தோழர் தியாகு எழுதுகிறார் : அமித்துசா வாயால் இனவழிப்பு பேசப்பட்டதா?
(தோழர் தியாகு எழுதுகிறார் : “பொதுக் குடியியல் சட்டம்” – புரட்டும் புரளியும் (2) – தொடர்ச்சி) இனிய அன்பர்களே! அமித்துசா வாயால் இனவழிப்பு பேசப்பட்டதா? வெள்ளத்தில் மூழ்கிக் கொண்டிருப்பவனுக்கு ஒரு துரும்பு கிடைத்தால் கூட தெப்பமாகத் தெரியும். அந்தத் துரும்பைப் பிடித்துக் கொண்டு கரையேறி விட முடியாதா என்றுதான் நினைப்பான். இனவழிப்பு முள்ளிவாய்க்காலில் உச்சம் கண்டு ஆண்டுகள் பதினான்கு ஆன பிறகும் நீதியின் ஒளிக்கதிர் கண்ணுக்கு எட்டாத அவலநிலையில் இருக்கும் தமிழீழ மக்களுக்கு யாராவது தமிழினவழிப்பு என்று பேசி விட்டாலே மனம் நிறைந்து…