என் தமிழ்ப்பணி, புலவர் கா. கோவிந்தனார், 20. நொச்சியும் உழிஞையும்
(என் தமிழ்ப்பணி, புலவர் கா. கோவிந்தனார், 19, சொல்லின் எவனோ? – தொடர்ச்சி) என் தமிழ்ப்பணி 17. நொச்சியும் உழிஞையும் மண்ணாசை கொண்டு, அண்டை நாட்டு அரசனோடு போரிடப் போன ஓர் அரசன், போரை விரும்பி மேற்கொண்டவனாதலின், அப்போரை மேற்கொள்வதன் முன்னர், தன்வலி, மாற்றான் வலி, தனக்கு ஆகும் காலம், மாற்றானுக்கு ஆகும் காலம், தனக்கு வாய்ப்புடைய இடம் மாற்றானுக்கு வாய்ப்புடைய இடம், ஆகியவற்றைப் பலமுறை ஆராய்ந்து, ஆராய்ந்து, தன் வலிமிக்க நிலையில், தனக்கு ஏற்புடைய காலத்தில், வாய்ப்புடைய இடமாக நோக்கிப் போர்…
என் தமிழ்ப்பணி, புலவர் கா. கோவிந்தனார், 12. அனைய கொல்!
(என் தமிழ்ப்பணி, புலவர் கா. கோவிந்தனார், 11. திருமுருகாற்றுப்படை- தொடர்ச்சி) என் தமிழ்ப்பணி அத்தியாயம் 9. அனைய கொல்! அறம் பொருள் இன்பம் என்ற மூன்றன் இயைபினை உள்ளவாறு உணர்ந்து அவற்றிற்குரிய மதிப்பளிக்கும் உள்ளம் உடைய ஓர் உயர்குலப் பெண், கார் காலத்து மாலைப் பொழுதில் தலைவாயிற்கண் யாருடைய வருகையையோ ஆவலோடு எதிர் நோக்கிக் கால் கடுக்க நின்று கொண்டிருந்தாள். அவள் கணவன் பெருவணிகர் குடியில் வந்தவன்; அதனால் விழுநிதி ஈட்டும் விருப்பம், அவன் உள்ளத்தில் இயல்பாக ஊறிக் கிடந்தது என்றாலும், அவன், அப்பொருளொன்றே…
என் தமிழ்ப்பணி, புலவர் கா. கோவிந்தனார், 06. நெஞ்சே தொடர்ந்து வருக!
(என் தமிழ்ப்பணி, புலவர் கா. கோவிந்தனார், 05. நெஞ்சே எழு! – தொடர்ச்சி) என் தமிழ்ப்பணி நெஞ்சே தொடர்ந்து வருக! ஆங்கு வீசும் தென்றற்காற்று மலர் பறிக்க வல்லானொருவன், மலரைப் பறிக்கத் தன் கைக் கோலால் கிளைகளை அலைக்கழித்தல்போல், மராமரத்துக் கிளைகளை, அலைக்கழித்து, அம்மலர்களை வழிச் செல்லும் மக்களின் தலை முடியில் சென்று உதிருமாறு செய்யும். நெஞ்சே! காற்றின் செயல் கொடுமை வாய்ந்ததாகத் தோன்றினும் அக்காற்று இல்லையேல் அம்மலர்கள் மலர்ந்தும் பயனிழந்து போயிருக்கும். அக்காற்று வீசியதால் அதன் மணம் காற்றில் பரவிப் பயன் பெற்றது….
