அதிகார வெறி இருப்பின், பாசக ஆளும் மாநில முதல்வராகலாமே! – இலக்குவனார் திருவள்ளுவன்
அதிகார வெறி இருப்பின், பாசக ஆளும் மாநில முதல்வராகலாமே! பாசக ஆளாத மாநிலங்களில் ஆளுநர்களின் ஆட்டம் அனைவரும் அறிந்ததே! அவர்களை ஆட்டுவிப்பவர்கள் ஒன்றிய அரசின் முதன்மைப் பொறுப்புகளில் இருப்பதை நாமறிவோம். எனவே, தமிழக ஆளுநர் தனியரசு நடத்துவதற்கு அவர்களை மட்டும் குறை கூறிப் பயனிலை. எனினும் பின்னணியில் இருப்பவர்கள் மறைமுகமாகச் செயற்படுவதால் ஆளுநரின் குறைகளைச் சுட்டிக்காட்டினாலே அது பின்னணியினரையும் குறிக்கும். எனவே, தமிழ்நாட்டு ஆளுநரை மையப்படுத்தியே இக்கட்டுரை அமைகிறது. நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய தென் மாவட்டங்கள் பெருமழையால், ஊர்களை மூழ்கடிக்கும் வெள்ளப்பெருக்கால்…