SVithiyanandan01

சங்கக் காலத்தில் ஆரிய நம்பிக்கை அன்றாட வாழ்வில் இடம்பெறவில்லை.

சங்க காலத்திலே தமிழகத்தில் அந்தணரும், முனிவரும் வாழ்ந்தனரெனினும் அவர்கள் செல்வாக்குப் பிற்காலத்தில் இருந்த அளவுக்கு மேம்பட்டிருக்கவில்லையெனக் கூறலாம். சங்க நூல்களில் ஆரிய நம்பிக்கைகளும், சமயக் கோட்பாடுகளும் கூறப்பட்டிருப்பது உண்மையே. ஆனால் பொதுவாக நோக்குமிடத்து மக்களின் அன்றாட வாழ்க்கையில் அவை இடம் பெறவில்லை எனலாம். நகர வாழ்க்கையில் இவற்றின் செல்வாக்கு சிறிது சிறிதாகப் பெருகிக்கொண்டே வந்தது. பொதுமக்கள் தங்கள் மூதாதையரின் வழிபாட்டு முறைகளையே பின்பற்றினர்.

-பேராசிரியர் முனைவர் சு.வித்தியானந்தன்