ஆற்றல் மிகுந்த அருங்கவிஞர் வா.மு.சேதுராமன் 36 – வல்லிக்கண்ணன்
(ஆற்றல் மிகுந்த அருங்கவிஞர் வா.மு.சேதுராமன் 35 தொடர்ச்சி) ஆற்றல் மிகுந்த அருங்கவிஞர் வா.மு.சேதுராமன் 36 படக்கலை இதர கலைகளை எல்லாம் பாழாக்கி வருவதைக் கண்டு கவிஞர் வேதனையோடும் உளக்கொதிப்போடும் பாடல்கள் பாடியிருக்கிறார். பிழைப்புக்காக அங்கு நல்லவர்களும் கெட்டுப் போவதை எண்ணி மனம் வருந்துகிறார். கலையை வளர்க்கிறோம் என்று சொல்லிக் கொண்டு எல்லோரும் வயிற்றைத்தான் வளர்க்கின்றார் என்பதைச் சுட்டுகிறார். தமிழரின் பெருமைகளை எண்ணி மகிழும் பெருங்கவிக்கோ இன்றையத் தமிழரின் இழிதன்மைகளை எடுத்துக்கூறப் பின் வாங்குவதில்லை. யார் என்று கேட்டு, இந்தத் தமிழன்தான், தமிழன்தான், தமிழன்தான்…
ஆற்றல் மிகுந்த அருங்கவிஞர் வா.மு.சேதுராமன் 35 – வல்லிக்கண்ணன்
(ஆற்றல் மிகுந்த அருங்கவிஞர் வா.மு.சேதுராமன் 34 தொடர்ச்சி) ஆற்றல் மிகுந்த அருங்கவிஞர் வா.மு.சேதுராமன் 35 கலைத்துறையில் காணப்படும் கீழ்நிலைகள் எண்ணிக் குமைகின்றார் பெருங்கவிக்கோ. அன்புத் தமிழர்கள் வளர்த்த அருங்கலையை இன்று “நாய் நரிகள் எல்லாம் புகுந்தே ஆடும் நாசத்தின் தலையுச்சி” ஆக்கி விட்ட அவலநிலையை நினைத்துக் கொதிக்கின்றார். படக்கலையில் காணப்படுகிற சிறுமைச் செயல்களை வருணித்து வருந்துகிறார். கலையின் பேரால் போடப்படுகிற கும்மாளங்கள், “நாடி நலக் கலை வளர்த்த தமிழர் நாடே! நாசமாய் நீ போவதும் உன் தலையெழுத்தா?” என்று வேதனைப்படுகிறார். நம் நாட்டு நாடகத்தை…
ஆற்றல் மிகுந்த அருங்கவிஞர் வா.மு.சேதுராமன் 34 – வல்லிக்கண்ணன்
(ஆற்றல் மிகுந்த அருங்கவிஞர் வா.மு.சேதுராமன் 33) ஆற்றல் மிகுந்த அருங்கவிஞர் வா.மு.சேதுராமன் 34 பாலல்ல வெளுத்த தெல்லாம்! உண்டுடுத்திப் பவனிவரு வோரெல்லாம் மனிதரல்ல ஆலல்ல மரங்களெல்லாம்! அதனைப்போல அருங்கல்வி கற்றபுகழ் மாந்த ரெல்லாம் சாலபெரும் நல்லோரும் அல்ல! பல்லோர் சரியான முழுமூடக் கயவராகி ஏலமிடு பொருள்போலே ஆனார் இன்று! என்னென்பேன்! இது பெரிய வெட்கக்கேடு! வானகமே மழை நீரைப் பருகிவிட்டு வையத்தை வெறுப்பதுபோல், அறம் செய்கின்ற தானத்தான் பொருளையெலாம் ஏப்பம்விட்டுத் தன்கையை விரிப்பது போல், நேர்மை நெஞ்ச மானத்தை மாவீரன் துறப்பதைப் போல்,…
