நூலழகு பத்து
சுருங்கச் சொல்லல், விளங்க வைத்தல்,
நவின்றோர்க்கு இனிமை, நனிமொழி புணர்த்தல்,
ஓசை உடைமை, ஆழம் உடைத்து ஆதல்,
முறையின் வைப்பே, உலகம் மலையாமை,
விழுமியது பயத்தல், விளங்கு உதாரணத்தது
ஆகுதல், நூலிற்கு அழகு எனும் பத்தே.
சுருங்கச் சொல்லல் - சொற்கள் வீணாக விரியாது சுருங்கிநிற்கச் சொல்லுதலும் , விளங்கவைத்தல் - சுருங்கச் சொல்லினும் பொருளைச் சந்தேகத்துக்கு இடமாகாது விளங்க வைத்தலும் , ...