seithi_agri_vaigaianeesu02

  தேனிப் பகுதியில் தண்ணீர்ப் பற்றாக்குறையினால் ஒரே நிலத்தில் பல்வேறு பயிரிடுதலில் கவனம் செலுத்தி வருகின்றனர்.

  தேனிப் பகுதியில் கடந்த சில வருடங்களாக போதிய மழை பொழியவில்லை. இதனால் உழவிற்குரிய வேளாண்பகுதி நாளுக்குநாள் சுருங்கி வருகிறது. இந்நிலையில் கிடைக்கின்ற நீரை வைத்துக் கரும்பு, தக்காளி, முட்டைக்கோசு எனப் பல்வேறு பயிரிடுகையை ஒரே இடத்தில் மேற்கொண்டு வருகின்றனர்.

  இதன் தொடர்பாக உழவர்களிடம் கேட்டபோது, “மழை கடந்த இரண்டு வருடகாலமாக சரிவரப் பெய்யவில்லை. இதனால் நெல் முடிந்த பின்பு வாழை அதன் பின்னர் கரும்பு என மாறிமாறிப் பயிரிட்டு வந்தோம். இப்பொழுது தண்ணீர்ப் பற்றாக்குறையினால் ஒரே இடத்தில் பல்வேறு பயிரிட்டால்தான் எங்களுக்குச் சம்பளமாவது கிடைக்கும். இதனால் ஒரே இடத்தில் வெங்காயம், தக்காளி, முட்டைக்கோசு எனப் பயிரிட்டு வருகிறோம்” என்றனர். “இதே போல தென்னந்தோப்புகளில் மல்லி, புதினா, கீரை வகைகளுக்குப் பாத்திகட்டிப் பயிரிட்டு வருகிறோம். இதனால் தண்ணீர் மிச்சமாகிறது. வீணான நீரினால் மற்ற பயிர்த்தொழில் நடைபெறுவதால் எங்களுக்கு இழப்பு இல்லாமல் போகிறது” என்கிறார்கள்.

– வைகை அனீசு