(வெருளி நோய்கள் 1446 -1450: தொடர்ச்சி)

நாய்கள் மீதான இயல்புமீறிய பேரச்சம் நாய்வெருளி.
நாய் குரைப்பு ஒலி, நாய் அருகே வருதல், நாய்க்கூட்டம், நாய் தன்னையோ பிறரையோ துரத்தல், நாய்க்கடிக்கு ஆளானவர்கள் அருகில் இருத்தல், நாய் கடித்தல் போன்ற சூழல்களில் மிகுதியான பேரச்சம் கொள்ளுவர்.
Cyno, kyno ஆகிய கிரேக்கச் சொற்களின் பொருள் நாய்.
.
00

நாய்க்குட்டிபற்றிய காரணமற்ற அளவுகடந்த பேரச்சம் நாய்க்குட்டி வெருளி.
நாய் வெருளி – Cynophobia / Kynophobia உள்ளவர்களுக்கு நாய்க்குட்டி வெருளி வரும் வாய்ப்பு உள்ளது.
நாய்க்குட்டியின், மேலே தாவிக் கொஞ்சுதல் போன்ற செயல்களால் வெறுப்பும் கடித்துவிடுமோ என்ற பேரச்சமும் கொள்வோர் உள்ளனர்.
00

பச்சை எலுமிச்சை போல் தோன்றும் நாரத்தம்பழம்(lime) என்பதைத் தேசிப்பச்சை நிறமுடையது, தேசிப்பழம் என விளக்குகிறது விக்கிபீடியா. நாரத்தை என்றே நான் கருதுகிறேன். வேறு சரியான விளக்கம் வந்தால் குறிப்பை மாற்றிக் கொள்ளலாம்.
00

நார்வே குறித்த வரம்பற்ற பேரச்சம் நார்வேய வெருளி.
நார்வே நாடு மீதும் அந்நாட்டின் மக்கள், உணவுப் பழக்க வழக்கங்கள், விளை பொருள்கள், தொழில், வணிகம், முன்னேற்றம், நாணயம் முதலானவை மீதும் தேவையற்ற, காரணமற்ற பேரச்சத்திற்கு ஆளாவோர் உள்ளனர்.

00

நாற்காலிபற்றிய பெருங்கவலையும் பேரச்சமும் நாற்காலி வெருளி.
நாற்காலி, அமர்ந்து இருத்தல், நாற்காலியைக் குறியீடாகக் கொண்டு பதவி முதலானவை மீது காரணமற்ற தேவையற்ற பெருங்கவலையும் பேரச்சமும் கொள்வோர் உள்ளனர்.
Cathedra என்னும் இலத்தீன் சொல்லின் பொருள் நாற்காலி, அமர்தல்.
00

(தொடரும்)
இலக்குவனார் திருவள்ளுவன்
வெருளி அறிவியல் 3/5