மாமூலனார் பாடல்கள் 27: சி.இலக்குவனார்
(ஆனி 29, 2045 / சூலை 13, 2014 இதழின் தொடர்ச்சி) உஎ. “ஆண்டு அவர் நீடலர்” – தோழி சங்க இலக்கியச் செம்மல் பேராசிரியர் முனைவர் சி.இலக்குவனார் “சென்றவர் என்று வருவரோ” என்ற சிந்தனையில் ஆழ்ந்திருக்கின்றாள் தலைவி, உயிர் அனையதோழி வாளாய் இருப்பாளா? ஆறுதல் கூறுகின்றாள். “தோழி! வருந்தேல், ஏதேனும் தொழில் செய்தல் வேண்டும். சோம்பி இருத்தல் ஆகாது.’ என்ற நினைப்பு அவரை வேற்று நாட்டுக்குச் செல்லவிடுத்தது. அவர் சென்ற இடத்தின் தன்மையைக் கேள். மலைமேடுகளில் காடுகளைத் திருத்தி விதைத்து…