DSC04068

புழுதிவாக்கம் தமிழ் இலக்கிய மன்றம் ‘சங்க இலக்கிய அறிமுகம்’ என்னும் நூல் வெளியீட்டையும் பரிசளிப்பையும் மிகச்சிறப்பாகச் செய்திருந்தது. இதன் அமைப்பாளர் திரு த.மகாராசன், பிற பொறுப்பாளர்கள் நன் முயற்சியால் தமிழ் மணம் வீசிய அரங்கு நிறைந்தவிழாவாக நடைபெற்றது.

கடந்த 16.09.2012 அன்று இம்மன்றத்தின் சார்பில் நடத்தப் பெற்ற சங்க இலக்கியப் பெருவிழாவில் அறிஞர்கள் ஆற்றிய உரையையே இப்பொழுது நூல் தொகுப்பாக்கி உள்ளனர்.

  1. சங்க இலக்கியக் களஞ்சியம் – ந.முத்து(ரெட்டி)
  2. சங்க இலக்கியக் கட்டுரைகள்: ஓர் அறிமுகம் – புலவர் கோ.பார்த்தசாரதி
  3. ஆற்றுப்படை நூல்கள் – முனைவர் செங்கைப் பொதுவன்
  4. குறிஞ்சிப் பாட்டும் முல்லைப் பாட்டும் – முனைவர் சே.ஆர்.இலட்சுமி
  5. மதுரைக் காஞ்சியும் பட்டினப்பாலையும் – கவிஞர் வாசல் எழிலன்
  6. நெடுநல்வாடையும் மலைபடுகடாமும் – முகிலை இராசபாண்டியன்
  7. நற்றிணையும் குறுந்தொகையும் – முனைவர் சீ.செஞ்சுலட்சுமி
  8. ஐங்குறுநூறும் கலித்தொகையும் – முனைவர் பா.தாமோதரன்
  9. அகநானூறும் புறநானூறும் – முனைவர் இரா.சொக்கலிங்கம்
  10. சங்க இலக்கியமும் திருக்குறளும் – சிரீபிரியாஇராசராசன்

எனப் பதின்மர் ஆற்றிய உரைகள் கட்டுரை வடிவில் இடம் பெற்றுள்ளன.

DSC04052

‘பதிற்றுப்பத்தும் பரிபாடலும்’ என்னும் தலைப்பில் உரையாற்றிய முனைவர் மறைமலை இலக்குவனார், உரையாற்றியதைத் தொடர்ந்து அமெரிக்கா சென்றுவிட்டமையால், கட்டுரையை அளிக்க இயலவில்லை. அத்தலைப்பில் மன்றஅமைப்பாளர் த.மகாராசன்கட்டுரையை அளித்துள்ளார்.

இந்நூலில் உள்ள கட்டுரைகளைத் தனித்தனியே பள்ளி மாணாக்கர்க்கு வெவ்வேறு வகுப்புகளில் பாடவகுப்புகளில் சேர்ப்பது மாணவ உலகம் சங்க இலக்கியத்தைப் புரிந்து கொள்ள எளிதாக உதவும். இந்நூலை தமிழ் மாணாக்கர்க்குப் பாடமாக வைக்கலாம்.

கட்டுரையாளர்கள் அறிமுகத்துடன் ஏறத்தாழ174 பக்கங்கள் கொண்ட இந்நூலின் பதிப்பாசிரியர்கள் முகிலை இராசபாண்டியன், ந.முத்து(ரெட்டி), த.மகாராசன், அ.வே.செல்லப்ப(ரெட்டி) சிறப்பாகப் பதிப்பித்துள்ளனர். (புழுதிவாக்கம் இலக்கிய மன்றத்தின் சார்பில் முக்கடல் அச்சுக்கூடம் அச்சி்ட்டுள்ளனர். விலை உரூபாய் 150/-)

இந்நூலின் அறிமுகவிழா இன்று (ஆடி 4 , 2045 / சூலை 20, 2014) மாலை நடைபெற்றது. இதன்மூலம் சங்க இலக்கிய மணத்தை மீண்டும் நுகர்வதற்கு இப்பகுதி மக்களுக்கு வாய்ப்பு அமைந்தது.

மன்ற அமைப்பாளர் த.மகாராசன் வரவேற்புரை ஆற்றினார்.

மன்றப்புரவலர்ந.முத்து(ரெட்டி) தலைமை தாங்கி முன்னுரையிலும் முடிவுரையிலும் சங்க இலக்கியப்பாடல்களை மாணாக்கர்க்கும் புரியும் வகையில் விளக்கினார்.

