மருமகள்
- க.தமிழமல்லன்
“இனி ஒரு நொடி கூட நான் இங்கிருக்கமாட்டேன். உங்க அப்பாவுக்குக் கொஞ்சங் கூட நாகரிகமே தெரியவில்லை. இவ்வளவு முதுமையிலும் கீழ்த்தரப்பண்பு போகவில்லையே! ஒன்று நான் இருக்க வேண்டும் அல்லது அவர் இருக்க வேண்டும். உடனே வழிபண்ணுங்கள்”
“இரு, இரு. அமைதியாய் இரு. எங்க அப்பா எப்படிப்பட்டவர் என்று தெரியாமல் பேசாதே!“
“எல்லாம் எனக்குத் தெரியும். நீங்கள் என்ன ...