thalaippu_mullainilathavar_unavu

முல்லை நிலத்தார் உணவு

  தொண்டைநாட்டு முல்லை நிலத்தார் பாலையும் திணையரிசிச் சோற்றையும் உண்டனர். (பெ.ஆ.படை அடி:167-168). முல்லை நிலத்துச் சிற்றூர்களில் இருந்தவர் வரகரிசிச் சோறும் அவரைப்பருப்பும் கலந்து செய்த “கும்மாயம்” எனப்பெயர் பெற்ற உணவை உண்டனர். (பெ.ஆ.படை அடி:192-195). நன்னனது மலைநாட்டு முல்லை நிலத்தார் சிவந்த அவரை விதைகளையும் மூங்கிலரிசியையும் மேட்டு நிலத்தில் விளைந்த நெல்லின் அரிசியையும் புளி கரைக்கப்பட்ட உலையிற்பெய்து குழைந்த புளியங்கோலாக்கி உட்கொண்டனர். அடி:434-436. பொன்னை நறுக்கினாற்போன்ற நுண்ணிய ஒரே அளவுடைய அரிசியை வெள்ளாட்டு இறைச்சியுடன் கூட்டி ஆக்கிய சோற்றையும் திணை மாவையும் உண்டனர். அடி: 440-445.

முனைவர் மா.இராசமாணிக்கனார்

படம் நன்றி: த.இ.க.கழகம்

http://www.varalaaru.com/design/article.aspx?ArticleID=525&Title=

முத்திரை-வரலாறு தளம் : muthirai_varalaru.thalam