செயலலிதா வழியில் பணியாற்றுவேன்! – சசிகலா
செயலலிதா வழியில் பணியாற்றுவேன்! – பொதுச்செயலர் பொறுப்பேற்று சசிகலா பேச்சு அ.தி.மு.க. பொதுச் செயலாளராகச் சசிகலா ( மார்கழி 16, 2047 / திசம்பர் 31, 2016 அன்று) பொறுப்பு ஏற்றார். இராயப்பேட்டை தலைமைக் கழகத்தில் எம்ஞ்சியார், செயலலிதா படங்களைத் தொட்டு வணங்கி விட்டுப் பொதுச்செயலாளர் இருக்கையில் அமர்ந்த அவர் அ.தி.மு.க. மூத்த தலைவர்களுடன் நெறியாடல் நடத்தினார். பின்னர் முதல்மாடியில் உள்ள அரங்குக்குச் சென்று அ.தி.மு.க. பொறுப்பாளர்கள் மத்தியில் பேசினார். ‘‘தலைமைக் கழகப் பொறுப்பாளர்களே, அமைச்சர் பெருமக்களே, மாவட்டக் கழகச் செயலாளர்களே,…
பன்னீர் தொடர்தலே சாலவும் நன்று! – இலக்குவனார் திருவள்ளுவன்
பன்னீர் தொடர்தலே சாலவும் நன்று! மூன்றாவது முறையாக ஓ.பன்னீர்செல்வம் முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ளார். ஆனால், முதலிரு முறையும் முதல்வர் என்ற பெயரில் இரண்டாமவராகத்தான் இருந்தார். இப்பொழுதுதான் உண்மையாகவே முதல்வராகவே பொறுப்பேற்றுள்ளார் எனலாம். எனவே, அவரது தனித்த செயல்பாடுகள் வெளிவருகின்றன. ‘வருதா’ புயல் என்னும் பெரும் சூறைக்காற்றின் பொழுது எடுத்த நடவடிக்கையும், களத்திலிருந்து சிக்கல்களை எதிர்நோக்கி அலுவலர்களை ஒருங்குபடுத்தி ஆவன செய்தனவும் அனைத்துத் தரப்பாரின் பாராட்டுகளையும் பெற்றுள்ளன. இப்பொழுது சிலர் சசிகலாவே தமிழக முதல்வராகப் பொறுப்பேற்க வேண்டும் என்று குரல் கொடுத்துள்ளனர். ஆனால், அவர்…
தக்கவர் சசிகலாவே! – இலக்குவனார் திருவள்ளுவன்
தக்கவர் சசிகலாவே! ? அஇஅதிமுகவின் பொதுச் செயலாளராக யார் வரவேண்டும் என்பது அக்கட்சி சார்ந்தது. இதுகுறித்துப் பிறர் கருத்து தெரிவிக்கலாமா? ஆமாம். ஒரு கட்சியின் உட்கட்சி வேலைகுறித்துப் பிறர் கவலைப்படத் தேவையில்லைதான். ஆனால், அஇஅதிமுக ஆளுங்கட்சி. ஆளுங்கட்சியின் முடிவு அரசையும் கட்டுப்படுத்தும். எனவே, அக்கட்சி உறுப்பினர்கள் அல்லாதவர்களும் கருத்து தெரிவிக்கின்றனர். அவ்வாறு தெரிவிக்கும் பொழுது பலரும் வேண்டுமென்றே திரித்துப் பொய்யைப் பரப்புவதால் நாமும் நம் கருத்துகளைத்தெரிவிக்கலாம். ? ஆனால், அக்கட்சியில் ஒரு பகுதியினரும் அக்கட்சி சாராதவர்களில் பெரும்பகுதியினரும் சசிகலா பொதுச்செயலாளர் ஆகக்கூடாது என்றுதானே…
பண்பாட்டுச்சீரழிப்பிற்கு முற்றுப்புள்ளி வைப்போம்! – இலக்குவனார் திருவள்ளுவன்
பண்பாட்டுச்சீரழிப்பிற்கு முற்றுப்புள்ளி வைப்போம்! மக்கள் அறிந்தும் அறியாமலும் தவறு செய்பவர்களாக உள்ளனர். அறிந்தே தவறு செய்பவர்கள் அதனால் பெரும்பழி வந்தாலும் திருந்த மாட்டார்கள். ஆனால், பேரிழப்பிற்கும் பெருந்துன்பங்களுக்கும் ஆளாகும் பொழுது தவற்றை உணருவார்கள். கண்கெட்ட சூரிய வணக்கம் மேற்கொண்டு என்ன பயன்? ஆனால், அறியாமல் தவறு செய்பவர்கள் அதனைப் பிறர் சுட்டிக்காட்டும் பொழுது் திருத்திக் கொள்ள வேண்டும். அவ்வாறு திருத்திக் கொள்ளாவிட்டால் அவர்களும் அறிந்தே தவறு செய்பவர்களே! அதிமுக தலைவியின் செயலொன்று ஊடகங்களாலும் மக்களாலும் அங்கதமாகவும் கேலியாகவும் நேரடியாகவும் மறைமுகமாகவும் கூறப்பட்டாலும்…
