உச்சநீதிமன்றத் தீர்ப்பை மறு ஆய்வு செய்ய வேண்டும்! – வைகோ
உச்சநீதிமன்றத் தீர்ப்பை மறு ஆய்வு செய்ய வேண்டும்! – வைகோ
இராசீவுகாந்தி கொலை வழக்கில் உச்சநீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பை மறு ஆய்வு செய்ய வேண்டும் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வலியுறுத்தியுள்ளார்.
சனிக்கிழமை, இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை:
இராசீவுகாந்தி கொலை வழக்கில் 7 தமிழர்களை விடுதலை செய்வது தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி முதலான 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சட்ட அமர்வில் நடைபெற்றது.
இந்த வழக்கில் அளிக்கப்பட்ட தீர்ப்பில், மரணத் தண்டனை விதிக்கப்பட்டு, பின்னர்த் தண்டனை குறைக்கப்பட்ட கைதிகளை மத்திய அரசின் ஒப்புதலுடன்தான் மாநில அரசு விடுதலை செய்ய முடியும் என்று கூறப்பட்டுள்ளது. இதனை ஏற்க முடியாது.
இந்திய அரசியல் சட்டம் 161-ஆவது பிரிவு மாநில அரசுக்கு வழங்கியுள்ள அதிகாரம் மத்திய அரசுக்குக் கட்டுப்பட்டது இல்லை என்பதாகும். எனவே, உச்சநீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பை மறு ஆய்வு செய்ய வேண்டும்.
மனிதாபிமான அடிப்படையில் 7 பேரையும் விடுதலை செய்வதற்கு மத்திய அரசு முன் வரவேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.
சட்ட நூலில் இருக்கிற ஒரு கூற்றுக்குப் புறம்பாக ஒரு நாட்டின் உச்சநீதிமன்றமே செயல்படுகிறது எனில் இந்நாட்டில் இனியும் நாம் நீதி என்கிற ஒன்றை எதிர்பார்க்க முடியாது.