திலீபன் மண்ணுக்காக இறந்தான் – மேதகு பிரபாகரன்
திலீபன் மண்ணுக்காக இறந்தான் – உயிர்க்கொடையின்பொழுது மேதகு பிரபாகரன் விடுத்த செய்தி “எமது விடுதலை இயக்கம் எத்தனையோ அற்புதமான ஈகங்களைச் செய்திருக்கிறது. வீரகாவியங்களைப் படைத்திருக்கிறது. இவையெல்லாம் எமது ஆயுதப் போராட்ட வரலாற்றில் நாம் ஈட்டிய வீர சாதனைகள். ஆனால், எனது அன்பான தோழன் திலீபனின் ஈகமோ-தியாகமோ வித்தியாசமானது, வியக்கத்தக்கது. எமது போராட்ட வரலாற்றில் புதுமையானது. அமைதிப் போராட்டக் களத்தில் தன்னைப் பலிகொடுத்து ஈடு இணையற்ற ஈகத்தைத் திலீபன் புரிந்தான். அவனது மரணம் ஒரு வரலாற்று நிகழ்ச்சி. தமிழீழத் தேசிய ஆன்மாவைத் தட்டியெழுப்பிய நிகழ்ச்சி….