image-6674

ஒரே இடத்தில் பல்வேறு பயிர்த்தொழில் செய்து வரும் உழவர்கள்

  தேனிப் பகுதியில் தண்ணீர்ப் பற்றாக்குறையினால் ஒரே நிலத்தில் பல்வேறு பயிரிடுதலில் கவனம் செலுத்தி வருகின்றனர்.   தேனிப் பகுதியில் கடந்த சில வருடங்களாக போதிய மழை பொழியவில்லை. இதனால் உழவிற்குரிய வேளாண்பகுதி நாளுக்குநாள் சுருங்கி வருகிறது. இந்நிலையில் கிடைக்கின்ற நீரை வைத்துக் கரும்பு, தக்காளி, முட்டைக்கோசு எனப் பல்வேறு பயிரிடுகையை ஒரே இடத்தில் மேற்கொண்டு வருகின்றனர்.   ...
image-6664

இலக்கியவளர்ச்சிக்கழகம் – இலக்கிய இலக்கணத்தொடர் கருத்தரங்கம் 54

திருவாரூர் புரட்டாசி 8, 2045 / 24.09.2014 உரையரங்கம்: அ.சாகுல்அமீது முனைவர் மு.அப்துல்காதர் அன்புடன் அழைக்கும் புலவர் எண்கண் சா.மணி
image-6654

ஆய்வாளர் மு.செந்தில்குமார் வாய்மொழித்தேர்வு

  மதுரை காமராசர் பல்கலைக்கழகம் தமிழியற்புலம் முனைவர் பட்டப் பொதுவாய்மொழித்தேர்வு   புரட்டாசி 7, 2045 / 23.09.2014 ஆய்வாளர் மு.செந்தில்குமார்
image-6785

மூவாப்புகழ் மூவர் சிறப்பிதழ்

    அகரமுதல 44 ஆம் இதழ் மூவாப்புகழுக்குரிய ஆன்றோர் மூவர் சிறப்பிதழாக வருகிறது. எனவே, வழக்கமான செய்திகளுடன் இம் மூவர் குறித்த படைப்புகளும் இடம் பெற்றுள்ளன.(இவ்விதழில் விடுபட்ட தொடர்கள் அடுத்த இதழில் வெளிவரும்.)   செட்டம்பர்த் திங்களின் இவ்வாரத்தில் இதனைக் குறிப்பதால் யார் அந்த மூவர் என்பது அனைவருக்குமே தெரியும். ஆம்! பாட்டுக்கொரு புலவனாய் நமக்கு எழுச்சி ...
image-6776

சிவகங்கை இராமச்சந்திரனாரின் சீர்மிகு பணிகள் – இலக்குவனார் திருவள்ளுவன்

  தமிழே நம் மொழியும் இனமுமாகும். ‘திராவிடம்’ என்பது மொழியுமல்ல; இனமுமல்ல. ஆனால், ‘தமிழ்’ என்னும் சொல் ‘திராவிடம்’ என்று மாறியுள்ளது. ‘திராவிடம்’ என்பது மொழியைக் குறிப்பிடுகையில் தமிழ்க்குடும்ப மொழிகளைக் குறிப்பிடுகிறது; இனத்தைக் குறிப்பிடுகையில் தமிழ்க்குடும்ப இனங்களைக் குறிப்பிடுகிறது. அதே நேரம் இயக்கத்தைக் குறிப்பிடுகையில், ஆரிய மூட நம்பிக்கைகளை அகற்றும், தமிழின் அருமை பெருமைகளை உணரச் ...
image-6773

இந்த வார வல்லமையாளர் – திரு. பாலமுருகன்

 வல்லமை வளர்தமிழ் மையம் சார்பிலான வல்லமை மின்னிதழ் சித்திரை 2043 / ஏப்பிரல் 2012 இலிருந்து கிழமைதோறும்-அக்கிழமையில் சிறந்த ஆற்றலாளரைத் தேர்ந்தெடுத்து - வல்லமையாளர் விருது வழங்கி வருகின்றது. ஏதேனும் ஒரு புள்ளியில் தம் ஆற்றலைச் சிறந்த முறையில் வெளிப்படுத்தும் யாராயினும் அடையாளங் காணப்பட்டு வல்லமையாளர் விருதால் சிறப்பிக்கப்படுகின்றனர். அந்த வகையில், இந்த வார (ஆவணி ...
image-6770