ஆற்றல் மிகுந்த அருங்கவிஞர் வா.மு.சேதுராமன் 33 – வல்லிக்கண்ணன்
(ஆற்றல் மிகுந்த அருங்கவிஞர் வா.மு.சேதுராமன் 32 தொடர்ச்சி) ஆற்றல் மிகுந்த அருங்கவிஞர் வா.மு.சேதுராமன் 33 வள்ளுவர் வடித்த அமைச்சரின் வகை நெறி பற்றிப் பேச வந்த பெருங்கவிக்கோ இற்றைநாள் அமைச்சர்கள் குறித்துச் சிந்தனைப் பொறிகளைக் கவிதையில் சிதறியிருக்கிறார். இயல்பைக் காட்டும் படப்பிடிப்பு அவ்வரிகள். கவிஞர் பாடுகிறார், “அமைச்சர்தமை நினைத்தால் அடிவயிற்றில் போராட்டம் இமைப் பொழுதும் சோராது ஏற்ற பதவியினைக் காப்பாற்ற வேண்டுமெனும் கருத்தால் திறக்காத தாழ்ப்பாள்தனைப் போட்டுச் சதுராடி வாழ்கின்றார்! சமுதாயச் சாக்கடையில் தன் பதவிக் கப்பலினை அமுதாகச் செலுத்தி ஆலவட்டம் போடுகின்றார்!…
ஆற்றல் மிகுந்த அருங்கவிஞர் வா.மு.சேதுராமன் 32 – வல்லிக்கண்ணன்
(ஆற்றல் மிகுந்த அருங்கவிஞர் வா.மு.சேதுராமன் 31 தொடர்ச்சி) ஆற்றல் மிகுந்த அருங்கவிஞர் வா.மு.சேதுராமன் 32 உலகத்தில், அன்றாட நடைமுறையில் காணப்படுகிற முரண்பாடுகள் கவிஞர் உள்ளத்தில் தைக்கின்றன. அந்த உறுத்தல் அவரது உணர்வில் சூடேற்றுகிறது. சீற்றமாகச் சொற்கள் கொதித்து வெடிக்கின்றன. இதோ ஓர் எடுத்துக்காட்டு: உண்ட சோறு செரிக்காத திருடர்க் கெல்லாம் உபசரணை செய்கின்றீர் உண்டிச் சாலை கொண்டு கூட்டிச் செல்கின்றீர் வாங்கிப்போட்டுக் குடல் நிரப்பி ஆனந்தம் அடைகின்றோரே அந்தோ திண்டாடும் ஏழைமகன் விடுதி வாசல் தெருவோரம் நின்றானே கவனித்…
ஆற்றல் மிகுந்த அருங்கவிஞர் வா.மு.சேதுராமன் 31 – வல்லிக்கண்ணன்
(ஆற்றல் மிகுந்த அருங்கவிஞர் வா.மு.சேதுராமன் 30 தொடர்ச்சி) ஆற்றல் மிகுந்த அருங்கவிஞர் வா.மு.சேதுராமன் 31 அஞ்சி அஞ்சி அயர்ந்து நெகிழ்ந்து பஞ்சைபோல் வாழும் பண்பு வேந்தர்கள் என்றும் சொல்லி, இவர் பெரும் அறிவை இந்நாடு இயக்கினால், ‘தவம் வென்றது போல்தான் வரும் நலமே’ என்று கருத்துத் தெரிவிக்கிறார். பொதுவாக, மேடை மீது நின்று நீட்டி முழக்கிப் பெரும் பேச்சுகள் பேசிக் களிப்பவர்கள்தாம் மிகுதியாக இருக்கிறார்கள். அந்தப் பேச்சைக் கேட்பவர்களோ கை தட்டி மகிழ்கிறார்கள். அந்தக் கரவொலி பேச்சாளர்களைக் கிறக்கத்தில் ஆழ்த்துகிறது. அவர்கள் செயல்திறன்…
