எட்டாம் ஆண்டில் வல்லமை மின்னிதழ்

  வல்லமை மின்னிதழ், 7 ஆண்டுகளை நிறைவு செய்து, எட்டாம் ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது. இந்தப் பயணத்தில் உடன் நிற்கும் ஆசிரியர் பவளசங்கரி, மேகலா இராமமூர்த்தி, சாந்தி மாரியப்பன், முனைவர் காயத்திரி பூபதி, முனைவர் செல்வன்  முதலான ஆசிரியர் குழுவினர், வழங்கிச் செயற்பாட்டாளர் ஆமாச்சு, தளச் செயற்பாட்டாளர் சீனிவாசன்,  அறிவுரைஞர்கள்,  எழுத்தாளர்கள், கவிஞர்கள், ஆய்வறிஞர்கள், வாசகர்கள்  முதலான அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றிகளை உரித்தாக்கி மகிழ்கிறேன்   8ஆம் ஆண்டில் நுழைந்துள்ளதை முன்னிட்டு, வாசகர்களுக்கு ஓர் இனிய பரிசாக, வல்லமையின் ஆண்டிராய்டு செயலியை வெளியிட்டுள்ளோம். கூகுள்காணாட்டப்…

சிறகினில் திசைகளையள!- முனைவர் அண்ணாகண்ணன்

முடிமுடிமுடி செயலே! இனிதினிதினிதினிதினிதினிதினிது எமதெமதெமதெமதெமதெமதெமது அமுதமுதமுதமுதமுதமுதமுது எமதெமதெமதெமதெமதெமதெமது சரிசரிசரியென,சரிவரும்உலகு சிரிசிரிசிரியென,சிரிநலம்பழகு வரிகளுக்கிடையினில்படிப்பதும்அரிது அரிதரிதரிதரிதரிதரிதரிது சிறுதிரிவிரியொளிசெறிசுடரழகு சிறுதுளிவிரிகடல்புரிதொழிலழகு சிறகினில்திசைகளையளப்பதுமழகு சிறகெனத்திசைகளைவிரிப்பதுமழகு கருவுறுதிருதருவரகவிமதுரம் துருதுருசுறுசுறுவிழிநடம்மதுரம் பெருகிடும்வியர்வையில்பெருமிதம்மதுரம் மெருகிடும்உருகிடும்அருளதிமதுரம் கடகடபடபடமடமடவெனவே சடசடதடதடகிடுகிடுவெனவே உடனுடனுடனுடனுடனுடனுடனே முடிமுடிமுடிமுடிமுடிமுடிசெயலே!   நன்றி – வல்லமை (http://www.vallamai.com/?p=55610)