வழிகாட்டும் ஒளி வேந்தன் – புலவர் இரா.வடிவேலன்

செந்தமிழர் வாழ்வென்னும் மலர்பூக்கும் கதிராய்ச் சீரேற்றும் சொற் கூட்ட வெள்ளத்தில் மழையாய் வந்தவரின் வாழ்விற்கு வன்கொடிய நெருப்பாய் வடமொழியின் வால்பற்று குழுவிற்குப் படையாய்ச் சொந்தமெனும் நம்மவரின் தோளுக்குத் துணையாய்த் தொல்லைக்கு நகை கூட்டி வாவென்னும் மலையாய்த் தந்தையாய்த் தமிழர்க்கு வெண்தாடி அலையாய்ச் சாய்ந்தாடத் தென்றலிலே சிங்கமென வந்தோன்! எண்ணத்தின் சொற்பேழை! எழுச்சிக்கு முரசம் ஏமாந்த நாட்டிற்குச் சீர்மேவ வந்தோன்! கண்ணான மண்ணிற்குக் கதியின்மை கண்டு காலத்தில் தன்மான இயக்கத்தைக் கண்டேன்! ‘விண்ணாட்டுத் தேவரிவர், ...
image-6767

அண்ணாப்பத்து – காரை இறையடியான்

1) பண்ணார் தமிழ்ப் பேச்சுப் பாங்கால் பெரியோர்க்கும் ‘அண்ணா’ வா ஆனான் அவன்! 2) மாற்றார் மதிக்கும் மதிவளம் தாங்கிய ஆற்றலால் ‘அண்ணா’ அவன் 3) இடுக்கண் புரிவோரும் இன்பமெனக் கேட்பர் அடுக்கு மொழி அண்ணா அவன்! 4) நஞ்சிந்திப் பேயை நசுக்கச் சிறையிருக்க அஞ்சாத அண்ணா அவன்! 5) தமிழர் தம் பண்பாட்டைத் தாக்கும் வெறியை அமிழ்த்திடும் அண்ணா அவன்! 6) பேராயக் கட்சிப் பெருங்குற்றம் போக்கிட ஆராயும் அண்ணா ...
image-6762

அறிஞர் அண்ணா அவர்கள் மீது பாடிய வெள்ளணி நாள் விழா வாழ்த்து

- பைந்தமிழ்ப் பாவலர் அ.கி.பரந்தாமனார் திருமணக்கும் கலைமணக்கும் திருத்தொண்டை நாட்டில் சிறப்புமிகப் பெற்றிலங்கும் திருக்காஞ்சி நகரம் பெரும்புகழை எய்திடவே பிறந்த பேரறிஞ, பிறர் இகழ்ச்சி தனை மறக்கும் பெருஞ்சால்பு மிக்கோய், ஒரு கடவுள் உளத்திருத்தி உறுமூடக் கருத்தை ஒழித்துவிடப் பாடுபடும் ஒப்பரிய தொண்ட, இருங்கடல்சூழ் இவ்வுலகில் நீடுழி வாழி! எழுத்தாள! அண்ணாவே, நீடுழி வாழி! இந்தி வந்து புகுவதனால் இனிய தமிழ் சாகும் என்றறிஞர் பெருமக்கள் எடுத்தெடுத்துச் சொலினும் அந்த இந்தி ...
image-6756

பார்புகழ் அறிஞர் பல்லாண்டு வாழ்க – பேராசிரியர் சி.இலக்குவனார்

அறிஞர் அண்ணா அவர்கள் இன்று தமிழ்க் காக்கும் தனிப்பெரும் தலைவராக விளங்கி வருகின்றார்கள். இந்தியப் பெருந் தலைவராக உலகப் பெருந் தலைவராக விளங்கப் போகும் காலம் விரைவில் வந்து கொண்டிருக்கின்றது. மக்கள் உளங்களை வன்மையாகப் பிணித்துத் தன்பால் ஈர்க்கும் தனிப்பெரும் தலைவர் அறிஞர் அண்ணா. ‘‘விரைந்து தொழில்கேட்கும் ஞானம் நிரந்தினிது சொல்லுதல் வல்லார்ப் பெறின்’’ எனும் திருவள்ளுவர் செம்மொழிக்குச் சிறந்த ...
image-6752

புரட்சியாளர்கள்- பேராசிரியர் சி.இலக்குவனார்

  உலகில் அறியாமை மிகுந்து மூடக் கொள்கைகள் நிறைந்து அடிமை வாழ்வில் அல்லலுற்று உரிமையிழந்து உண்பதும் உறங்குவதுமே பெரிதெனக்கருதி வாழ்வின் உண்மைக் குறிக்கோளை மறந்து மானமிழந்து மக்கள் வாழுங்காலங்களில் எல்லாம் புரட்சியாளர்கள் தோன்றுகின்றார்கள். புரட்சியாளர்களால்தான் உலகம் செம்மை நிலையை நாடிச் செல்கின்றது. புரட்சியாளர் பட்டுண்டுலகம், அஃதின்றேல் மண்புக்கு மாய்வதுமன்’ என்று தான் கூறல் வேண்டும். சாக்ரிடீசு, ...