image-22871

துளிப்பாக்கள் – தமிழ் சிவா

துளிப்பாக்கள்   வற்றாது ஓடும் இளைஞர்கள் சங்கமிக்கும் கூவம் மதுக்கடை!   துருத்தி நின்றன எலும்புகள் இறந்து கிடந்தது ஆறு!   நச்சு நாசியைப் பிளக்க கலங்கிக் கையற்று நின்றது காற்று!   குடிசைக்குள் புகுந்த அமைச்சர் கண்கலங்கினார் அடுப்புப்புகை!   அடுத்த அறிவிப்பு மதுக் கடையிலேயே இறப்பவர்க்குப் பிதைக்கப் பணம் இலவசம்!   எந்தக் கடவுளிடமும் சிறைமீட்க வேண்டுமென்று யாகம் நடத்துவதில்லை ஐந்தறிவுகள்!   வழக்கில் தோல்வி பயந்து வாழ்ந்தன பேருந்துகள்!   காக்கும் கடவுள் உடைந்து போனார் தீர்ப்பு நாளன்று!   இலவச அரிசி நிறையப் பலனடைந்தார்கள் பக்கத்து மாநிலத்தார்கள்! தமிழ் சிவா
image-22868

பயனில்லாரைத் தெரிவது தொல்லை! – கெர்சோம் செல்லையா

பயனில்லாரைத் தெரிவது தொல்லை! ஏழ்மை ஒழிப்பே நோக்கு என்பார்; ஏழையை ஒழிக்கவே நோக்குகின்றார்! ஊழல் இல்லா ஆட்சி என்பார்; ஊதிப் பெருக்கவே ஆளுகின்றார்! வாழ வைக்கும் தலைவரும் இல்லை; வறுமையை ஒழிக்கும் தலையும் இல்லை! பாழாய்ப் போனது தேர்தல் இல்லை; பயனில்லாரைத் தெரிவதே தொல்லை! -கெர்சோம் செல்லையா
image-22886

மத்திய அரசின் சான்றிதழ் வழங்கும் விழா

மத்திய அரசின்  சான்றிதழ் வழங்கும் விழா தேவகோட்டை தேவகோட்டைபெருந்தலைவர் மாணிக்க வாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப்பள்ளி மாணவர்களுக்கு மத்திய அரசின் சான்றிதழ்கள் வழங்கும் விழா நடைபெற்றது. தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக அனைருக்கும் மத்திய அரசின் சான்றிதழ் வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது. விழாவில் 8 ஆம் வகுப்பு மாணவர் சௌமியா  வரவேற்புரை வழங்கினார். தலைமை ஆசிரியர் இலெ .சொக்கலிங்கம் விழாவிற்குத் ...
image-22865

நல்லதை நாட்டுவதே நம்பணி! – தமிழ்சிவா

நல்லதை நாட்டுவதே நம்பணி! மஞ்சள் நிறத்தொரு பூனை        மக்களை ஏமாற்றும் பாரீர் கொஞ்சல் மொழிகள் பேசி        நெஞ்சம் பிளக்கும் பாரீர்!! சந்தியில் தமிழன் சாகும்போதும்        சத்தியம் வெல்லுமெனும் பாரீர்! முந்தியது என்றாலும் அதன் முகத்தையே மாற்ற வேண்டும்! பச்சை நிறத்தொரு பூனை        பாரில் வளருது பாரீர்! இச்சை கொண்டது அப்பூனை        ஈடிலாப் பதவி மேலே! நச்சைக் கொணர்ந்து ஊட்டும்        நல்ல திறமை அதற்குண்டு! எச்சில் என்றே நினைக்கும்        யாரையும், ...
image-22881

ஆறு தலைமுறையினரின்அரிய சந்திப்பு, தாகூர் கலைக்கல்லூரி, தமிழ்த்துறை

சித்திரை 19, 2047 / மே 02, 2016 காலை 10.00 புதுச்சேரி  தாகூர் கலைக் கல்லூரித் தமிழ்த்துறையில் ஆறு தலைமுறைத் தமிழ்ப் பேராசிரியர்கள் சந்திக்கும் அரிய கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.    கடந்த இருபத்தைந்து ஆண்டுகளில் புதுச்சேரி அரசுக் கலைக் கல்லூரிகளில் பணியாற்றி ஓய்வு பெற்றுள்ள தமிழ்ப் பேராசிரியர்கள் அனைவரும் ஒன்றுகூடி இன்றைய இளம் தலைமுறைத் தமிழ்ப் பேராசிரியர்களோடு ...
image-22859

மேனாள் துணைவேந்தர் அறிஞர் கதிர்.மகாதேவன் இயற்கை எய்தினார்.