ஆற்றல் மிகுந்த அருங்கவிஞர் வா.மு.சேதுராமன் 30 – வல்லிக்கண்ணன்
(ஆற்றல் மிகுந்த அருங்கவிஞர் வா.மு.சேதுராமன் 29 தொடர்ச்சி) ஆற்றல் மிகுந்த அருங்கவிஞர் வா.மு.சேதுராமன் 30 சிறிதளவு உரிமை கிடைத்தால், விடைத்துக் கத்தும் இயல்பினர், அடிமைப்படுத்தினால் அடங்கி வாழும் பண்பினர், தடம் புரண்டலையும் தறுதலைக் குட்டிகள் என்றெல்லாம் வருணிக்கிறார் கவிஞர். மக்கள் மக்களாய் வாழ மக்களே தக்க தீர்ப்பைத் தருவரோ என்றும் எண்ணுகிறார். எழுத்தாளர்கள் பற்றி மீண்டும் சொல் சாட்டை சொடுக்குகிறார் பெருங்கவிக்கோ. ‘ஏற்று வளர்ப்பதே வாழ்நா ளெல்லாம் பயிலும் நெறியாய்ப் பாரில் வாழ்பவர் உயிலில்* ஒருவர்க்கு உரிமை செய்தல் போல் அயில்வேல்…
ஆற்றல் மிகுந்த அருங்கவிஞர் வா.மு.சேதுராமன் (24) – வல்லிக்கண்ணன்
[ஆற்றல் மிகுந்த அருங்கவிஞர் வா.மு.சேதுராமன் (23) தொடர்ச்சி)] ஆற்றல் மிகுந்த அருங்கவிஞர் வா.மு.சேதுராமன் (24) இருள் மூடும் தமிழகத்தில் அருட்கதிராய் வந்து, மண்ணிலே மனிதகுலம் ஒன்றே என்று நல்மார்க்கத்தை அறிமுகம் செய்த வள்ளலாரை விதவிதமாய்ப் போற்றி இசைக்க பெருங்கவிக்கோ அலுக்கவில்லை. வேறொரு இடத்தில் வள்ளலார் பெருமையை அவர் இவ்வாறு பாடுகிறார்: – இருட்சாதி மதத்தொழுநோய் இவ்வுலகம் முற்றும் இவன்பெரியன் நான்பெரியன் என்பதன்றிவேறு அருட்தன்மை எல்லேரர்க்கும்.காட்டுவதாய் இல்லை அவரவர்கள் தம்பெயர்க்கே அதர்மங்கள் கண்டார் பொருட்தன்மை பெரிதல்ல புண்ணியங்கள் அல்ல பூமியுள்ள மனிதரெல்லாம் மதங்களாலே பிரிந்தே மருட்தன்மை…
ஆற்றல் மிகுந்த அருங்கவிஞர் வா.மு.சேதுராமன் (23) – வல்லிக்கண்ணன்
[ஆற்றல் மிகுந்த அருங்கவிஞர் வா.மு.சேதுராமன் (22) தொடர்ச்சி] ஆற்றல் மிகுந்த அருங்கவிஞர் வா.மு.சேதுராமன் (23) மதம்வேண்டாம் சாதிவேண்டாம் மார்க்கம் ஒன்றே மனிதருக்குள் உலகத்தில் இருந்தால்போதும் கதகதப்பாய்க் குளிர்காய அமைத்தார் கீழ்மைக் கயவர்கள்தாம் சாதிமதச் சமயச் சண்டை! பேதமில்லை பிரிவில்லை பிரிவால்.வையப் பட்டினிகள் ஒழியவில்லை! பின்ஏன் இந்த இதமில்லா மதப்பிரிவு எண்ணிப் பாரீர் எல்லாரும் மனிதமதம் உரிமை ஒன்றே! என்றெல்லாம் வியத்தகுநல் கருத்தைச் சொன்ன ஈரமிகு வள்ளலாரின் கொள்கை பற்றி நன்றி யுடன் இவ்வையம் சென்றி ருந்தால் நாசங்கள் நலிவேது? பூமித ன்னில் கொன்றொழிக்கும்…
