image-866

தங்கநங்கை அம்ரிதாவிற்குப் பாராட்டுகள்!

அண்ணா பல்கலைக்கழகத்தின் அழகப்பா தொழில்நுட்பக் கல்லூரியில்  நெசவுத்தொழில்நுட்ப இளம்பொறியியலில் (B.Tech - Textile Technoloy) செல்வி அம்ரிதா முதலிடம் பெற்றுத் தங்கப் பதக்கம் பெற்றார். அண்மையப் பட்டமளிப்பு விழாவில் இவருக்குத் தங்கப்பதக்கம் அணிவிக்கப்பெற்றது. பெற்றோர் திருவாளர்கள் சி.மனோகரன்—கசுதூரி, தமக்கை மரு.சந்தனா, சுற்றத்தினர், ஆசிரியர்கள், நண்பர்களுடன் இணைந்து நிறைநலமும் உயர்புகழும் பெற ‘அகரமுதல இணைய இதழும்’ வாழ்த்துகிறது!
image-848

இலக்குவனாரின் தொல்காப்பிய ஆய்வு – 5

(முந்தைய இதழ்த் தொடர்ச்சி) 3.6. விழாக்கள்   குழந்தைப் பிறப்பு, திருமணம், இறப்பு ஆகியன விழாக்கள் நடத்துவதற்கான நிகழ்வுகள் ஆயின.   குழந்தைப் பிறப்பிற்குப் பின் கொண்டாடப்படும் விழா, நெய்யணி முயக்கம் (நூற்பா.147,பொருள்) என அழைக்கப் பட்டது. திருமண நிகழ்ச்சி கரணம் என்று அழைக்கப் பெற்றது. (நூற்பா.142,பொருள்) பிறந்தநாள், பெருமங்கலம் என அழைக்கப் பெற்றது(நூற்பா.91,பொருள்).  அரசர் முடி சூடிய நாள் ஒவ்வோர் ...
image-844

புதிது புதிதாய் சிந்தனை செய்

                                                                                                  -கல்வியாளர் வெற்றிச்செழியன் புதிது புதிதாய் சிந்தனை செய் - நீ உலகம் புதிதாய் எழுந்திட செய் - நம் உலகம் புதிதாய் எழுந்திட செய். புதிய தென்பது  பழையதன் வளர்ச்சி புவியில் நிகழ்ந்திடும் புதுமறு மலர்ச்சி விதையும் செடியும் இயற்கையின் சுழற்சி வினைவழி மாற்றும் மக்களின் முயற்சி                                                                                                 புதிது தனி ஒரு செயலே மாற்றமென்றில்லை தனி சிறு விசையின்றி மாற்றங்கள் இல்லை முழுவதும் திடுமென மாறு வதில்லை முயற்சிகள் இன்றி, ...
image-817

மானாமதுரை பெண்ணிற்குத் தேசிய விருது

மானாமதுரை: இந்திய அரசின் 'சங்கீத நாடக அகாதமி' சார்பில், 2013ம் ஆண்டிற்கான அகாதமி விருதுக்கு, மானாமதுரை கடம்  உருவாக்குநர் மீனாட்சி தேர்வாகியுள்ளார். நான்கு தலைமுறையாக கடம் உற்பத்தியில் கேசவன் குடும்பத்தினர் ஈடுபட்டு வருகின்றனர். இந்திய அரசின் இயல், இசை நாடக அகாதமிக்குட்பட்ட, சங்கீத் நாடக அகாடமி சார்பில் இயல், இசை, நாடக கலைஞர்களுக்கு விருது வழங்கப்படுகிறது. நடப்பாண்டில் ...
image-815

கேரளாவால், இந்தியாவின் ஒருமைப்பாடு கேள்விக்குறியாகாதா?

 - கலைஞர் வினா?  கேரள அரசின் அட்டூழியத்தால் அட்டப்பாடியில் வாழும் தமிழர்கள் விரட்டப்படும் நிலைக்கு வந்துவிட்டமையால், தமிழர்களிடையே பெரும் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது. இது  தொடர்பில், ''கேரள மாநிலத்தை சேர்ந்தவர்களை, சென்னையில் இருந்து வெளியேற்ற வேண்டும் எனத் தமிழக அரசு உத்தரவிட்டால், இந்தியாவின் ஒருமைப்பாடு கேள்விக்குறியாகி விடாதா?'' எனத் தி.மு.க. தலைவர் கருணாநிதி கூறியுள்ளார். அவரது அறிக்கை வருமாறு:  'கேரள மாநிலம், ...
image-810

இனக்கொலைக் குற்றவாளிகள் தப்பவே முடியாது : வைகோ அறிக்கை

“நடந்தது இனப் படுகொலைதான் என செருமனி மக்கள் தீர்ப்பாயம் (Permanent People’s Tribunal) அறிவித்துள்ளது. எனவே இனக்கொலை குற்றவாளிகள் தப்பவே முடியாது” என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை பின்வருமாறு :-    “இரவுக்குப் பின் வைகறை மலர்வதுபோல், துன்ப இருளில் தவித்த ஈழத் தமிழர்களுக்கு விடியலின் வெளிச்சம் தோன்றுகிறது. இலட்சக் ...
image-803

