image-2769

நன்கறிந்து எழுதுக!

  இணையப் பயன்பாடு நமக்கு உதவியாகவும் உள்ளது;  தக்கார் பயன்படுத்தும் பொழுது பெருநன்மை விளைவிக்கின்றது. அதுவே அல்லார் கையில் அகப்படும்பொழுது நல்லவற்றைத்  தொலைக்கும் தீய உருவாய் விளங்குகின்றது. இணையம் இதற்குப் பொறுப்பேற்க இயலாது. ஆனால், இதனைப் பயன்படுத்துநர் தங்களுக்குள் கட்டுப்பாடு வைத்துக்  கொண்டு மனம் போன போக்கில் எழுதுவதை நிறுத்த வேண்டும். 'கற்றது கைம்மண்ணளவு கல்லாதது ...
image-2725

தமிழ் எழுத்தொலிகளுக்கான ஆங்கில ஒலிபெயர்ப்பு வரையறை – கலந்துரையாடல்

  பேரன்புடையீர், வணக்கம்.  தமிழ்ப்பெயர்ச் சொற்களையும் தமிழ் மேற்கோள்களையும்  அவ்வாறே ஆங்கிலத்தில் குறிப்பிடுகையிலும் தமிழ் இலக்கியங்களை ஆங்கில ஒலி பெயர்ப்பில் குறிப்பிடுகையிலும் தமிழ் எழுத்தொலிகளுக்குப் பொருந்தி வரும்  வரிவடிவங்களே ஏற்கத்தக்கன. இப்பொழுது வெவ்வேறு வகையாகப் பின்பற்றப்படுகின்றன. சிலர்,  ஙகர, ஞகர, நகர, ணகர, னகர வேறுபாடுகளோ லகர, ளகர, ழகர வேறுபாடுகளோ ரகர, றகர வேறுபாடுகளோ தேவையில்லை என ஒரே ...
image-2716

வள்ளுவரும் அரசியலும் 2 -முனைவர் பா.நடராசன், ச.ம.உ.,

  (16 மார்ச்சு 2014 இதழின் தொடர்ச்சி)   ஏனெனில் குடியாட்சி அமையலாம்; ஆனால் அந்தக் குடியாட்சியில் முறைமை செய்யப்படாத முற்போக்கான பொருளாதாரக் கொள்கைகள் நிலை நாட்டப் படாது இருந்தால், நாட்டிலே பொருள் வளம் மிகுதலில்லாது போய்விடும்; அப்போது குறிக்கோளாகிய இன்பம் எய்துவது எவ்வாறு?   நேர்மாறாக முடியாட்சி இருக்கலாம்; ஆனால் அவ்வாட்சியில் நாட்டில் நல்லமைதி நிலவி மக்கள் பொருள் ...
image-2702

ஒற்றுமையே உயர்நிலை – கவிமணி

                ஒற்றுமையாக உழைத்திடுவோம் - நாட்டில்      உற்ற துணைவராய் வாழ்ந்திடுவோம்; வெற்றுரை பேசித் திரிய வேண்டாம் - இன்னும்      வீணாய்ப் புராணம் விரிக்க வேண்டாம்.                 கூடி விருந்துண்ண வேண்டவில்லை - பெண்ணைக்      கொண்டு கொடுக்கவும் வேண்டவில்லை; நாடி எவரொடும் நட்பினராய்த் - தேச      நன்மைக் குழைப்பதில் நட்டம் உண்டோ?                    கீரியும் பாம்புமாய்ச் சண்டையிட்டு - சாதி      கீழென்றும் மேலென்றும் ...
image-2698

என்றும் உள்ள தென்றமிழ்- நாமக்கல் கவிஞர்

  அமிழ்தம் எங்கள் தமிழ்மொழி        அன்னை வாழ்க வாழ்கவே. வைய கத்தில் இணையி லாத               வாழ்வு கண்ட தமிழ் மொழி        வான கத்தை நானி லத்தில்               வரவ ழைக்கும் தமிழ்மொழி பொய்அ கந்தை புன்மை யாவும்               போக்க வல்ல தமிழ்மொழி        புண்ணி யத்தை இடைவி டாமல்               எண்ண வைக்கும் தமிழ்மொழி மெய்வ குத்த வழியி லன்றி               மேலும் எந்தச் செல்வமும்        வேண்டி ...
image-2695

தமிழ்த் தெய்வ வணக்கம் – கவிஞர் முடியரசன்

தாயே உயிரே தமிழே நினைவணங்கும் சேயேன் பெறற்கரிய செல்வமே - நீயே தலைநின்றாய் இவ்வுலகில் தாள்பணிந்தேன் நீயிங் கிலையென்றால் இன்பமெனக் கேது. பாவால் தொழுதேத்திப் பாரில் நினையுயர்த்தும் ஓவாப் பணிசெய்ய உன்னுகின்றேன் - நாவாழும் மூவா முதலே முழுமைபெறும் செம்பொருளே சாவா வரமெனக்குத் தா. தென்பால் உகந்தாளும் தெய்வத் திருமகளே என்பால் அரும்பி எழுமுணர்வை - அன்பால் தொடுத்தே அணிதிகழச் சூட்டினேன் பாவாய் அடிக்கே எனையாண் டருள். - பூங்கொடி
image-2692

