பதவி நலன்களுக்காக அடிமையாகிக் கட்சியைச் சிதைக்காதீர்! – இலக்குவனார் திருவள்ளுவன்
பதவி நலன்களுக்காக அடிமையாகிக் கட்சியைச் சிதைக்காதீர்! “அற்ற குளத்தின் அறுநீர்ப் பறவைபோல்” (ஔவையார், மூதுரை 17) இருப்பவர்களே, அரசியல்வாதிகள் என்பது இன்றைய இலக்கணமாகி விட்டது. எனவே, “ஒருவீர் தோற்பினும் தோற்பதுநும் குடியே”(கோவூர்கிழார், புறநானூறு 45) எனப் பிறர் அறிவுறுத்த வேண்டிய நிலையில் அதிமுக தலைவர்கள் உள்ளனர். இயல்பான போக்கில் அதிமுக வளர்ந்தாலும் தளர்ந்தாலும் ஒன்றுமில்லை. ஆனால், அதிகாரச் சுவையைப் பறிப்பதாகவும் தருவதாகவும் அச்சுறுத்தியும் ஆசைகாட்டியும் தமிழர் நலனுக்கு எதிரான ஒரு கட்சி அதனைச் சிதைத்துக் கொண்டுள்ளது. இதனால், அடிமைத்தனத்தின் உச்சக் கட்டத்தில் அதன்…
தமிழகம் அடிமைப் பட்டு மதிமயங்கி நிற்பதேன்? – நாமக்கல் கவிஞர்
1,2/6 இளந்தமிழனுக்கு இளந்த மிழா! உன்னைக் காண இன்ப மிகவும் பெருகுது! இதுவ ரைக்கும் எனக்கிருந்த துன்பம் சற்றுக் குறையுது! வளந்தி கழ்ந்த வடிவி னோடும் வலிமை பேசி வந்தனை. வறுமை மிக்க அடிமை நிற்கு வந்த ஊக்கம் கண்டுநான் தளர்ந்தி ருந்த சோகம் விட்டுத் தைரி யங்கொண் டேனடா! தமிழர் நாட்டின் மேன்மை மீளத் தக்க காலம் வந்ததோ! குளிர்ந்த என்றன் உள்ளம் போலக் குறைவி லாது நின்றுநீ குற்ற மற்ற சேவை செய்து கொற்ற மோங்கி வாழ்குவாய்! 1 பண்டி ருந்தார் சேர…