தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் : [ஙீ] 2. போர்முகம் நோக்கிய இளமைப்பாதை – தொடர்ச்சி: இலக்குவனார் திருவள்ளுவன்
(தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் [ஙி] 2. போர்முகம் நோக்கிய இளமைப்பாதை-தொடர்ச்சி) தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் [ஙீ] 2. போர்முகம் நோக்கிய இளமைப்பாதை – தொடர்ச்சி தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள (இன்று ஒரத்தநாடு என்றும் சொல்லப்படுகின்ற) உரத்தநாட்டிலும் அரசர்மடம் (இராசாமடம்) என்னும் ஊரிலும் உண்டுறைப் பள்ளிகள் உள்ளன. அரசர் மடத்தில் பேராசிரியரின் மாமா வீரபத்திரர் அவர்களின் இரு மக்கள் பயின்று வந்தனர். அங்குச் சென்று கல்வி கற்கும் தணியா ஆர்வத்தில் பேராசிரியர் இருந்தார். பேராசிரியரின் தொடக்கப்பள்ளி ஆசிரியரான தமையன் முறையினரான சதாசிவம்(பிள்ளை) அவர்கள் விண்ணப்பம் அனுப்ப…