய இளமைப்பாதை-தொடர்ச்சி) தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் 2. போர்முகம் நோக்கிய இளமைப்பாதை -தொடர்ச்சி     மேனாடுகளில் படிக்கும் பொழுதே பணியாற்றிக் கல்விச்செலவைத் தம் உழைப்பால் ஈடுகட்டும் நிலையை இக்காலத்தில் பார்க்கின்றோம். ஆனால், அக்காலத்திலேயே அதுவும் பள்ளிமாணவ நிலையிலேயே பேராசிரியர் கல்வி மீதுள்ள ஆர்வத்தினாலும் உழைப்பின் மீதுள்ள மதிப்பாலும் இந்நிலையை மேற் ...