வெருளி நோய்கள் 1446 -1450: இலக்குவனார் திருவள்ளுவன்

(வெருளி நோய்கள் 1441 -1445: தொடர்ச்சி)
வெருளி நோய்கள் 1446 -1450
- நாட்டார் இசை வெருளி – Kantoriphobia/Choreftikophobia/ Rusmusophobia/Weltmusikophobia
நாட்டுப்புற இசை / நாட்டார் இசை தொடர்பான அளவுகடந்த பேரச்சம் நாட்டார் இசை வெருளி.
நாட்டுப்புற இசை என்பது மரபு வழியிலான இசையே. செவ்விசையும் இதில் அடங்கும். எனினும் அடித்தட்டு மக்கள் பெரும்பாலோர் பயன்படுத்துவதால், இதனை இழிவாக எண்ணுவோர் பலர் உள்ளனர். இது, போர், ஒடுக்குமுறை, அரசியல் அதிகாரத்திற்கு எதிரான எதிர்ப்புக் குரலாகவும் (Protest Music) பயன்படுத்தப்பட்டுள்ளது.
உலகெங்கிலும் உள்ள பூர்வகுடி மக்களின் நாட்டுப்புறப் பாடல்கள், அவர்களின் வரலாற்றை மீட்டெடுப்பதற்கும், இனப்படுகொலை, கட்டாயப் பண்பாட்டு ஒருங்கிணைப்புக்கு எதிரான எதிர்ப்பைப் பதிவு செய்வதற்கும் பயன்படுகின்றன. நாட்டிசை எதிர்(Anti-Folk)
1980-களில் நியூயார்க்கு நகரில் உருவான இந்த வகை, வணிகமயமாக்கப்பட்ட மரபார்ந்த நாட்டுப்புற இசையின் தீவிரத்தன்மைக்கு எதிராகக் கிளர்ந்தெழுந்தது.
தமிழகத்தைப் பொறுத்தவரை, நாட்டுப்புறப் பாடல்கள் (நாட்டார் பாடல்கள்) என்பவை உழைக்கும் மக்களின் களைப்பைப் போக்க மட்டுமல்லாமல், குமுகத்தில் நிலவும் ஏற்றத்தாழ்வுகள், வறுமை, இயற்கை இடர்ப்பாடுகளை எதிர்த்துப் பாடும் பாடல்களாகவும் இருந்துள்ளன. ஆதலின் எதிர்ப்பிற்கு உள்ளாவோர் தரப்பினருக்கு நாட்டுப்புற இசை என்பது பேரச்சத்தை விளைவித்தது.
Kantori என்பது நாட்டைக் குறிக்கும். இங்கே நாட்டின் இசையை நாட்டார் இசையைக் குறிக்கிறது. இசை என்பதில் பாடலும் அடக்கம்.
Choreftiko என்பது நாட்டிய இசையைக் குறிக்கிறது. ஆடலுடன் இணைந்த நாட்டுப்புற இசையை இங்கே குறிக்கிறது.
Rusmus என்பது உருசிய நாட்டார் இசையைக் குறிக்கும் இத்தாலியச் சொல் என்பர் சிலர்.
Weltmusik என்பது உலக இசையைக் குறிக்கும் செருமானியச் சொல்.
00
- நாட்டவையர் வருகை வெருளி – Maginvalophobia
நாடாளுமன்ற அவை உறுப்பினர்கள் வருகை தொடர்பாக ஏற்படும் அளவுகடந்த காரணமற்ற பேரச்சம் நாட்டவையர் வெருளி.
பொதுவாகச் சிறப்பாளர்களை அழைத்து மகிழ்வித்துத் தங்கள் பணிகளைக்காட்டி அரசு உதவிகள் பெற விரும்புவர். இருப்பினும் தாமாகவே சிறப்பு நிலையினர் குறிப்பாக நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆகிய மக்கள் சார்பாளர்கள் வருகை புரிந்தால குற்றம் குறை ஏதும் கண்டறிந்து செயல்பாட்டிற்குத் தடை விதிப்பார்களோ என்ற பேரச்சத்திற்கு ஆளாகின்றனர்.