தோழர் தியாகு எழுதுகிறார் 157 : திராவிடம் – வி.இ. குகநாதன் கட்டுரை
(தோழர் தியாகு எழுதுகிறார் 156 : “மக்கார்த்தியம்” தொடர்ச்சி) திராவிடம் – வி.இ. குகநாதன் கட்டுரை அன்பர் சிபி கேட்கிறார்… திராவிடம் என்பற்கு முதல் அல்லது அடிப்படை என்ன? அச்சொல் எங்கிருந்து வந்தது அல்லது எடுத்தாளப்பட்டது? அதற்கும் தமிழுக்கும் என்ன தொடர்பு? தாழி விடை: “திராவிடம் என்றால் என்ன?” என்பதனை விளக்கித் திரு வி.இ. குகநாதன் எழுதிய ஒரு கட்டுரையினைத் தருகின்றேன். ’திராவிடம்` என்ற சொல் குறிப்பது என்ன? இது பற்றிய பல்வேறு தவறான விளக்கங்கள் மக்களிடையே பரவிக் கொண்டிருக்கும் காலமிது. `திராவிடம்` என்பது ஒரு சமற்கிரதச் சொல், `திராவிடம்` என்பது தெலுங்கர்களைக் குறிப்பது,…
புலவர்கள் 3. – சி.இலக்குவனார்
(இலக்கியம் கூறும் தமிழர் வாழ்வியல் (சங்கக் காலம்) 31 – தொடர்ச்சி) இலக்கியம் கூறும் தமிழர் வாழ்வியல் (சங்கக் காலம்) 32 16. புலவர்கள் (தொடர்ச்சி) அக்காலத் தமிழ்மக்கள் இயலிசை நாடகங்களிலும், நடனங்களிலும் இன்பங் கண்டனர். அக்கால நடனம் எவ்வாறு நடந்தது என்பதை இயற்கைக் காட்சியில் இன்புறக் காட்டுகின்றார். இங்கு நடனப் பெண்ணாக மயில் தோன்றுகிறது. பார்த்து மகிழும் அவையினராக மந்திகள் அமருகின்றன. குழலிசையை இயற்கையில் துளைபட்ட மூங்கிலில் கோடைக்காற்று சென்று எழுப்புகின்றது. முழவாக அயலில் ஓடும் அருவியின் இன்னிசை இயம்புகின்றது. தூம்பு…
குன்றியாளும் பிறரும் – இரா.இராகவையங்கார்
நல்லிசைப் புலமை மெல்லியலார்கள் – இரா.இராகவையங்கார். : 22 (நல்லிசைப் புலமை மெல்லியலார்கள்- இரா.இராகவையங்கார். 21. தொடர்ச்சி) 12.குன்றியாள் குன்றியனார், குன்றியன் (குறுந்தொகை 51) என ஆண்பாற்கண் வருதல்போலக் குன்றியாள் எனப் பெண்பாற்கண் வந்தது. இவர் பாடியது குறுந்தொகையில் 50-ஆம் பாட்டாகும். இவர் குன்றியனார் உடன்பிறந்தவரோ என ஊகிக்கப்படுகின்றார். — 13. வருமுலையாரித்தி இவர், பெயர்க்கண் உள்ள வருமுலை யென்னும் அடையாற் பெண்பாலராகக் கருதப்படுகின்றார். இவர்பாடியது குறுந்தொகையில் 176-ஆம் பாட்டாகும். அஃதாவது, ‘ஒருநாள் வாரல னிருநாள் வாரலன்பன்னாள் வந்து பணிமொழி பயிற்றியென்னன்னர் நெஞ்ச நெகிழ்ந்த…
நச்செள்ளையாரும் பிறரும் – இரா.இராகவையங்கார்
