image-25662

யாரெல்லாம் தமிழரையா? – தாமோதரன் கபாலி

யாரெல்லாம் தமிழரையா? யாரெல்லாம் தமிழரையா? அகமறியச் சொல்வீர்! ஐயமின்றிச் சுவைத்துணர்வார் ஆரமுதாம் தமிழை! ஊரெல்லாம் உண்டிடவே உளம்நிறைந்து அழைப்பார்! ஒண்டமிழில் ஓங்கிடவே ஒருமையிலே திளைப்பார்! பேரெல்லாம் நற்றமிழில் பெருகிடவே உரைப்பார்! பிறந்திட்டத் தவப்பயனைப் பெருமையென மகிழ்வார்! பாரெல்லாம் செந்தமிழைப் பரப்பிடவே திகழ்வார்! பண்புடனே நம்மையெல்லாம் பார்த்திடவே அருள்வார்!   தாமோதரன் கபாலி
image-25657

குவிகம் இலக்கிய வாசலின் ஆகத்துமாத நிகழ்வு

ஆவணி 04, 2047 / ஆகத்து 20, 2016   சனிக்கிழமை மாலை 6.30 மணி குவிகம் இலக்கிய வாசலின் ஆகத்துமாத நிகழ்வு அண்மையில் படித்த புத்தகங்கள் - எழுத்தாளர் ச.இராமகிருட்டிணன் இம்மாதக்  கதைவாசிப்பு :- திருமதி இலதா இரகுநாதன் திரு சதுர்புசன் புத்தக அரண்மனை / டிசுகவரி புக் பேலசு எண் 6,  மகாவீரர் வளாகம், முதல்தளம், முனுசாமி சாலை, மேற்கு க.க.நகர், சென்னை - 600078 (பாண்டிச்சேரி விருந்தினர் மாளிகை ...
image-25653

பாசக்கயிறா? வேசக்கயிறா? – இலக்குவனார் திருவள்ளுவன்

பாசக்கயிறா? வேசக்கயிறா?     தமிழ்நாட்டில் இறைநம்பிக்கை சார்ந்து காப்புக்கயிறு கட்டும் பழக்கம் உள்ளது. ‘இரட்சா பந்தன்’ என்பதும் பாதுகாப்பு தரும்  உறவை உறுதிப்படுத்துவதற்கான  காப்புக்கயிறுதான். கீற்றுகளை இணைத்து உருவாக்கப்படுவது பந்தல். முத்துகளை இணைத்து உருவாக்கப்படுவது முத்துப்பந்தல். இவைபோல் உறவுகள் இணைந்த அமைப்பே பந்தம். பாசக்கட்டினைக் குறிக்கும் பந்தம் என்பது தமிழ்ச்சொல்லே. பந்தத்திற்குரியவன் பந்தன் என்றாகியுள்ளது.  ‘இரட்சா பந்தன்’ கொண்டாட்டத்திற்கு ...
image-25644

பாரதியின் பாதையில் நிகழ்வு 03, சென்னை

ஆவணி 02, 2047 / ஆகத்து 18, 2016 மாலை 6.30 விருது வழங்கல் பாரதியார் சங்கம் கிருட்டிணா இனிப்பகம் பாரதிய வித்யாபவன் இரா.காந்தி த.இராமலிங்கம் மெ.சொக்கலிங்கம் இரா.மதிவாணன் விசய்பிரசாந்து மணிமேகலை கண்ணன்
image-25641

தமிழகச்சட்டமன்றத்தை ஆங்கிலமன்றமாக்குவோர் மீது நடவடிக்கை தேவை! – இலக்குவனார் திருவள்ளுவன்

தமிழகச்சட்டமன்றத்தை ஆங்கிலமன்றமாக்குவோர் மீது நடவடிக்கை தேவை!   தமிழ்மக்களுக்கான தமிழ்நாட்டின்சட்டமன்றத்தை ஆங்கில மன்றமாக ஆக்கும் முயற்சியில் தி.மு.க. உறுப்பினர்கள் ஈடுபட்டுவருவது கண்டிக்கத்தக்கது. இது குறித்து அமைதிகாத்து ஆங்கிலக்காவலர்களாக விளங்கும் தி.மு.க. முன்னணியினரும் கண்டிக்கத்தக்கவர்களே! எனவே, விரைவில் தி.மு.க.தலைவர் கலைஞர் மு.கருணாநிதி இவர்களை அழைத்துக் கண்டித்தும் அறிவுறுத்தியும் பொதுவிலும் அறிக்கை விட வேண்டும்.   முதலில் மேனாள் அமைச்சர் பழனிவேல்இராசனின்(P.T.R.) ...
image-25637

இறப்பின்றி வாழலாம் வா! – புதுவைத் தமிழ்நெஞ்சன்

இறப்பின்றி வாழலாம் வா! பட்டுப்போன பனை மரமும் கிளிகளுக்கும் ஆந்தை மரங்கொத்திக்கும் வாழப் பொந்தாகிறது ஏ....மாந்தனே! உயிர்விட்டுப் போனபின் மண்ணோடு மண்ணாகிறாய் இல்லெனில் நெருப்பில் சாம்பலாகிறாய் நீ நினைத்தால் கண்ணற்றவர்களுக்குக் கண்ணாகலாம் மீண்டும் இவ்வுலகை நீ பார்க்கலாம் இருக்கும் போது குருதிக் கொடை இறந்த பின்னர் உறுப்புக் கொடை வள்ளல் ஆகலாம் வா! புதுவைத் தமிழ்நெஞ்சன்
image-25631