நூலை வெளியிட்ட முனைவர் ஒப்பிலா. மதிவாணன் நூலின் சிறப்பு குறித்தும் சங்க இலக்கியங்கள் குறித்தும் சிறப்பாக உரையாற்றினார்.

தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழக முதுநிலை மேலாளர்(பணிநிறைவு) விசயலட்சுமி நூலின் முதல்படியைப் பெற்றுக் கொண்டு வாழ்த்தினார்.

 

அயராது அருந்தமிழ்ப்பணி ஆற்றி வரும்

  •   தலைநகர்த்தமிழ்ச்சங்கம், ஒய்.எம்.சி.ஏ.பட்டிமன்றம்,
  •   பாரதிகலைக்கழகம், நங்கநல்லூர்,
  •   திருவள்ளுவர் இலக்கிய மன்றம், வாணுவம் பேட்டை,
  •   உலகத்தமிழ் ஒப்புரவாளர் பேரவை,
  •   தமிழ் இலக்கியப் பேரவை, பழவந்தாங்கல்,
  •   தமிழ்க்கலை இலக்கியப் பேரவை, மூவரசம்பட்டு,
  •   பாரதி-பாரதிதாசன் கவிதைஅமைப்பு,
  •   செந்தமிழ் இலக்கிய மன்றம், நங்கநல்லூர்,
  •   திருக்குறள் மன்றம், மேத்தாநகர்,
  •   திருக்குறள் பேரவை, அடையாறு,
  •   திருக்குறள்பேரவை, குரோம்பேட்டு,
  •   உலகத்திருக்குறள் மையம்,
  •   திருக்குறள் திருத்தொண்டர் அவையம்,
  •   திருக்குறள் வாழ்வியல் நெறிச்சங்கம்,வில்லிவாக்கம்,
  •   கவிதைச்சிறகுகள்,
  •   மகாகவி பாரதி நற்பணிமன்றம், மதுராந்தகம்,
  •   திருவள்ளுவர் தமிழ்ப்பட்டறை, கருங்குழி,
  •   பாரதி கலை இலக்கிய மன்றம்,
  •   திருக்குறள்பேரவை, நங்கநல்லூர்,
  •   திருக்குறள் ஊழியம் (மிசன்), ஆதம்பாக்கம்,
  •   பாரதி-நெல்லையப்பர் மன்றம்

ஆகிய அமைப்புகளின் பொறுப்பாளர்கள் மேடையில் நூல் படிகளைப் பெற்றுக் கொண்டனர்.

DSC04051

 

பெரியார் அரசு மேனிலைப்பள்ளி உ.த.ஆ. முத்தையன், பிரிலியண்ட்டு பதின்மேல்நிலைப்பள்ளியின் தாளாளர் அரிமா துரை.சுப்பிரமணியம், புலவர் கோ.பார்த்தசாரதி, புலவர் செ.தட்சிணாமூர்த்தி, போட்டி-பரிசு ஒருங்கிணைப்பாளர் பொருநை மாயன், ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

மாணாக்கர்களின் கலைநிகழ்ச்சிகளைத் தொடர்ந்து புழுதிவாக்கம் இலக்கிய மன்றம் நடத்திய 11 வகையான போட்டிகளில் வாகை சூடியவர்களுக்குப் பரிசுகளும் சான்றிதழ்களும் வழங்கப் பெற்றன.

முனைவர் குமரிச்செழியன், விழா நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கிய பொழுது ‘அகரமுதல’ மின்னிதழில் விழா நடைபெறும் செய்தியைக் கண்டு வாழ்த்து வழங்கிய பேரா. இராசம் அம்மையார் முதலானோரைக் குறிப்பிட்டு மகிழ்ந்தார். தமிழ்த்தொண்டர் அ.வே.செல்லப்ப(ரெட்டி) நன்றி நவின்றார்.

உரையாளர்கள் அனைவரும் நூலில் இருந்தும் தனிப்பட்ட   முறையிலும் சங்க இலக்கியப்பாடல்களை விளக்கிச்சங்கத்தமிழ் மணத்தைப் பரப்பினர்.

புழுதிவாக்கம் இலக்கிய மன்றம் தொடர்ந்து சிறப்பாகச் செயலாற்ற ‘அகரமுதல’ வாழ்த்துகிறது.

ஒளிப்படங்களைச் சொடுக்கினால் பெரிதாகக் காணலாம்

ஒளிப்படங்கள்: சிவகுருநாதன்  & ஈழக்கதிர்