தமிழக நலனைக் கருத்தில் கொண்டு அதிமுகவுக்கு வாக்களியுங்கள்: செயலலிதா வேண்டுகோள்

  திருநெல்வேலி தொகுதி அதிமுக வேட்பாளரான கே.ஆர்.பி பிரபாகரனை ஆதரித்து முதலமைச்சர் செயலலிதா பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-  அமைதி, வளம், வளர்ச்சி ஆகியவைற்றை முன்வைத்து, தேர்தலைச் சந்திக்கும் அதிமுகவுக்கு மக்களாகிய நீங்கள் வாக்களிப்பீர்கள் என்று நம்புகிறேன். தமிழக நலனை கருத்தில் கொண்டு நன்றாகச் சிந்தித்து அதிமுகவுக்கு வாக்களியுங்கள். தன் நலமாகச் செயல்படும் திமுக,  2-த(2ஜி)ஊழலில் தமிழகத்தைத் தலைகுனியச் செய்துவிட்டது. அக்கட்சிக்கு வருகின்ற தேர்தலில் தக்க பாடம் புகட்ட வேண்டும். 2006 இல் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறும் வரை மின்மிகை மாநிலமாக இருந்த தமிழகம்,…

வாக்கு யாருக்கு?

  யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்பதை விட யாருக்கு வாக்களிக்கக்கூடாது என்பதன் அடிப்படையில்தான் தேர்தல் வெற்றிகள் அமைகின்றன. மக்கள் மனம் கொள்ளும் வகையில் எக்கட்சியின் பணியும் அமையாததால், விருப்பமின்றி, எதிர்நிலை அணுகுமுறையில் மக்கள் வாக்களிக்கின்றனர். சிலக் கட்சிகள் மீது நாட்டம் இருப்பினும் வாக்கு சிதறக்கூடாது என்று எண்ணியும் வெற்றிபெறும் என எதிர்நோக்கும் கட்சியில் வாக்களிக்க விரும்பியும், மக்கள் அளிக்கும் வாக்குகளே ஆட்சியை முடிவு செய்கின்றன.   இப்பொழுது நடைபெற்று வரும் பொதுத்தேர்தலில் – தமிழ்நாட்டில்  வரும் ஏப்பிரல் 24,2014 அன்று வாக்குப்பதிவு நடைபெற உள்ள…

மத்திய அரசுக்குக் கண்டனம்: அதிமுக பொதுக்குழுவில் தீர்மானம்

தமிழகத்திற்குப் போதிய நிதி அளிக்காமல், தமிழகத்தின்  முறையீடுகளைத் தொடர்ந்து மறுக்கும் மத்திய அரசுக்குக் கண்டனம் தெரிவித்து அதிமுக பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.   அதிமுக பொதுக்குழு, செயற்குழுக் கூட்டம், சென்னையை அடுத்த வானகரத்தில், அ.இ.அ.தி.மு.க. அவைத் தலைவர் இ.மதுசூதனன் தலைமையில்,  கட்சியின் பொதுச் செயலாளர்  செயலலிதா முன்னிலையில் (திசம்பர் 19, 2013 அன்று) நடைபெற்றது. செங்கோட்டையே இலக்கு! பொதுக்குழுவில் பேசிய பொதுச் செயலாளர்  செயலலிதா, “மத்தியில் சரியாக வழி நடத்த ஆளில்லாமல் இந்தியா தடுமாறுகிறது. 40 தொகுதிகளிலும் அதிமுக தனித்து நின்று போட்டியிட்டு வெற்றி…