திருக்குறள் அறுசொல் உரை – 97.மானம்: வெ. அரங்கராசன்

(திருக்குறள் அறுசொல் உரை – 96. குடிமை தொடர்ச்சி) 02. பொருள் பால் 13. குடி இயல் 97. மானம் வாழ்விலும், தாழ்விலும், தம்மதிப்பை, மானத்தைத் தாழவிடாது காத்தல்     இன்றி யமையாச் சிறப்பின ஆயினும்,     குன்ற வருப விடல்.         தேவையானவை என்றாலும், மானம்         கெடவரின், ஏற்காது கைவிடு.   சீரினும், சீர்அல்ல செய்யாரே, சீரொடு      பேர்ஆண்மை வேண்டு பவர்.         ...
image-25634

எத்தனை எத்தனை அறமற்ற செயல்கள்! – இராமலிங்க வள்ளலார்

எத்தனை எத்தனை  அறமற்ற செயல்கள்! (மனுநீதிச்சோழன் தெரிவிப்பதாக வள்ளலார் கூறும் அறமற்ற செயல்கள்) நல்லோர் மனத்தை நடுங்கச் செய்தேனோ! வலிய வழக்கிட்டு மானங் கெடுத்தேனோ! தானங் கொடுப்போரைத் தடுத்து நின்றேனோ! கலந்த சினேகரைக் கலகஞ் செய்தேனோ! மனமொத்த நட்புக்கு வஞ்சகஞ் செய்தேனோ! குடிவரி யுயர்த்திக் கொள்ளை கொண்டேனோ! ஏழைகள் வயிறு எரியச் செய்தேனோ! தருமம் பாராது தண்டஞ் செய்தேனோ! மண்ணோரம் பேசி வாழ்வழித்தேனோ! உயிர்க்கொலை செய்வோர்க்கு உபகாரஞ் செய்தேனோ! களவு செய்வோர்க்கு உளவு சொன்னேனோ! பொருளை ...
image-25627

வள்ளுவர் வகுக்கும் உழைப்பு நெறியே உயர்வானது – இலக்குவனார் திருவள்ளுவன்

வள்ளுவர் வகுக்கும் உழைப்பு நெறியே உயர்வானது   அறநெறிகளைத் தொகுத்துத் தரும் திருவள்ளுவர், உயர்வுதாழ்வு கற்பிக்கும் தீய முறைக்கு எதிரானவற்றையும் ஆங்காங்கே பதியத் தவறவில்லை. இதன் காரணம், தன்னலம் கருதாது பிறர் நலம் பேணும் பெற்றிமை மிகுந்த தமிழ் மக்கள் உதவிக்கும் உரிமைக்கும் உள்ள வேறுபாட்டினை மறக்கக் கூடாது என்பதற்காகத்தான். இடர்களையவும் துணைநிற்கவும் வேண்டும். கைம்மாறு கருதாமல் ...
image-25624

திருவள்ளுவர் காட்டு நெறிகள் பல – சேயோன்

திருவள்ளுவர் காட்டு நெறிகள் பல     தெய்வப்புலவர் தெளிவுறுத்தும் நெறிகள் பல. அவையனைத்தும் தனிமனித வளர்ச்சிக்கும் சமுதாய மலர்ச்சிக்கும் உலக ஒருமைப்பாட்டிற்கும் உறுதுணை புரிவன. திருவள்ளுவர் வாழ்வாங்கு வாழ்வதற்குரிய வழிமுறைகளையும், குறள்நெறிகளையும் ஆய்ந்தும் தோய்ந்தும் தொகுத்தும் பகுத்தும் தந்துள்ளார். அவற்றை உய்த்துணர்ந்து போற்றி நடைமுறை வாழ்க்கையில் கடைப்பிடித்து நானிலத்தில் மேனிலை அடைவது ஒவ்வொருவரின் பொறுப்பும் கடமையும் ஆகும். முனைவர் ...
image-25619

வள்ளுவர் விளக்கும் வன்முறைக்கு எதிரான மருந்து – பெ.அருத்தநாரீசுவரன்

வள்ளுவர் விளக்கும் வன்முறைக்கு எதிரான மருந்து   சமுதாயத்தில் தாம் நினைத்தால் அமைதியும் மகிழ்ச்சியும் உண்டாக்கக் கூடிய அளவிற்கு நிறைந்த பண்புலநலன்கள் கொண்ட பெரியோர்கள் சிலர் இருக்கின்றார்கள். அப்படிப்பட்ட பெரியோர்களை வள்ளுவர் சான்றோர் என்று குறிப்பிடுகின்றார். சான்றோர் என்ற சொல் வள்ளுவர் காலத்திற்கு முன்பு போர்க்களத்தில் போராடுகின்ற வீரர்களைக் குறித்த சொல். பிற்காலத்தில் போரிட வேண்டும் என்று தேவை ...