இந்தியத் தரவரையறு நிறுவனத்தில் பொறியாளர் பணியிடம்

மத்திய அரசின் நுகர்வோர் நலன் உணவு-பொது வழங்கல் துறை அமைச்சகத்தின் கீழ்ச் செயல்பட்டு வரும் இந்தியத் தரவரையறு நிறுவனத்தில் (Bureau of Indian Standard) ஒழிவிடமாக உள்ள  'ஆ' நிலை அறிவியலாளர் ('B' Grade Scientists)பணியிடங்களை நிரப்பத் தகுதியானவர்களிடமிருந்து  இணையவழி விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பணி: பொறியாளர் மொத்த  ஒழிவிடங்கள்: 115 துறைவாரியான காலியிடங்கள் விவரம்:  இயந்திரவியல் - 31,  மின்னியல் ...
image-797

தமிழகம் முழுவதும், மலிவு விலை காய்கறிக் கடைகள் – முதல்வர் ஆணை

சென்னை :  திசம்பர் 11: மாவட்ட ஆட்சியர்கள், காவல்துறை உயர் அலுவலர்கள் மாநாட்டில்  தொடக்கவுரையாற்றிய பொழுதுமுதல்வர் செயலலிதா, 'விலைவாசியைக் கட்டுப்படுத்த, சென்னையில், 40 மலிவு விலை - காய்கறிக் கடைகள் திறக்கப்பட்டுள்ளன. இது போன்ற  காய்கறிக்கடைகளை, மாவட்டங்களில் தேவையான இடங்களில் தொடங்க, ஆட்சியர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்று மாவட்ட ஆட்சியர்களுக்கு ஆணையிட்டார்.
image-794

மூடநம்பிக்கை எதிர்ப்பு சட்ட வரைவு

மூடநம்பிக்கை எதிர்ப்பு  சட்ட வரைவு 11.12.13 அன்று மகாராட்டிரச் சட்டப் பேரவையில் வைக்கப்பட்டது. இந்தச் சட்ட முன்வடிவிற்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.  சமூக நீதித்துறை அமைச்சர் சிவாசி(இராவு மொகே) இந்தச் சட்ட முன்வடிவை அளித்தார். பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்கும், பாதுகாப்பான சமூகச் சூழலை உருவாக்குவதற்கும், அப்பாவிப் பொதுமக்களை மூடநம்பிக்கைகளில் இருந்து பாதுகாக்கவும் இந்தச் சட்டம் வழி வகுக்கும் என்று ...
image-790

மதுக்கடைகளை மூடுமாறு முதல்வர் வீடுமுன் அறப்போர்! – நந்தினி அறிவிப்பு

“நம்மை வீழ்த்தி என்றும் அடிமைகளாக மாற்றுவதற்காகச் சூழ்ச்சிக்காரர்கள் தீட்டிய சதியால் கொண்டுவரப்பட்ட மதுக்கடைகளை முற்றிலும் ஒழித்துக்கட்ட வேண்டும் என்ற உணர்வு தமிழகம் முழுவதும் கொளுந்து விட்டு எரியத்தொடங்கிவிட்டது. இந்த நெருப்பை ஆட்சியாளர்களால் அணைத்துவிட முடியாது. அரசின் மதுக்கடைகளுக்கு முடிவுகட்டும் நேரம் நெருங்கிவிட்டது. அதற்கான இறுதிப் போர்தான் 24.12.2013 அன்று காலை 9 மணிமுதல் முதல்வர் செயலலிதா ...
image-785

கச்சத்தீவை இந்தியாவின் பகுதியெனப்பறைசாற்றுக! – த.இரா.பாலு

அன்று அமைதி காத்த தி.மு.க. இன்று கழுவாய்  தேடுகிறது! புதுதில்லி: இலங்கையிடம் தாரை வார்க்கப்பட்ட கச்சத்தீவை இந்தியா மீட்க வலியுறுத்தி மக்களவையில் 11.12.2013 அன்று தி.மு.க. உறுப்பினர்கள் வினாக்கள் எழுப்பினர். இச்சிக்கல் குறித்து நாடாளுமன்ற மக்களவைத் தலைவர் திருமதி மீரா குமாரிடம் நாடாளுமன்ற தி.மு.க. குழுத் தலைவர் டி.ஆர்.பாலு, 11.12.13 அன்று காலை மக்களவை கூடியதும் முறையீடு அளித்தார். அதில் அவர் ...
image-782

அமஅநியில் (AIIMS) 228 பணியிடங்கள்

  மத்திய நல்வாழ்வு-குடும்பநலத்துறை அமைச்சகத்தின் கீழ்ப்  புதுதில்லியில் செயல்பட்டு வரும் அனைத்திந்திய மருத்துவ அறிவியல் நிறுனத்தில்(AIIMS)  ஒழிவிடமாக உள்ள 'ஆ', 'இ' பிரிவு (குரூப் 'பி' மற்றும் 'சி' ) பணியிடங்களை நிரப்பத் தகுதியானவர்களிடமிருந்து  இணைய வழி விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மருத்துவம், பொறியியல், அலுவலகம் சார்ந்து  16 வகை பணிகளில் மொத்தம் 228 ஒழிவிடங்கள் உள்ளன. அகவை உயர் ...