உயிர் பறிக்கப்பட்ட பொன்முருகன் குடும்பத்தார்க்கு உரூ 5 கோடி இழப்பீடு வழங்குக!
பொன்முருகன் செய்தியாளர்களிடம் செல்வாக்குள்ள வளர்ந்து வரும் இதழாளர் ஆவார். ‘இன்றைய வணிகம்’ நாளிதழ் ஆசிரியர், ‘அரசியல் சதுரங்கம்’ மாத இதழ் ஆசிரியர் என இதழாசிரியப் பணியாற்றி வந்தவர். இந்தியன் பத்திரிகையாளர் சங்கத் தலைவர் ஆகத் தொண்டாற்றி யவர். 30.4.2014 அன்று இரா. பொன்முருகன் சென்னை சோழவரம் நெடுஞ்சாலையில் துள்ளுந்து (மோட்டார் சைகிள்)வண்டியில் சென்றபோது மாலை 6.30 மணியளவில் பாலத்தில் வண்டி மோதி மிகவும் வலுத்த அடி ஏற்பட்டுவிட்டது. அவசரப்பண்டுவத்திற்காக, அம்பத்தூர் நிலா மருத்துவமனையில் சேர்த்து மருத்துவம் பார்க்கப்பட்டது. பின்னர் 2.05.2014…
இதழாளர் பொன் முருகன் நினைவேந்தல் – படத்திறப்பு
19.05.2014 அன்று பொன்.முருகனின் நினைவேந்தல் நிகழ்வு பெரும்புலவர் கி.த.பச்சையப்பனார் தலைமையில் சென்னை திருவல்லிக்கேணி சிவ இளங்கோ இல்லத்தில் நடைபெற்றது. அவ்வமயம், கவிஞானி அ. மறைமலையான் அவர்கள் முன்னிலையில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் தலைவர் திரு. ஏ.எம். விக்கிரமராசா அவர்கள் பொன்முருகனின் திருவுருவப் படத்தைத் திறந்து வைத்துச் சிறப்புரையாற்றினார். பேராசிரியர் மறைமலை இலக்குவனார், தமிழ்த்தேசப் பொதுவுடைமைக்கட்சித் தலைவர் திரு. பெ. மணியரசன், பாவலர் தமிழேந்தி(மா.பெ.பொ.கட்சி), சங்கப்பலகைத் தலைவர் தஞ்சைத் தமிழ்ப்பித்தன் மூத்த இதழாளர் டி.எசு.எசு.மணி, பொன் முருகனின் தந்தை அன்றில் இறைஎழிலன் ஆகியோர்…