நீயே என்  தாயே..!! ஈரைந்து திங்களே.. தாயெம்மைச் சுமந்தாள்… மூவைந்து ஆண்டுகள் என்னைச் சுமந்த அன்னை மண்ணே.. என்னைத் தொலைத்தாயோடி? வெயிலோடும் வரப்போடும் விளையாட மடி தந்த அழகிய தாயவளை நெக்குருகும் நினைவுகளில் நானின்று சுமக்கின்றேன்.. நானென்ன உன் தாயா? பொழுதெல்லாம் பொங்கும் உணர்வு ஊற்றுகளில் உருக்குலைந்து போகாமல்.. போற்றியிங்கு பாடுகின்றேன்.. சுழன்று வீசிய காலச் சுழலில் அகதியென உலக மூலைகளில் திக்கொன்றாய்.. தூக்கி வீசப்பட்ட தூசுகளாக நாம்… காலச் சதியில் சிதறிய முத்துகளாய்.. உறவுகள் நாம் பிரிந்தோம்.. எங்கெங்கோ தொலைந்தோம்.. முகமிழந்து போன…