mullaaippaatu_attai02

உலகியல் பொருளறிவு பிறரிடம் இல்லை

  இத்துணை நுட்பமான உலகியற் பொருள் அறிவு பண்டைக்காலத்துத் தண்டமிழ்ப் புலவரிடங் காணப்படுதல் போல, மற்றைமொழிகளில் வல்லராய் விளங்கிய ஏனையப் பழம் புலவரிடத்துங் காணப்படுதல் அரிது. இன்னும் இவ்வாறே பழைய தமிழ்ப்புலவர் உலக இயற்கைக்கும் மக்களியற்கைக்கும் உள்ள பொருத்தம் பற்றி அவர் வெளியிட்ட அரிய கருத்துக்களின் விழுப்பமும் பத்துப்பாட்டு, எட்டுத்தொகை, பதினெண்கீழ்க்கணக்கு நூல்களிற் பரக்கக் காணலாம்.

-தமிழ்க்கடல் மறைமலையடிகள்:

முல்லைப்பாட்டு ஆராய்ச்சியுரை: பக்கம். 32-33