image-3257

இந்தி ஒழிக! – பாவேந்தர் பாரதிதாசன்

தமிழ்வாழ்க தமிழ்வாழ்க என்று சொன்னான் தாமரையின் வாய்மலர்ந்து தேனைப் பெய்தான்; தமிழ் இதுபார் இன்றுதன் உள்ளங் காட்டி, தன்னுயிரில் அதுகாட்டி, என்றன் தோளை அமிழ்திதுவர எட்டியா என்று தொட்டாள் அமிழ்தென்றேன் ஆம்என்றேன் மகிழ்ந்து நின்றேன் கமழ்இமை கனியிதழும் தந்தாள் உண்டேன் கண்திறந்தேன் வேறொருத்தி வருதல் கண்டேன். தமிழ்வீழ்க தமிழ்வீழ்க என்று சொன்னாள் தமிழ்க்காதில் ஈயத்தை உருக்கி வார்த்தாள் தமிழில்லை என்றுதன் உளத்தைக் காட்டி தன்னுயிரிற் பகைகாட்டி என்றன் தோளை அமிழ்திதுவா எட்டியா என்று ...
image-3255

வேங்கையே எழுக! – பாவேந்தர் பாரதிதாசன்

  இந்தித் திணிப்புச் சரியல்ல! அமைதி வேண்டும் நாட்டினிலே அன்பு வேண்டும் என்பார் ஆழ மடுவில் நீரைக் கலக்க வேண்டாம் என்று சொல்வார். தமிழகத்தில் இந்தி திணிக்கச் சட்டம் செய்தார் அவரே சாரும் குட்டையில் எருமை மாட்டை தள்ளுகின்றார் அவரே! சுமக்க வேண்டும் இந்தியினைப் பொதுமொழியாய் என்பார்; தொலைய வேண்டும் எதிர்ப்புக் கூச்சல் தொலைய வேண்டும் என்பார்; தமிழ்மொழியை அழிக்க வேண்டும் என்றவரும் அவரே தமிழகத்திலே புகுந்த சாக்குருவிகள் அவரே!
image-3253

இந்தியா? – பாவேந்தர் பாரதிதாசன்

தமிழை ஒழிப்பவன் உலகினில் இல்லை தமிழை எதிர்த்தவன் வாழ்ந்ததும் இல்லை (தமிழை) தமிழை ஒழிக்க இந்தியை நுழைப்பவர் தம்வர லாற்றுக்கு மாசி ழைப்பவர் (தமிழை) இன்பத் தமிழ்மொழி உலக முதன்மொழி! இந்தி மொழியோ ஒழுங்கிலா இழிமொழி! என்ன போயினும் தமிழர்க்குத் தமிழ்மொழி இன்னுயிர் ஆகும் வாழ்க தமிழ்மொழி (தமிழை) ஒருமொழி ஓரினம் கொண்டதோர் நாடு பிறன் அதில் அடிவைக்க நினைப்பதும் கேடு பெருமொழி அழித்தும் பேரினம் அழித்தும் பெறுவது நாடன்று தன்பிண ...
image-3251

குண்டு போடு! – பாவேந்தர் பாரதிதாசன்

தமிழுக்கு நீசெயுந் தொண்டு -- நின் பகைமீது பாய்ச்சிய குண்டு (தமிழுக்கு) தமிழில்நீ புலமைபெற வேண்டும் -- அது தமிழ்பெறத் தமிழரைத் தூண்டும் தமிழிலே யேபேச வேண்டும் -- அது தனித்தமிழ் வளர்ச்சியைச் தூண்டும் (தமிழுக்கு) தமிழ் பேசு: தமிழிலே பாடு -- நீ தமிழினிற் பாடியே ஆடு தமிழ்ப்பாட்டை யேகாதிற் போடு -- தமிழ் தப்பினால் உன்காதை மூடு (தமிழுக்கு) வணிக விளம்பரப் பலகை -- அதில் வண்தமிழ் இலாவிடில் ...
image-3249