வேண்டும்! வேண்டும்! – ஓ.மு.குருசாமி

  தாய்மொழியாம் தமிழ்மொழியைக் காக்க வேண்டும்! தளராமல் எந்நாளும் உழைக்க வேண்டும்! வாய்மொழியைச் செயலுருவா ஆக்க வேண்டும்! வள்ளுவர்தொல் காப்பியமும் பரவ வேண்டும்! ஆய்வுரைகள் தமிழ்மொழியில் பெருக வேண்டும்! தண்டமிழே தலை சிறந்து விளங்க வேண்டும்! ஓய்ந்துவிடும் மனமுடையார் குறைய வேண்டும்! உலகமெலாம் தமிழ்நூல்கள் செல்ல வேண்டும்! திருவுடைய ‘குறள் நெறியே’ பரவ வேண்டும்! தினந்தினமும் திருக்குறளை ஓத வேண்டும்! அருளுடையார் அன்புடையார் பெருக வேண்டும்! அறிவுடையார் மொழிகாக்கக் கிளம்ப வேண்டும்!. உருவடைய நற்செயலை ...
image-2707

நயம் மிக்கச் சங்கக்கவியும் கற்பனை வறண்ட இடைக்காலக் கவியும் – பேரறிஞர் அண்ணா

  கையில் ஊமையர்   ஒரு   மாதத்திற்கு  முன்  சங்க  இலக்கியங்களில்  ஒன்றான குறுந்தொகையில், ஓர்  உவமையைப்  படித்தேன்.  இந்தக் காலத்தில் கற்பனை நிலை எவ்வளவு தூரம் கயமைத்தனத்திற்குப் போயிருக்கிறது என்பதை ஊகித்தேன். வேறுபாட்டைப் பாருங்கள்!   இந்தக் காலத்துப் புலவர்கள்  எந்தக்  கருத்தை  ஓர்  அந்தாதி மூலமாகவோ, வெண்பா மூலமாகவோ விளக்குவார்களோ, அதைக் குறுந்தொகை ஆசிரியர் ஒரே அடியில் ...
image-2687

பிறமொழி கலந்து பேசக் கூசு ! – கவிஞர் இரா .இரவி !

  இயல் இசை நாடகம் முத்தமிழ் முத்திரை தமிழ் ! ஈடு இணையற்ற உயர்தனிச் செம்மொழி தமிழ் ! திருக்குறளால் பெருமை பெற்ற மொழி தமிழ் ! திருவள்ளுவரால் உலகம் அறிந்த மொழி தமிழ் ! எண்ணிலடங்காச் சொற்களின் சுரங்கம் தமிழ் ! எண்ணிட இனித்திடும் மொழி நம் தமிழ் ! உலகின் முதல் மொழி தமிழ் உணர்ந்திடுக ! உலகில் பன்னாட்டு மொழி தமிழ் அறிந்திடுக ...
image-2705

திருக்குறளில் உருவகம் 2 – ஆங்கிலப் பேராசிரியர் வீ.ஒப்பிலி

   (16.03.14 இதழின் தொடர்ச்சி)     ஓரறிவின்: ஓரறிவுள்ள உயிரினத்தை - சிறப்பாக மரத்தை, பயனுள்ளது, பயனற்றது என இரு வகையாகக் காண்கிறார் கவிஞர். உலகில் வாழும் மக்களும் அதற்கேற்ப இருவகையாகத் தோற்றமளிக்கின்றனர். இதுவன்றிப் பொதுவாக ஆரறிவு படைத்த மனிதனோடு ஒப்பிட்டுப் பார்த்தால், மரம் தாழ்ந்ததே. ஆதலால் மனித குண நலன்களில் குன்றிய யாவரும் பெரும்பாலும் மரமாகக் காட்சியளிக்கின்றனர். ...
image-2642

குவைத்து வளைகுடா வானம்பாடிகளின் திங்கள் கூட்டம்

  குவைத்து வளைகுடா வானம்பாடிகளின் திங்கள் கூட்டம் 14-03-2014 வெள்ளி அன்று மிகச் சிறப்பாக, தோழர் செங்கொடி அரங்கத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சியை வானம்பாடி நிறுவனர் திரு சேது அவர்கள் தொடங்கி வைக்க, தமிழ்த்தாய் வாழ்த்துடன்  தொடங்கியது. செல்வி அனு,  திருக்குறள்களைத் தன் மழலை மொழியால் வழங்க, நிகழ்ச்சி இனிதே  களைகட்டியது. நிகழ்ச்சிக்கு ”அரவணைப்பு” திரு ...