இப்படியும் உண்டோ? -தமிழ்சிவா
இப்படியும் உண்டோ? எங்கள் ஊரில் கடற்கரைக் குதிரைக்கு இலையாய் இறக்கை முளைக்கும், நட்பே! உங்கள் ஊரில் அப்படி உண்டா? எங்கள் நாட்டில் பேய்மழை பெய்தால் ஏரியைத் திறந்து விட்டுக் கொள்(ல்)வோம் உங்கள் நாட்டில் இப்படி உதவலுண்டா? வண்டி வண்டியாய்த் த(வ)ந்த பொருளின்மேல் வருத்தமே படாமல் படத்தை ஒட்டுவோம் பச்சைக் குழந்தைக்கும் பச்சை குத்துவோம் தேரின் சக்கரத்தில் விழுந்த கன்றாய் ‘காரின்’ சக்கரத்திலும் விழுவோம் நன்றாய் இருக்கும் திசைநோக்கி இங்கிருந்தே வணங்குவோம் சிரிக்கும் குழந்தையாய் எரிக்கும் வெயிலை ஏற்று செத்துப் போவதையும் சிரமேற் கொள்வோம்!…
தி.மு.க.வும் அ.தி.மு.க.வும் துயரச்சூழலில் உள்ளனவோ! – இலக்குவனார் திருவள்ளுவன்
தி.மு.க.வும் அ.தி.மு.க.வும் துயரச்சூழலில் உள்ளனவோ! பொதுவாக நாம் ஒருவரை எப்பொழுது நேரில் சென்று ஆறுதல் சொல்வோம்? அவர் தோல்வியைச் சந்தித்தால், அவர் வருத்தத்தில் இருந்தால், அவர் நோய்வாய்ப்பட்டிருந்தால், அவர் நேர்ச்சியில்(விபத்தில்) சிக்கியிருந்தால், தொழிலில் எதிர்பாராச் சரிவைக் கண்டிருந்தால், இத்தகைய துன்பத்துயரத்தில் மூழ்கியிருந்தால், அவருக்கு ஆறுதல் தரவும் நம்பிக்கை தரவும், உங்கள் பக்கம் இருக்கிறோம், கவலற்க எனச் சொல்வதற்காக நேரில் சென்று தேறுதல் சொல்வதுதானே வழக்கம். ஒருவருக்கு ஒருவர் மற்றொருவருக்குப் பணஉதவி போன்ற ஏதேனும் உதவி செய்தால், உதவி பெறுபவர்தானே உதவி வழங்குநரை…
பிற கட்சிகளுக்கு அச்சம் ஏற்படுத்தியுள்ள ம.ந.கூட்டணி விரிவு
பிற கட்சிகளுக்கு அச்சம் ஏற்படுத்தியுள்ள ம.ந.கூட்டணி விரிவு விசயகாந்தைத் தங்கள் பக்கம் இழுக்க முயன்ற ஒவ்வொரு கட்சியும் அவர் மக்கள் நலக்கூட்டணியுடன் இணைந்ததும் அவரையும் வைகோவையும் தாழ்த்தியும் பேசியும் எழுதியும் வருகின்றனர். அப்படியானால் இவர்கள் ஏன், விசயகாந்தைத் தங்கள் பக்கம் இழுக்கப் பலவாறாக முயன்றனர். விசயகாந்துடன் இணைந்ததால் ம.ந.கூட்டணியைத் தாழ்வாகக் கூறுகின்றனரே, அப்படியானால், தங்களைவிட இக்கூட்டணி உயர்வானது, அத்தகைய உயர்வான கூட்டணி ஏன் விசயகாந்துடன் இணைந்தது என்கின்றனரா? தேர்தலில் கூட்டணி என்பது வெற்றிக்கான தொகுதி உடன்பாடேயன்றிக் கொள்கைக் கூட்டணியன்று. எனவே, வேறுவகையில்…
திராவிடக்கட்சிகள் எனப் பொதுவாகக் குறை கூற வேண்டா! – இலக்குவனார் திருவள்ளுவன்
திராவிடக்கட்சிகள் எனப் பொதுவாகக் குறை கூற வேண்டா! தேர்தல் அரசியலுக்காகப் பெரும்பான்மைக் கட்சிகள் திராவிடக் கட்சிகளை ஒழிப்போம் என்றெல்லாம் பேசி வருகிறார்கள். இப்போக்கு வரலாற்றை மறைப்பதாகும். குணம் நாடிக் குற்றமும் நாடி அவற்றுள் மிகைநாடி மிக்க கொளல் (திருக்குறள் 504) எனத் தெய்வப்புவலர் திருவள்ளுவர் நமக்கு வழிகாட்டியுள்ளார். எதிர்க்கும் கட்சிகளின் நிறைகளைக் கூறுவதற்கு மனம் வராதுதான். அதற்காக ஆற்றிய யாவும் தீமை என்பதுபோல் பேசக்கூடாதல்லவா? குறைந்தது குறைகளைப் பட்டியலிட்டு இத்தகைய குறைகளுக்காக இவற்றை ஆட்சிக்கு மீண்டும் வரச்செய்யக்கூடாது என்று சொல்லாம் அல்லவா? …
அதிமுகவினர் இடையூறு செய்தால் புகார் அளிக்கலாம் – அஇஅதிமுக
மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்குத் துயரீட்டுப் பொருட்களை வழங்கி வரும் தன்னார்வலர்களுக்கு அதிமுகவைச் சேர்ந்தவர் யாரேனும் இடையூறு செய்தால் உடனடியாகக்கட்சி மேலிடத்துக்குப் புகார் அளிக்கலாம் என அக்கட்சி தெரிவித்துள்ளது. இது தொடர்பாகத் தமிழ் இந்து நாளிதழுக்கு அதிமுக நிருவாகி ஒருவர் அளித்த பேட்டியில், “மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்குத் துயரீட்டுப் பொருட்களை வழங்கி வரும் தன்னார்வலர்களுக்கு அதிமுகவைச் சேர்ந்தவர் யாரேனும் இடையூறு செய்தால் உடனடியாகக் கட்சி மேலிடத்துக்குப் புகார் அளிக்கலாம். 044-28130787, 044-28132266, 044-28133510 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு புகார்…
பாதிக்கப்பட்டவர்களுக்கு உண்மையாக உதவுக: விசயகாந்து வேண்டுகோள்!
அரசியல் ஆதாயம் தேடாமல் பாதிக்கப்பட்டவர்களுக்கு உண்மையாக உதவுக: அரசுக்கு விசயகாந்து வேண்டுகோள்! அதிமுகவினர் துயர்துடைப்புப்பணி செய்வதுபோன்று படம்காட்டுவதை நிறுத்திவிட்டு, அரசியல் ஆதாயம் தேடாமல், மனிதாபிமானத்தோடு, பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ வேண்டும் என்று தேமுதிக தலைவர் விசயகாந்து கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், ”சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் பெய்த கனமழையின் கோரதாண்டவத்தால், சென்னை, புறநகர்ப் பகுதிகள் கடும் பாதிப்பிற்குள்ளாகி வெள்ளக்காடாக மிதக்கின்ற நிலையில், தற்போதைய முதன்மைத் தேவை மழைநீரை வடியச் செய்வதும், செய்வதறியாது திகைத்து நிற்கின்ற பொதுமக்களுக்குக்…
மத்திய அரசு + தமிழக அரசு : பாசக + அஇஅதிமுக
சூன் 3 ஆம் நாள் இந்தியத் தலைமையாளரைத் தமிழக முதல்வர் சந்திக்க இருப்பதாகச் செய்தி உலா வருகின்றது. அன்றோ வேறு என்றோ இருவர் சந்திப்பும் நிகழத்தான் போகிறது. ஆனால், இந்தச் சந்திப்பு, தமிழ்நாட்டிற்குப் பயன் தரும் வகையில் அமைய வேண்டும். மக்களவையில் தனிப் பெரும்பான்மை பெற்றுவிட்ட பாசகவிற்கு மாநிலங்களவையில் பெரும்பான்மை இல்லை. எனவே, அஇஅதிமுக ஆதரவு அதற்குத் தேவை. இந்தச் சூழலைப் பயன்படுத்தி இரு கட்சிகளும் நெருங்கி வரலாம். இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி மத்திய அரசில் அஇஅதிமுக பங்கேற்கும் வாய்ப்பும்…
தேர்தல் – நினைத்தனவும் நிகழ்ந்தனவும் – இலக்குவனார் திருவள்ளுவன்
அகரமுதல இதழின் சித்திரை 7, 2045 / ஏப்பிரல் 20, 2014 நாளிட்ட இதழுரையில் ‘வாக்கு யாருக்கு?’ என்னும் தலைப்பில் தமிழ் நேயர்களின் எண்ணங்களை எதிரொலித்திருந்தோம். தேர்தல் முடிவு வந்துவிட்டது. 16ஆவது நாடாளுமன்றத்திற்கான உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு விட்டனர். நம் எண்ணங்களின் சுருக்கத்தையும் அவை நிறைவேறியுள்ளனவா என்பதையும் பார்ப்போம். 1.) காங்கிரசுக் கட்சி இந்தியா, முழுவதும் விரட்டி யடிக்கப்பட வேண்டும். .. காங்கிரசு அடியோடு தோற்கடிக்கப்படுவது பிறருக்கும் பாடமாக அமையும். இந்தியா முழுமையும் காங். பரவலாக மண்ணைக் கவ்வி 44 இடங்களில் மட்டுமே வெற்றி…