தமிழ் வரலாறு – பாவேந்தர் பாரதிதாசன்

கேளீர் தமிழ்வர லாறு -- கேட்கக் கேட்க அதுநமக்கு முக்கனிச் சாறு (கே) நாள்எனும் நீள்உல கிற்கே -- நல்ல நாகரி கத்துணை நம்தமி ழாகும் வாளுக்குக் கூர்மையைப் போல -- அது வாழ்வுக்குப் பாதை வகுத்ததுமாகும் (கே) இயல்பினில் தோன்றிய தாகும் -- தமிழ் இந்நாவ லத்தின்மு தன்மொழியாகும் அயலவர் கால்வைக்கு முன்பே -- தமிழ் ஐந்தின்இ லக்கணம் கண்டதுமாகும் (கே) அகத்தியன் சொன்னது மில்லை -- தமிழ் அகத்திய ...
image-3247

தமிழ் வளர்ச்சி – பாவேந்தர் பாரதிதாசன்

எளிய நடையில் தமிழ்நூல் எழுதிடவும் வேண்டும். இலக்கண நூல் புதிதாக இயற்றுதலும் வேண்டும். வெளியுலகில், சிந்தனையில் புதிது புதிதாக விளைந்துள்ள எவற்றினுக்கும் பெயர்களெலாங் கண்டு தெளியுறுத்தும் படங்களொடு சுவடியெலாம் செய்து செந்தமிழைச் செழுந்தமிழாய்ச் செய்வதுவும் வேண்டும். எளிமையினால் ஒரு தமிழன் படிப்பில்லை என்றால் இங்குள்ள எல்லோரும் நாணிடவும் வேண்டும். உலகியலின் அடங்கலுக்கும் துறைதோறும் நூற்கள் ஒருத்தர் தயை இல்லாமல் ஊரறியும் தமிழில் சலசலென எவ்விடத்தும் பாய்ச்சிவிட வேண்டும்! தமிழொளியை மதங்களிலே சாய்க்காமை ...
image-3244

தமிழ் வெல்க வெல்க

இனிமைத் தமிழ்மொழி எமது -- எமக் கின்பந் தரும்படி வாய்த்தநல் அமுது! கனியைப் பிழிந்திட்ட சாறு -- எங்கள் கதியில் உயர்ந்திட யாம்பெற்ற பேறு! தனிமைச் சுவையுள்ள சொல்லை -- எங்கள் தமிழினும் வேறெங்கும் யாங்கண்டதில்லை! நனி்யுண்டு நனியுண்டு காதல் -- தமிழ் நாட்டினர் யாவர்க்குமே தமிழ்மீதில்         (இனிமைத்) தமிழ் எங்கள் உயிர் என்பதாலே -- வெல்லுந் தரமுண்டு தமிழருக்கிப்புவி மேலே தமிழ்என்னில் எம்முயிர்ப் பொருளாம் - இன்பத் தமிழ்குன்றுமேல் தமிழ்நாடெங்கும் ...
image-3240

இன்பத் தமிழ்

தமிழுக்கும் அமுதென்று பேர் ! -- அந்தத் தமிழ் இன்பத் தமிழ்எங்கள் உயிருக்கு நேர் ! தமிழுக்கு நிலவென்றுபேர்! -- இன்பத் தமிழ் எங்கள் சமுகத்தின் விளைவுக்கு நீர் ! தமிழுக்கு மணமென்று பேர் ! -- இன்பத் தமிழ் எங்கள் வாழ்வுக்கு நிருமித்த ஊர் ! தமிழுக்கு மதுவென்று பேர்! -- இன்பத் தமிழ் எங்கள் உரிமைச்செம் பயிருக்கு வேர் ! தமிழ் எங்கள் இளமைக்குப் ...
image-3237

மூடத் திருமணம்

‘‘முல்லை சூடி நறுமணம் முழுகிப் பட்டுடை பூண்டு பாலொடு பழங்கள் ஏந்திய வண்ணம் என்னருமை மகள் தனது கணவனும் தானுமாகப் பஞ்சணை சென்று பதைப்புறு காதலால் ஒருவரை ஒருவர் இழுத்தும் போர்த்தும், முகமல ரோடு முகமலர் ஒற்றியும், இதழோடு இதழை இனிது சுவைத்தும் நின்றும் இருந்தும் நேயமோடு ஆடியும் பிணங்கியும் கூடியும் பெரிது மகிழ்ந்தே இன்பத்துறையில் இருப்பர் என்று எண்ணினேன். இந்த எண்ணத்தால் இருந்தேன் உயிரோடு‘ பாழும் கப்பல் பாய்ந்து வந்து என்மகள் மருமகன் ...
image-3235

கூற்றே உண்மை கூறு!