மேனாள் துணைவேந்தர் அறிஞர் கதிர்.மகாதேவன் இயற்கை எய்தினார். தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் கதிர்.மகாதேவன் (80) மதுரை அண்ணா நகரில் உள்ள அவரது இல்லத்தில் நேற்று வெள்ளிக்கிழமை (சித்திரை 09, 2047 / ஏப்.22) காலை இயற்கை எய்தினார்.   இவர் எழுதியுள்ள முப்பதுக்கும் மேற்பட்ட நூல்களுள் 'ஒப்பிலக்கிய நோக்கில் சங்கக் காலம்' என்ற நூல் குறிப்பிடத்தகுந்தது. ...
image-22755

பெங்களூரு திருவள்ளுவர் மன்ற நூலகம் சூறையாடல் – குற்றவாளிகள் கடுமையாகத் தண்டிக்கப்பட வேண்டும்!

பெங்களூரு திருவள்ளுவர் மன்ற நூலகம் சூறையாடல் -  குற்றவாளிகள் கடுமையாகத் தண்டிக்கப்பட வேண்டும்!   அறிவுப் போராட்டத்துக்கான படைக்கலன்கள் செய்யும் படைவீடு நூலகம்(இங்கர்சால்). நூலகம் இருக்குமிடத்தின் ஒளிவிளக்கு. உலகில் வலிமையான ஆயுதம் எழுதுகோல்; அத்தகைய எழுதுகோலைப் பயன்படுத்துவோரைப் பட்டை தீட்டுவன நூலகங்களே!. எல்லா நிலையினருக்கும் அறிவுச் செல்வங்களை வாரி வழங்கும் வாயில்களாக விளங்குவனவும் நூலகங்கேள! நாட்டின்மீது போர்தொடுத்தாலும் ...
image-22855

மக்கள் மனத்தில் மதில்மேல் பூனையாகப் பாராட்டுக்குரிய பா.ம.க. – இலக்குவனார் திருவள்ளுவன்

மக்கள் மனத்தில் மதில்மேல் பூனையாகப் பாராட்டுக்குரிய பாமக     “வன்னியர் வாக்கு அன்னியர்க்கில்லை” என்பதையே உரமாகக் கொண்டு உருவானதுதான் பாமக. சாதிவெறிப் பேச்சுகளை உரமாக இட்டுவளர்ந்ததுதான் பாமக. என்றாலும் அரசியலில் நிலைப்பதற்கு இவை உதவா என்பதை உணர்ந்தபொழுது சாதிக்கண்ணோட்டத்தை மாற்றிக் கொண்டதும் பாமகதான். தொல்தமிழர்கள், அருந்ததியினர், பழங்குடியினர் வகுப்புகளைச் சார்ந்தவர்களுக்குக் கட்சியில் பொறுப்புகள், அமைச்சர் பொறுப்புகள் வழங்கியதும் ...
image-22851

தி.மு.க.வின்மீதான கசப்பு குறையவில்லை! – இலக்குவனார் திருவள்ளுவன்

திமுகவின்மீதான கசப்பு குறையவில்லை!   மிகுதியான மன்பதை நலன் திட்டங்களை அறிமுகப்படுத்திச் செயல்படுத்திய முதல்வர்களில் முதலாமவர் என்றால் கலைஞர் கருணாநிதிதான் இடம் பிடிப்பார். கடந்த தலைமுறையைச் சேர்ந்த தலைவர் எவரேனும் தமிழ்ப்பற்றுடன் எந்தக் கட்சியிலேனும் இருந்தார் எனில் அவர் கலைஞர் கருணாநிதியின் பேச்சாலோ எழுத்தாலோ கவரப்பட்டிருப்பார்.  கட்டியணைக்க வேண்டிய நேரத்தில் கட்டியணைத்தும் அணைத்து வெட்டிவிட வேண்டிய நேரத்தில் வெட்டியணைத்தும்(அழித்தும்)விடும் ...
image-22821

வட்டுக்கோட்டை இந்து இளைஞர்(வாலிபர்) சங்கம் மிதிவண்டிகள், தையல் பொறி வழங்கியது!

வட்டுக்கோட்டை இந்து இளைஞர்(வாலிபர்) சங்கம் மிதிவண்டிகள், தையல் பொறி வழங்கியது!  வட்டுக்கோட்டை இந்து இளைஞர்(வாலிபர்)சங்கத் தலைமைச்செயலகத்தில்  பாடசாலை மாணவர்கள் நான்கு பேருக்கு  மிதிவண்டிகளும் ஒருவருக்குத் தையல்பொறியும் வழங்கப்பட்டுள்ளன.   சங்கத் தலைவரின் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் வட்டு இந்துஇளைஞர்(வாலிபர்) சங்கத்திடம் தமது கல்வி நடவடிக்கைகளுக்கு உதவி புரியும் முகமாக  மிதி வண்டிகள், தையல் இயந்திரம் என்பன தந்துதவுமாறு கேட்டுக் ...