தொல்காப்பியர் காலத்தில், ‘சாதி’ என்னும் சொல், விலங்கின் சாதி, பறவைச் சாதி, நீர்வாழ் சாதி, முதலைச் சாதி என்பனவற்றையே குறித்தது; மனிதரைப் பிரிப்பதாய் இல்லை. திருவள்ளுவர் குடி, குடிமை என்பனவற்றைக் குறித்தார். பிறப்பினைப் “பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்” எனப் பெருநெறி காட்டினார். அரசர் ஒரு சாதி அன்று; வணிகர் ஒரு சாதி அன்று; வேளாளர் ஒரு சாதி அன்று; எவரும் அரசராகவோ, வணிகராகவோ வேளாளராகவோ ஆகலாம். அவ்வாறே, எவரும் அந்தணர் ஆகலாம். அது சாதிப் பெயர் அன்று என்பதன் சான்று இது. அந்தணர்…