அன்னைத் தமிழை அரியிருக்கை அமர்த்த வுழைத்த அடலேற்றை முன்னே நுழைத்த மூடமெலாம் முறிக்க இசைத்த முறையூற்றைப், பொன்னை நிகர்பா புரிந்திசையார் புரட்சிக் கவியைத் தமிழ்ப் பேற்றைச், சென்னை நகரில் சிறையெடுத்துச் சென்ற தேனோ சிறு கூற்றே? -           காரை. இறையடியான் - குறள்நெறி: வைகாசி 2, 1995 / மே 15. 1964
image-3232

நெஞ்சு பதைக்கும் நிலை

கரும்புதந்த தீஞ்சாறே, கனிதந்த நறுஞ்சுளையே, கவின்செய் முல்லை அரும்புதந்த வெண்ணகையே அணிதந்த செந்தமிழே அன்பே, கட்டி இரும்புதந்த நெஞ்சுடையார் துறைதோறும் நின்னெழிலை ஈட ழித்து வரும்புதுமை நினைக்கையிலே நெஞ்சுபதைக் கும்சொல்ல வாய்ப தைக்கும். எடுத்துமகிழ் இளங்குழந்தாய், இசைத்துமகிழ் நல்யாழே, இங்குள் ளோர்வாய் மடுத்துமகிழ் நறுந்தேனே, வரைந்துமகிழ் ஓவியமே, அன்பே, வன்பு தொடுத்துமகிழ் நெஞ்சுடையார் துறைதோறும் நின்னெழிலைத் தோன்றா வண்ணம் தடுத்துவரல் நினைக்கையிலே நெஞ்சுபதைக் கும்சாற்ற வாய்ப தைக்கும். பண்டுவந்த செழும்பொருளே பார்அடர்ந்த இருட்கடலில் படிந்த மக்கள் கண்டுவந்த திருவிளக்கே, களிப்பருளும் செந்தமிழே, அன்பே வாழ்வில் தொண்டுவந்த நெஞ்சுடையார் துறைதோறும் நின்னெழிலைத் துளிர்க்கா வண்ணம் உண்டுவரல் நினைக்கையிலே உளம்பதைக்கும் சொல்வதெனில் வாய்பதைக்கும் உடலியக்கும் நல்லுயிரே, உயிரியக்கும் நுண்கலையே, மக்கள் வாழ்வாம், கடலியக்கும் சுவைப்பாட்டே கண்ணான ...
image-3229

வரிப்புலியே, தமிழ் காக்க எழுந்திரு!

  ஒண்டமிழ்த்தாய் சிலம்படியின் முன்னேற்றம் ஒவ்வொன்றும் உன்முன் னேறற்ம்! கண்டறிவாய்! எழுந்திரு நீ! இளந்தமிழா, கண்விழிப்பாய்! இறந்தொழிந்த பண்டை நலம் புதுப்புலமை பழம்பெருமை அனைத்தையும்நீ படைப்பாய்! இந்நாள் தொண்டுசெய்வாய்! தமிழுக்குத் துறைதோறும் துறைதோறும் துடித்தெழுந்தே! உயர்தமிழ்த்தாய் இந்நிலத்தில் அடைகின்ற வெற்றியெலாம் உன்றன் வெற்றி! அயராதே! எழுந்திருநீ! இளந்தமிழா, அறஞ்செய்வாய்! நாமடைந்த துயரத்தைப் பழிதன்னை வாழ்வினிலோர் தாழ்மையினைத் துடைப்பாய் இந்நாள் செயல்செய்வாய் தமிழுக்குத் துறைதோறும் துறைதோறும் சீறி வந்தே. வாழியநீ! தமிழ்த்தாய்க்கு வரும்பெருமை உன் பெருமை! வயிற்றுக்கு ஊற்றக் கூழின்றி வாடுகின்றார்; எழுந்திருநீ! இளந்தமிழா குறைதவிர்க்க ஆழிநிகர் படைசேர்ப்பாய்! பொருள்சேர்ப்பாய்! இன்பத்தை ஆக்குவிப்பாய்! ஊழியஞ்செய் தமிழுக்குத் துறைதோறும் துறைதோறும் உணர்ச்சி கொண்டே உணர்ந்திடுக தமிழ்தாய்க்கு வருந்தீமை உனக்குவரும் தீமை அன்றோ! பிணிநீக்க எழுந்திருநீ இளந்தமிழா, வரிப்புலியே, பிற்றை ...