நல்லிசைப் புலமை மெல்லியலார்கள் – இரா.இராகவையங்கார். : 21 (நல்லிசைப் புலமை மெல்லியலார்கள்- இரா.இராகவையங்கார். 20. தொடர்ச்சி) 6. காக்கைபாடினியார் நச்செள்ளையார் [ மகாமகோபாத்தியாயர் பிரும்ம சிரீ முனைவர் உ.வே. சாமிநாதையரவர்கள் செவ்வனம் ஆராய்ந்து வெளியிட்ட பதிற்றுப்பத்துள் ‘நூலாசிரியர்கள் வரலாறு’ பார்க்க. ] இவர் பதிற்றுப்பத்தின்கணுள்ள ஆறாம்பத்தால் ஆடுகோட்பாட்டுச் சேரலாதன் என்னுஞ் சேரனைப் புகழ்ந்து பாடி, அவனாற் கலனணிக என்று ஒன்பது துலாம் பொன்னும் நூறாயிரங்காணமும் அளிக்கப் பெற்று, அவன் பக்கத்து வீற்றிருத்தற் சிறப்பும் எய்தியவர். பாடினி, செள்ளை என்னும் பெண்பாற்பெயர்களானும் கலனணிதற்குப்…
தமிழர் மெய்யுணர்வுக்கொள்கை (தொடர்ச்சி)-சி.இலக்குவனார்
(இலக்கியம் கூறும் தமிழர் வாழ்வியல் (சங்கக் காலம்) 18 – தொடர்ச்சி) இலக்கியம் கூறும் தமிழர் வாழ்வியல் (சங்கக் காலம்) 19 9. மெய்யுணர்வுக் கொள்கை (தொடர்ச்சி) “பொருள்நிலை சீருறின் உலகப் பொல்லாங்கு எல்லாம் ஒழியும்” எனும் பொருளுரையைப் போற்றாதார் தம்மைப் போற்றாதாரே. எனவே, இதனை நன்கு வற்புறுத்தினர் சங்க காலப் பெரியோர்கள். “ஈதலும் துய்த்தலும் இல்லோர்க்கு இல்லெனச் செய்வினைக் கைம்மிக எண்ணுதி” (குறுந்தொகை-63) “இசையும் இன்பமும் ஈதலும் மூன்றும் அசையுநர் இருந்தோர்க்கு அரும்புணர்வு இல்” (நற்றிணை-214) என உழைத்துப் பொருளீட்டாதார்க்கு…
ஒளவையார்:6 : ந. சஞ்சீவி
(ஒளவையார்: 5 : ந. சஞ்சீவி தொடர்ச்சி) சங்கக்காலச் சான்றோர்கள் – 15 2. ஒளவையார் (தொடர்ச்சி) இத்தகைய தலை சிறந்த வள்ளியோன் வீரத்தின் பெருமையையும் நாம் நன்கு அறிவோமல்லமோ? எழுவரொடு முரணி அவன் போர் புரிந்து கண்ட வெற்றியும் கோவலூரை நூறி அவன் கொண்ட கொற்றமும் என்றென்றும் அவன் புகழ் பேசுவன அல்லவோ? அத்த கைய போர் அடு திருவினாகிய பொலந்தார் அஞ்சியின் இணையற்ற வீரத்தை எத்தனையோ அருந்தமிழ்க் கவிதையால் பெருமிதம் தோன்றப் புகழ்ந்துள்ளார் ஒளவையார். அவற்றுள் எல்லாம் தலை சிறந்தது ஒன்று….
ஆதிமந்திபோல் உழன்ற வெள்ளிவீதியார் – இரா.இராகவையங்கார்
நல்லிசைப் புலமையிற் சிறந்த வெள்ளிவீதியார் – இரா.இராகவையங்கார்
அகநானூற்றில் ஊர்கள் :7/7 – தி. இராதா
(அகநானூற்றில் ஊர்கள் 6/7 இன் தொடர்ச்சி அகநானூற்றில் ஊர்கள் -7/7 வல்லம் மழைபோல் செரியும் அம்பனையும், மேகம் போன்ற தோற்கிடுகினையும் உடைய சோழரது அரண் கொண்டது வல்லம் எனும் ஊராகும். “……………..சோழர் வில்ஈண்டு குறும்பின் வல்லத்துப் புரமிளை” (அகநானூறு 336) “நெடுங்கதி நெல்லின் வல்லம்” (அகநானூறு 356) நெல்வளம் மிக்க ஊர் வல்லம் என்பதை மேற்கண்ட அடிகள் விளக்குகின்றன. வாகை வாகை மரம் நிற்றலால் வாகைப் பெருந்துறை எனப்பட்டது. வாகைப்போர்…