தோழர் தியாகு எழுதுகிறார் 75: அம்பேத்துகர் – பெரியார் – வெண்மணி நினைவாக
(தோழர் தியாகு எழுதுகிறார் 74 தொடர்ச்சி) அம்பேத்துகர் – பெரியார் – வெண்மணி நினைவாக அண்ணல் அம்பேத்துகர் இந்திய நாடாளுமன்றம் முதல் கடைக்கோடிக் குப்பம் வரை சிலைகளாக நிற்கிறார். அவருடைய பிறந்த நாளும் நினைவு நாளும் நாடெங்கும் பெருவிழாக்களாகக் கொண்டாடப்படுகின்றன. ஒடுக்குண்ட மக்கள், உழைக்கும் மக்கள் அவரைத் தங்கள் காவல்தெய்வமாகப் போற்றுகின்றார்கள். ஆளும்வகுப்புக் கட்சிகள் அவரை அரசமைப்புச் சட்டச் சிற்பியாகப் புகழ்கின்றன. அவரது படத்தைக் காட்டித் தேர்தலில் வாக்கு வேட்டையாடும் கட்சிகளும் உண்டு. நாட்டையாளும் இந்துத்துவக் கும்பல் அம்பேத்துகரைக் களவாடப் புதுப்புது மோடி வித்தைகள் காட்டி வருகிறது. இந்தக் களவாடலின்…