ஆற்றல் மிகுந்த அருங்கவிஞர் வா.மு.சேதுராமன் (22) – வல்லிக்கண்ணன்
[ஆற்றல் மிகுந்த அருங்கவிஞர் வா.மு.சேதுராமன் (21) தொடர்ச்சி] ஆற்றல் மிகுந்த அருங்கவிஞர் வா.மு.சேதுராமன் (22) மதங்கள் சாதி மடமை இன்றி மார்க்கம் கண்ட தமிழர்கள்-பின்னே விதந்து பிறரின் மதத்தில் சென்ற, வினைகள் மாற்றப் புறப்பட்டேன் என நாவலிக்கிறார் பெருங்கவிக்கோ. அறமும் மறமும் ஆன்ற ஒழுக்கமும், உண்மை ஆக்க நெறியும், ஆண் பெண் சமமும், திறமுடன் சங்கக் காலத்தின் முன்பே தமிழர் தேர்ந்த வாழ்க்கை முறையாகும். என்று கவிஞர் அறிவுறுத்துகிறார். இம்மதம் அம்மதம் எம்மதம் சேரினும்-நம்மின் இனம்தமிழ் மொழி தமிழ் என்றே பாடு: தம்மதம்…
ஆற்றல் மிகுந்த அருங்கவிஞர் வா.மு.சேதுராமன் (21) – வல்லிக்கண்ணன்
(ஆற்றல் மிகுந்த அருங்கவிஞர் வா.மு.சேதுராமன் (20) தொடர்ச்சி) ஆற்றல் மிகுந்த அருங்கவிஞர் வா.மு.சேதுராமன் (21) வீண் சண்டை வேண்டாம் விவேகமில்லா மதம் வேண்டாம். எல்லா மதங்களிலும் இருக்கின்ற நற்கருத்தை நல்நோக்கத்தோடு நாமெல்லாம் ஏற்றே மனிதர்கள் ஒற்றுமையால் மன்பதையில் வாழ்வதற்கு இனி ஒருவகை செய்வீர் என்றுதான் கேட்கின்றேன்! வழிவகை என்னவென்று வகையறிந்து காண்கையிலே கழிகொள்கை நீக்கிக் காரிருள் ஒளியாக சமனிதமதம் என்ற ஒரேமதம் உலகில் ஏற்படுத்திப் புனிதம் அடைவோம் போற்றிப்புகழ் அடைவோம்என ஆசையாய்க் கூறுகின்றேன் அழைக்கின்றேன் மனத்துணிவாய் என்று பெருங்கவிக்கோ தன் எண்ணத்தை…
ஆற்றல் மிகுந்த அருங்கவிஞர் வா.மு.சேதுராமன் (20) – வல்லிக்கண்ணன்
[ஆற்றல் மிகுந்த அருங்கவிஞர் வா.மு.சேதுராமன் (19) தொடர்ச்சி] ஆற்றல் மிகுந்த அருங்கவிஞர் வா.மு.சேதுராமன் (20) 6. மதங்களைச் சாடும் சிந்தனை வேகம் உள்ளத்தில் பெருக்கெடுக்கும் உணர்வின் ஊற்றுக்களாகப் பக்திப் பாடல்கள் பாடியுள்ள பெருங்கவிக்கோ முழுக்க முழுக்க ஆத்திகக் கவிஞர் அல்லர். சிந்தனை வேகம் பொங்கிப் பாயும் சுடர் அறிவுக் கவிதைகளை மதங்களைச்சாடியும், போலிமதவாதிகளை வன்மையாகக் கண்டித்தும் அவர் பாடியிருக்கிறார். இவர் ஒரு நாத்திகரோ என்ற மயக்கத்தை உண்டாக்கும் அவற்றை மட்டுமே படிக்க நேர்ந்தால். கவிஞரை நன்கறிந்த கவிக்கொண்டல் மா. செங்குட் டுவன் இது…