பொதுவாக இவ்வெருளி மருத்துவமனையினருக்கு ஏற்படும். ஏனெனில் இங்குதான், நேர்ச்சிகளின்(விபத்துகளின்) பொழுதும், தொற்றுநோய் பரவும்பொழுதும், அவசர நேர்வுகளிலும் நோயாளிகளைப் பார்ப்பதற்கு மக்கள் சார்பாளர்கள் திடீரென்று வந்து செல்கின்றனர்.
நாடாளுமன்ற அவையைச் சேர்ந்தவர்கள் என்பதையே நாட்டவையர் எனக் குறித்துள்ளேன். இது மாநில அளவிலான சட்டமன்ற அவையினரையும் குறிக்கும்.
பண்டைய உரோமில் தேர்ந்தெடுக்கப்பட்ட அதிகாரிகளை magistratus என்னும் சொல் குறிக்கும். இதிலிருந்து வந்ததே Magi என்பது. மருத்துவமனையைக் குறிக்கும் valetundinarium என்னும் சொல்லில் இருந்த உருவானதே valo என்பது.
00
- நாட்டியவெருளி-Choreophobia/ Chorophobia/ Saltaphobia / Saltophobia
நாட்டியம் குறித்த இயல்பு கடந்த பேரச்சம் நாட்டிய வெருளி.
நாட்டியத்தை ‘நரகத்தின் பாதை’ என்று சொல்லி வெறுப்போரும் அஞ்சுவோரும் இருக்கின்றனர்.
நாட்டியத்தில் இணைந்து ஆடுநர் – குறிப்பாக மறுபாலினத்தவர் – தொட நேருவது கூறித்து வெறுப்பு அடைந்து நாட்டியத்திற்கு அஞ்சுகின்றனர். எனவே, நாட்டிய வெருளிக்கு ஆளானவர்கள், தீண்டல் வெருளி(Chiraptophobia), தீண்டுகை வெருளி (Haptophobia/ Haphephobia/ Haptephobia/ haphophobia/ hapnophobia/ Aphephobia) ஆகியவற்றிற்கும் ஆளாகின்றனர்.
நாட்டியம் மீதான அளவு கடந்த பேரச்சத்தை saltaphobia / Saltophobia என்றும் சொல்கின்றனர்.
salta என்னும் இலத்தீன் சொல்லிற்கு நேர் பொருள் குதித்தல். இவற்றைக் குதியாட்ட வெருளி எனலாம். இங்கே குதித்தாடுதல் என்னும் பொருளில்நாட்டியத்தைக் குறிப்பதால் தனியே குறிக்காமல் நாட்டிய வெருளியாகவே குறிக்கலாம்.
choro என்னும் கிரேக்கச் சொல்லிற்கு நாட்டியம் என்று பொருள்.
00
- நாணயப் பொறி வெருளி – Ywaohuphobia
நாணயப் பொறி தொடர்பான அளவுகடந்த பேரச்சம் நாணயப் பொறி வெருளி.
நாணயப் பொறி =சூதாட்டத்தில் பணம் செலுத்துவதற்குரிய துளை உள்ள இயந்திரம்.
00
- நாயகன் வெருளி – Herophobia
திரைப்பட/தொலைக்காட்சிப் படக் கதை நாயகர்கள் தொடர்பான வரம்பற்ற பேரச்சம் நாயகன் வெருளி.
கதை நாயகர்கள் தனித்து நின்று பலரை எதிர்ப்பது போன்ற காட்சிகளால் அவர்கள் மீது பேரச்சம் கொள்வோரும் உள்ளனர். இப்பொழுதெல்லாம்நாயகர்களை மதிப்பதை விட எதிர்நாயகர்கள்பால் ஈர்ப்பு உள்ளவர்களே மிகுதியாக உள்ளனர். எதிர்நாயகர் நாயகிகளைக் கதைத் தலைவர்களாகக் காட்டுவதால் வரும் தீய விளைவே இது.
00
(தொடரும்)
இலக்குவனார் திருவள்ளுவன்
வெருளி அறிவியல் 3/5







Leave a Reply