பிரதிலிபி – அகம் : கருத்தரங்கு – பரிசளிப்பு
பிரதிலிபி – அகம் இணைந்து நடத்தும் “தமிழ் மொழியில் தொழில்நுட்பம்” குறித்தான கருத்தரங்கு ‘ஞயம்பட வரை’ போட்டியின் பரிசளிப்பு விழா பங்குனி 27, 2047 / ஏப்பிரல் 9, 2016, மாலை 5.30 முதல் 8 மணி வரை புத்தகம் கண்டுபிடிப்பு அரண்மனை (டிசுகவரி புக் பேலசு) , சென்னை
‘அகம்’ என்றால் என்ன? – சி.இலக்குவனார்
‘அகம்’ என்றால் என்ன? ‘அகம்’ என்றால் என்ன? ஒத்த அன்பினையுடைய தலைவனும் தலைவியும் தனித்துக் கூடுகின்ற காலத்துத் தோன்றி, மன உணர்ச்சியால் நுகரப்படும் (அநுபவிக்கப்படும்) இன்பம், அக் கூட்டத்தின் பின்னர், அவ்வின்பம் இவ்வாறு இருந்தது எனச் சொல்லால் விளக்கிக் கூற முடியாமல் எப்பொழுதும் உள்ளத்தே நிகழும் உணர்ச்சியால் நுகரப்படுவதால் ‘அகம்’ எனப்பட்டது. அகம் உள், உள்ளம்: அதுபற்றி எழும் ஒழுக்கத்தை ‘அகம்’ என்று கூறினர். எளிமையாகக் கூறினால் காதல் இன்பம் என்பதாகும். காதலின்பம் உணர்ச்சி வயத்தது; உணர்ச்சி உள்ளத்தைப் பற்றியது. பண்டைத் தமிழ்ப்…